காலம் காலமாக விளக்கெண்ணெயை பல தேவைகளுக்காக பயன்படுத்தி வருகிறோம். இதில் புரதம், வைட்டமின் E, ஒமேகா 6, ஒமேகா 9 உட்பட ஏராளமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன. இதில் உள்ள நல்ல கொழுப்புகள் சருமத்திற்கு இயற்கையான பொலிவை கொடுக்கின்றன. இதைத் தவிர விளக்கெண்ணெயில் உள்ள ஆன்டி ஃபங்கள் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் காரணமாக, ஒரு சில வீட்டு வைத்தியத்திலும் பயன்படுத்தப்படுகிறது. விளக்கெண்ணெயின் நன்மைகளை ஒவ்வொன்றாக தெரிந்து கொள்வோம் வாருங்கள்.
விளக்கெண்ணெய் மசாஜ் செய்வதற்கு ஏற்றது. உடலின் இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் உடல் பலவீனத்தை போக்கவும் விளக்கெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம். விளையாட்டு, நடைபயிற்சி அல்லது உடற்பயிற்சிக்குப் பிறகு வசதியாக உணர்ந்தால் விளக்கெண்ணெயை கொண்டு மசாஜ் செய்யலாம். இது மூட்டு வலியில் இருந்தும் நிவாரணம் பெற உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: சிறுநீரக கல் வராமல் தடுக்க, இந்த 4 குறிப்புகளை பின்பற்றினால் போதும்!
விளக்கெண்ணெய் இயற்கையான மலமிளக்கியாக செயல்படுகிறது. மலச்சிக்கலில் இருந்து விடுபட ஒரு கிளாஸ் பாலுடன் ஒரு டீஸ்பூன் விளக்கெண்ணையை கலந்து இரவு தூங்க செல்வதற்கு முன் குடிக்கலாம். இது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இந்த வீட்டு வைத்தியம் வயிற்றை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும்.
நோய் தொற்றுகளை தடுக்கவும், உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைத்துக் கொள்ளவும் விளக்கெண்ணெய் உதவும். மேலும் விளக்கெண்ணெயை தினமும் முகத்திற்கு பயன்படுத்தி வந்தால் பாக்டீரியாவால் ஏற்படும் சரும தொற்றுகளை தடுக்கலாம். முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளை நீக்கி, சரும அழகை பராமரிக்க விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம்.
ஸ்ட்ரெச் மார்க்குகளை குறைக்க விளக்கெண்ணெயை பயன்படுத்துவது சிறந்தது. தினமும் குளிக்க செல்வதற்கு முன் விளக்கெண்ணெயை கொண்டு 15-20 நிமிடங்களுக்கு மசாஜ் செய்து வந்தால் ஸ்ட்ரெச் மார்க்கை நீக்கலாம். இது சருமத்தில் ஏற்படும் வறட்சி போன்ற சரும பிரச்சனைகளையும் நீக்க உதவும்.
பொடுகு தொல்லையால் அவதிப்படுபவர்களுக்கு விளக்கெண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது புது முடியின் வளர்ச்சிக்கும் உதவும். மேலும் இதில் உள்ள ஆன்டி வைரல் பண்புகள் உச்சந்தலையில் ஏற்படும் பொடுகு போன்ற தொற்றுகளை போக்க உதவுகின்றன.
தலைவலியில் இருந்து நிவாரணம் பெற விளக்கெண்ணெயை பயன்படுத்தலாம். இதற்கு முதலில் விளக்கெண்ணெயை சூடாக்கி. கை பொறுக்கும் சூட்டில் இருக்கும்பொழுது, இந்த எண்ணெயைக் கொண்டு உங்கள் உச்சந்தலைக்கு மசாஜ் செய்யலாம். இது தலைவலியை போக்குவதோடு மட்டுமின்றி, உச்சந்தலையில் ஏற்படும் தொற்றுகளையும் தடுக்க உதவும். இவ்வாறு தலைமுடிக்கு விளக்கெண்ணெயை பயன்படுத்தும் பொழுது எண்ணெய் பசையை நீக்க சற்று கடினமாக இருக்கலாம். எனவே வாரத்திற்கு ஒரு முறை இந்த குறிப்பினை முயற்சி செய்வது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: எடை குறைய, சரும பொலிவு பெற ஒரே ஒரு ஸ்பூன் சோம்பு போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]