இந்தியா மட்டுமின்றி உலக அளவில் கீரைகள் பிரபலமான உணவாக இருந்து வருகிறது. குழந்தைகளுக்கு மட்டுமின்றி ஒரு சில பெரியவர்களுக்கும் கீரை சாப்பிடுவதில் விருப்பம் இருப்பதில்லை. ஆனால் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.
கீரையை கடைவது, பொரியல் செய்வது போன்ற சராசரியான உணவுகளில் இருந்து மாறுபட்டு இன்று கீரைகளைக் கொண்டு பல்வேறு விதமான உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு சிலர் கீரையை சாலட் அல்லது ஸ்மூத்தியிலும் சேர்த்து கொள்கிறார்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இரத்த சோகை முதல் சர்க்கரை நோய் வரை பல நோய்களுக்கு தீர்வு தரும் கறிவேப்பிலை
கீரையில் கொலஸ்ட்ரால் அளவுகள் மிகவும் குறைவாகவும், நியாசின், துத்தநாகம் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாகவும் உள்ளன. இதில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் A, C, E மற்றும் K உடன் தியாமின், வைட்டமின் B6, ஃபோலேட், கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற சத்துக்களும் நிறைந்துள்ளன. இது போன்ற ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் ஒரே காய்கறியில் இருந்து பெறுவது மிகவும் அரிது. அந்த வகையில் கீரைகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
இதில் ஏராளமான ஃபிளாவனாய்டுகள் எனப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதன் மூலம் உங்கள் உடலை ஃப்ரீ ரேடிக்கல்ஸ் சேதத்தில் இருந்து பாதுகாக்கிறது. கீரை உங்கள் இருதய அமைப்புக்கு மிகவும் ஆரோக்கியமானது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.
கீரையில் ஏராளமான ஃபிளாவனாய்டு எனும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும். உங்கள் மூளையை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கவும், நினைவாற்றல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கீரைகள் சாப்பிடலாம்.
கீரையில் மிகக் குறைந்த அளவு கலோரிகள் மட்டுமே உள்ளன. இதனுடன் கீரையில் உள்ள கொழுப்பில் கரையக்கூடிய நார்ச்சத்து உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இவை உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருப்பதுடன், செரிமானத்தையும் மேம்படுத்தும்.
உணவில் போதுமான நார்ச்சத்து இல்லாத நிலையில் மலச்சிக்கல் போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். இந்நிலையில் நார்ச்சத்து நிறைந்த கீரைகள் மலச்சிக்கலில் இருந்து விடுபடவும் பெரிதும் உதவும். இதனுடன் கீரையில் உள்ள ஊட்டச்சத்துக்களும் கொலஸ்ட்ராலை குறைக்கும் பண்புகளும் எடை இழப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இவை உங்கள் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்து உடல் எடையை குறைக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம்: தலைவலி, அசிடிட்டி, வாயு இந்த மூன்று பிரச்சனைக்கும் ஒரே டீ போதும்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]