சுவை மிகுந்த பேரீச்சம்பழம் இனிப்பு தேடலை குறைக்கும். மேலும் நன்மைகள் அதிகம் இருப்பதால், அவற்றை உங்கள் தினசரி உணவில் நிச்சயம் சேர்த்துக்கொள்ள விரும்புவீர்கள். தினமும் 3 பேரிச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகளை பற்றி பார்க்கலாம்.
பொட்டாசியம், பாஸ்பரஸ், கால்சியம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் பேரீச்சம்பழத்திலும் உள்ளது. எனவே பேரீச்சம்பழங்களை உண்பதால், எலும்புகள் வலுவடைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்களை எதிர்த்துப் போராட உடலுக்கு பலம் கிடைக்கிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.
இதுவும் உதவலாம் : பேரிச்சம் பழத்தை பாலில் ஊறவைத்து சாப்பிட்டால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா?
பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது மற்றும் நமது செரிமான மண்டலம் சரியான முறையில் செயல்பட நார்ச்சத்து தேவைப்படுகிறது. நார்ச்சத்து எடுத்துக்கொள்வதன் மூலம், மலச்சிக்கல் பிரச்சனை இல்லாமல் வயிறு சுத்தம் செய்யப்படுகிறது. தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடுபவர்களின் செரிமான அமைப்பு, பேரிச்சம்பழம் சாப்பிடாதவர்களை விட சிறப்பாக செயல்படுகிறது என்று பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் கண்டறியப்பட்டுள்ளது.
பேரீச்சம்பழம் சாப்பிடுவதால் வைட்டமின் B6 கிடைக்கிறது, இது உடலில் செரோடோனின் உருவாக்க உதவுகிறது. செரோடோனின் ஒரு நல்ல மனநிலையை பராமரிக்கிறது மற்றும் நோர்பைன்ப்ரைன் மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
பேரீச்சம்பழம் சாப்பிடுவது ட்ரைகிளிசரைடு அளவைக் குறைக்கிறது மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது, இவை இரண்டும் இதய நோய் மற்றும் ஆத்தரோஜெனீசிஸுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, பேரீச்சம்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் சத்து உள்ளது. இது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதோடு பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது என்று ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
பருவகால மாற்றங்களால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பேரீச்சம்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அன்றாட வாழ்வில் சுறுசுறுப்பாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பலமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, பருவகால மாற்றங்களால் உருவாகும் நோய்களுக்கு நீங்கள் ஆளாகமாட்டீர்கள்.
இதுவும் உதவலாம் :காலிபிளவரை உட்கொண்டு உடல் எடையை குறைக்க முடியுமா?
உடல் எடையைக் குறைக்க நீங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கலாம். ஆனால் அதில் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்றால், பேரீச்சம்பழத்தை தவறாமல் சாப்பிட வேண்டும். இதிலிருந்து கிடைக்கும் நார்ச்சத்து உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைவாக இருப்பது போல உணர வைக்கும். இது மட்டுமின்றி, பேரீச்சம்பழத்தில் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, வளர்சிதை மாற்றத்தை சிறப்பாக வைத்திருக்கும், இதனால் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]