ஆயுர்வேதத்தின் படி பழங்களை இப்படி தான் சாப்பிடனுமாம்

பழங்களை சாப்பிட வேண்டிய வழி முறைகளை பற்றி ஆயுர்வேதம் என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்வோம்...

 

ayurvedic rules to eat fruits

சில நேரங்களில் மருத்துவர்கள் நமது ஆரோக்கியத்தை மேலும் ஆரோக்கியமாக வைத்து கொள்ள பல்வேறு வகையான பழங்களை உட்கொள்ள சொல்கிறார்கள். பழங்களைத் தவிர, அதன் சாறுகளும் ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஆப்பிள், வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை, பிளம் போன்ற பல வகையான பழங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. ஆனால், எந்தப் பழத்தை எப்போது சாப்பிட வேண்டும் அல்லது எந்தப் பழத்தை மற்ற பழங்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? ஒருவேளை, இந்த கேள்விக்கு உங்களிடம் பதில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் ஆயுர்வேத மருத்துவர் வரலக்ஷ்மி பழங்களை சாப்பிடுவதற்கான விதிகள் குறித்து சில தகவல்களைத் தருகிறார், எனவே அவற்றை கேட்டு தெரிந்துகொள்வோம்

பழம் சாப்பிட ஏற்ற நேரம்

சொல்லப்போனால், பழங்களை உண்பதற்கு இது தான் ஏற்ற நேரம் என்று எதுவும் இல்லை. எப்போதெல்லாம் ஒருவர் எளிதாக சாப்பிட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் பழங்களை சாப்பிடலாம். ஆனால், டாக்டர் வரலக்ஷ்மியின் கூற்றுப்படி, வெறும் வயிற்றில் பழங்களை சாப்பிடுவது தான் பழங்கள் சாப்பிட சிறந்த நேரம் ஆகும். அதாவது, காலையில் எழுந்ததும், குளித்து முடித்த பிறகு, சில பழங்களைச் சாப்பிடலாம். இது தவிர, டாக்டரை பொறுத்தவரை, மதியம் ஏதாவது சாப்பிட்ட பிறகும் பழங்களை சாப்பிடலாம்.

can we eat fruits in empty stomach

சிட்ரஸ் பழங்கள் மற்றும் பால் பொருட்கள்

புளிப்புப் பொருளை எதனோடும் கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என்பது கிட்டத்தட்ட நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். அதேபோல், ஆயுர்வேதத்தின் விதிமுறைப்படி, புளிப்பு பழங்களை பால் பொருட்களுடன் கலந்து சாப்பிடும் பழக்கம் தவறானது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஏதேனும் புளிப்பு பழத்தை தயிருடன் சாப்பிடப் போகிறீர்கள் என்றால், இந்த தவறை நீங்கள் தவிர்த்து விட வேண்டும்.

பழங்களை கலந்து கொள்ளலாம்

வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு பழங்களை உட்கொள்ளும் பலர் உள்ளனர், இருப்பினும், இதுவும் சரியானதே. ஆனால், டாக்டர் வரலட்சுமி கூறுகையில், இரண்டு பழங்களின் சுவை ஒரே மாதிரியாக இருந்தால், அவற்றை கலந்து சாப்பிடலாம். இருப்பினும், இனிப்பு பழங்களை புளிப்பு பழங்களுடன் கலந்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுவும் உதவலாம் :வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்

which is the best time to eat fruits

பழுத்த பழம் மற்றும் பச்சை பழம்

பழுத்த பழங்கள் பச்சை பழங்களை விட ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை தருவது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பழுத்த பழங்கள் பச்சை பழங்களை விட எளிதில் ஜீரணமாகிவிடுகிறது. எனவே மிகவும் பழுத்த பழங்களை உட்கொள்வதே நல்லது என்று கூறப்படுகிறது.

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.

Image Credit : Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP