இன்றைய வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால், வயிற்றுப் புண்கள் அநேகரிடத்தில் பரவலாக காணப்படுகின்றன. வயிற்றுப் புண் வலியுடன் கூடியது மட்டுமல்ல, அது மிகவும் ஆபத்தானதும் கூட. இந்த சிக்கலைக் கண்டறிந்த உடனேயே சிகிச்சையைத் தொடங்குவது மிகவும் முக்கியம், இல்லையெனில் அது மற்ற பிரச்னைகளுக்கு வழி வகுத்து விடும்.
இதுவும் உதவலாம் :ஆயுர்வேதத்தின் படி பழங்களை இப்படி தான் சாப்பிடனுமாம்
வயிற்றுப் புண் என்றால் என்ன?
வயிற்றில் ஏற்படும் காயங்கள் அல்லது புண்கள் மருத்துவ மொழியில் பெப்டிக் அல்சர் எனப்படும். வயிற்றில் மியூகஸ் இன் மென்மையான ஒரு அடுக்கு உள்ளது, இது பெப்சின் மற்றும் ஹைட்ரோகுளோரிக் அமிலத்திலிருந்து வயிற்றின் உள் புறணியைப் பாதுகாக்கிறது. பொதுவாக உணவுக்குழாய், வயிறு மற்றும் சிறுகுடலின் மேல் பகுதியில் ஏற்படும். ஹெலிகோபாக்டர் பைலோரி அல்லது எச்.பைலோரி போன்ற பாக்டீரியாக்களால் பெரும்பாலான புண்கள் ஏற்படுகின்றன என்று புதிய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். இது போன்ற புண்கள் ஏற்படும் பிரச்சனைக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அது ஒரு அபாயகரமான பிரச்சனையாக மாறி விடும். இந்த பாக்டீரியாவைத் தவிர, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையும் ஓரளவு அல்சருக்குக் காரணமாகும். இந்த நோயைத் தவிர்க்க சில வீட்டு வைத்தியங்களை நாம் இங்கு காணலாம் :
வயிற்றுப் புண் அறிகுறிகள்
வயிற்றில் கடுமையான வலி ஏற்படுவது ஒரு பொதுவான அறிகுறியாகும், இது தவிர, இரவில் வயிற்றில் எரிச்சல் உணர்வு, இரத்த வாந்தி, மலத்தின் நிறம் கருமையாதல், குமட்டல், திடீரென எடை குறைவது அல்லது பசியின்மை ஆகியவை காணப்படுகின்றன.
குளிர்ந்த பாலின் அதிசயம்
பால் குடிப்பதால் இரைப்பையில் அமிலம் உண்டாகிறது என்றாலும், அரை கப் குளிர்ந்த பாலில் அரை எலுமிச்சைப் பழத்தைப் பிழிந்து குடித்தால் வயிற்றுக்கு நிவாரணம் கிடைக்கும். அல்லது அல்சர் வந்தால், சிறிது குளிர்ந்த பாலில் சம அளவு தண்ணீர் கலந்து கொடுத்தால், சில நாட்களில் நிவாரணம் கிடைக்கும்.
பேரிக்காய்
பேரிக்காயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்துள்ளன, இது வயிற்று புண்ணின் அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. இது ஹெச்.பைலோரி நோய்த்தொற்றையும் தடுக்கிறது. இதில் நார்ச்சத்து உள்ளது, இதன் மூலம் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைக்கிறது. பேரிக்காய்களை தொடர்ந்து உட்கொள்பவர்களுக்கு சிறுகுடல் புண் ஏற்படும் அபாயம் கணிசமாகக் குறைகிறது.
பாதாம் பருப்பை உட்கொள்ளலாம்
வயிற்றுப் புண் உள்ளவர்கள் பாதாம் பருப்பை உட்கொள்ள வேண்டும். இது தவிர பாதாமை அரைத்து பாலில் சேர்த்து காலை மாலை என இரு வேளைகளிலும் குடித்து வர வயிற்றுப்புண் குணமாகும்.
பச்சை மற்றும் பழுத்த வாழைப்பழங்கள்
வாழைப்பழம் வயிற்றுப்புண் வராமல் தடுக்கிறது. வாழைப்பழம் வயிற்று அமிலத்தை குணப்படுத்தும் ஆன்டி பாக்டீரியா பண்புகளைக் கொண்டுள்ளது. வயிற்று புண் நோயாளிகள், பழுத்த மற்றும் பழுக்காத வாழைப்பழங்களை சாப்பிடுவதால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
பசு நெய் நிவாரணம்
வயிற்று புண் நோயாளிகளுக்கு பசும்பாலில் இருந்து தயாரிக்கப்படும் நெய்யைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். பசும்பாலில் ஒரு ஸ்பூன் மஞ்சளை கலந்து தினமும் குடித்து வர, எந்த விதமான புண்ணாக இருந்தாலும் 3 முதல் 6 மாதங்களில் குணமாகும்.
குடல் பாக்டீரியாவுக்கு தேன் தரும் தீர்வு
காலை உணவுக்கு முன் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட வேண்டும். தேன் பாக்டீரியாவை எதிர்த்துப் போராடுகிறது, நீர் சத்து குறைதலை தடுக்கிறது மற்றும் உடலில் ஈரப்பதத்தை பராமரிக்கிறது. இது திசுக்களை சேதமடையாமல் பாதுகாக்கிறது மற்றும் புதிய திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், தேனில் குளுக்கோஸ் பெராக்சைடு உள்ளது, இது வயிற்றில் உள்ள பாக்டீரியாக்களை அழிக்கிறது.
முட்டைக்கோஸ்
வயிற்றின் pH இன் சமநிலையின்மையால் அல்சர் ஏற்படுகிறது இது அமினோ அமிலமான குளுட்டமைனையும் கொண்டுள்ளது என்று கூறுகின்றனர், இது செரிமான மண்டலத்தின் மியூகோசல் புறணியை பலப்படுத்துகிறது மற்றும் வயிற்றை நோக்கி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது புண்கள் வராமல் தடுப்பது மட்டுமின்றி, புண்களை வேகமாக குணப்படுத்துகிறது. முட்டைக்கோஸ் மற்றும் கேரட்டை சம அளவு எடுத்து ஜூஸ் செய்து, காலை மாலை ஒரு டம்ளர் இந்த சாற்றை குடித்து வந்தால் வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
பெருங்காயத்தின் மந்திரம்
பெருங்காயம் வயிற்றுக்கு எவ்வளவு நன்மை பயக்கும் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. சமையலறையில் இருக்கும் இந்த மசாலா வயிற்றுப் புண்களுக்கும் நன்மை பயக்கும்.
இதுவும் உதவலாம் :தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்
அவல்
அவல் வயிறு புண்ணுக்கு மிகவும் பயனுள்ள வீட்டு வைத்தியம். அவல் மற்றும் பெருஞ்சீரகம் ஆகியவற்றை சம அளவில் கலந்து பொடி செய்து, 20 கிராம் பொடியை 2 லிட்டர் தண்ணீரில் காலையில் கரைத்து, இரவு வரை முழுமையாக குடிக்கவும். இந்த கரைசலை காலையில் தவறாமல் தயாரித்து, குடிக்கத் தொடங்குங்கள்.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation