பலருக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். அதிலும் குறிப்பாக காலையில் சிறுநீர் நுரை நுரையாக பொங்கி காணப்படும். அதே போல் ஒரு சிலருக்கு சிறுநீர் கழிக்கும் போது வெள்ளை வெள்ளையாக போகும். இப்படி சிறுநீர் வர காரணம் நம் உடலில் புரோட்டின் குறைய ஆரம்பிக்கிறது என்று அர்த்தம். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால், ஒரு பாட்டிலில் சிறுநீரை பிடித்து ஒரு இரவு வையுங்கள். மறுநாள் காலை எடுத்து பார்க்கும் போது உங்களது சிறுநீர் பாட்டிலின் கீழ் பகுதியில் வெள்ளையாக தேங்கி இருக்கும் பட்சத்ததில் உங்கள் உடலில் புரோட்டின் வெளியேற ஆரம்பிக்கிறது என்று அர்த்தம்.
மேலும் படிக்க: குடலில் ஒட்டி உள்ள நாள்பட்ட கழிவுகளை ஒரே இரவில் வெளியேற்ற உதவும் கடுக்காய் பொடி தண்ணீர்
உங்கள் சிறுநீர் இவ்வாறு மாறினால் உடனடியாக மருத்துவர்த்துவரை அணுகுங்கள்.இவ்வாறு தொடர்ந்து சிறுநீரில் புரோட்டின் வெளியேறும் போது உங்கள் உடல் தானாகவே குறைய ஆரம்பிக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் சிறிது தண்ணீர் குடித்த உடனே சிறுநீர் வெளியேற ஆரம்பிக்கும். மேலும் அடிகடி சிறுநீர் கழிக்க தோன்றும். இவர்களுக்கு சக்கரை நோய், கொழுப்பு கல்லிரல் மற்றும் புரோட்டின் குறைபாடு, நரம்பு பிரச்சனை, சிறுநீரக செயலிழப்பு தொடர்ச்சியாக ஏற்படும்.
முடி வளர்ச்சியிலிருந்து எலும்புகள் மற்றும் நகங்கள் உருவாவது வரை அனைத்திலும் புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது. இவை தவிர, புரதம் உடலில் பல முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது, இது இல்லாமல் மனித உடல் சரியாகச் செயல்பட முடியாது. இது உடலை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கவும் செயல்படுகிறது.
கொழுப்பு கல்லிரலால் சிறுநீர் நுரையாக வெளியேறுபவர்கள் கரிசலாங்கண்ணி சிறந்த மருந்தாகும்.கரிசலாங்கண்ணியை பொடியாக எடுத்துகொள்ளுங்கள். மஞ்சள் கரிசலாங்கண்ணி பொடி, கிழாநெல்லி, கரிசலாங்கண்ணி லேகியம் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துகொள்ளும் போது அது கொழுப்பு கல்லிரலை சரிசெய்யும்.
சக்கரை நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் நுரையாக துர்நாற்றத்துடன் வெளியேறும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் காலை 4 கொய்யா இலையை 1/2லி தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து 1/2 டம்ளர் ஆக வற்றிய பின் அதை குடித்து வரவும். இவர்களுக்கு சக்கரை நோய் குறைய ஆரம்பிக்கும் மற்றும் சிறுநீர் நுரையாக வெளியேறுவது மாறும், மற்றும் மருதாணி இலையை தினமும் தண்ணீரில் காய்ச்சி குடிக்கவும்.
கிட்னி பிரச்சனை உள்ளவர்களுக்கு உடலில் புரோட்டின் வேகமாக குறைய ஆரம்பிக்கும். அதிக மாத்திரைகள் எடுத்துகொள்பவர்களுக்கு கிட்னி பிரச்சனைகள் அதிகரிக்கும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் சிவப்பு முள்ளங்கியை சிறு துண்டுகளாக நறுக்கி நிழலில் நன்கு காய வைத்து பின் ஒரு நாள் வெயிலில் காய வைத்து நன்கு காய வைத்து பொடியாக அரைத்து வைத்து கொள்ளவும். பின் அதனை தினமும் காலை 1/2 லி தண்ணீரில் சேர்த்து கூழ் போல் கிண்டி எடுத்துகொள்ளுங்கள்.
சிக்கன், முட்டை, புரோட்டின் அதிகம் உள்ள உணவுகளை போன்றவற்றை தவிர்த்துவிடுங்கள், ஏனெனில் புரோட்டின் உணவுகளை எடுத்துகொள்வதால் சிறுநீர் அடிக்கடி வெளியேறும். ஒரு நாளைக்கு லிட்டர் கணக்கில் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறி கொண்டே இருந்தால் உடலில் உள்ள நல்ல புரத சத்துகளும் சிறுநீர் வழியாக வெளியேறி உடல் எடை குறைய தொடங்கும். இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் படிக்க: ஆசன வாயிலில் நெளியும் குடல் புழுக்களை ஒரே இரவில் மலத்தில் வெளியேற்ற சூப்பர் டிப்ஸ்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]