வயிற்றுப்போக்கு ஒரு பொதுவான பிரச்சனையாகவே இருந்தாலும், அது ஏற்படுத்தும் அசௌகரியத்தையும், சிரமத்தையும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வயிற்றை புரட்டி எடுத்து உடலை அசதியாக்கிவிடும். இதை சரி செய்ய பல சிகிச்சைகள் இருந்தாலும், இயற்கையான முறையில் தீர்வுகான விரும்புபவர்கள் இப்பதிவில் பகிரப்பட்டுள்ள ஆயுர்வேத தீர்வுகளை முயற்சி செய்யலாம்.
உங்களுக்கு பரம்பரை ரீதியாகவோ அல்லது தொடர்ச்சியாகவோ வயிற்றுப்போக்கு பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம். வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதற்கான சில எளிய குறிப்புகளை ஆயுர்வேத நிபுணரான அனிதா குப்தா அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: யாரெல்லாம் வெண்டைக்காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா?
காலம் காலமாக வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த தயிர் சாதம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தயிர் ஒரு சிறந்த புரோபயோாட்டிக் உணவாகும். இது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. இதை சாப்பிடுவதால் செரிமானம் மற்றும் குடல் செயல்பாடு மேம்படும். மேலும் சாதம் மலத்தை இறுக்கமாக்குகிறது. தயிர் மற்றும் சாதத்தை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் பொழுது மனநிலை மற்றும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். இது உங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
வெந்நீர் குடிப்பது குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது. இது வயிற்றுப்போக்கை குணப்படுத்தவும் வராமல் தடுக்கவும் உதவுகிறது. வெந்நீர் மலச்சிக்கல் பிரச்சனையை தடுக்கும். இது மலத்தை மெம்மையாக்கி, உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகிறது.
ஆய்வுகளின் படி இளநீரை சிறிய அளவுகளில் நாள் முழுவதும் பலமுறை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தலாம். இதில் எலக்ட்ரோலைட்டுகள் நிறைந்துள்ளன. இளநீரை குடித்து வந்தால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துவதுடன் உடலில் ஏற்படும் நீர் இழப்பையும் தடுக்கலாம்.
உலகெங்கிலும் உள்ள மக்கள் பலரும் வயிற்றுபோக்கை சரி செய்ய இஞ்சியை பயன்படுத்துகின்றனர். இது செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும், உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது. இது குடலில் உள்ள ஆரோக்கியமற்ற பாக்டீரியாவை அகற்றி, வயிற்றுபோக்கை கட்டுப்படுத்துகிறது. இஞ்சி சாறு அல்லது டீயை தேனுடன் கலந்து குடித்து வந்தால் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தலாம். இது வயிற்றுக்கு போக்கை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்கிறது. டீ குடிக்க விருப்பம் இல்லாதவர்கள் துருவிய இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
ஃபாஸ்ட் ஃபுட் அல்லது ஜங்க் ஃபுட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான ஒரு முக்கிய காரணமாகும். இது போன்ற உணவுகள் குடலின் PH அளவை பாதிக்கின்றன. இதனால் தொற்றுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்க கூடும். இதன் விளைவாக மோசமான செரிமானம், வயிற்றுப்போக்கு அல்லது வாந்தி போன்ற நிலைகள் ஏற்படலாம்.
உடல் எடையை பராமரிக்கவும், மலச்சிக்கலை தவிர்க்கவும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இது செரிமானம் தொடர்பான பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமைகிறது.
வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த முடியாத நிலையில் உடனடியாக மருத்துவரின் ஆலோசனையை பெற வேண்டும்.
இந்த பதிவும் உதவலாம்: ஆயுர்வேத மூலிகையான சீந்திலை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]