World Brain Tumor Day 2023 : அதிகரிக்கும் மூளை கட்டியின் அபாயம், இந்நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்!

உலக மூளை கட்டி தினம் ஜூன் 8 அன்று அனுசரிக்கப்படுகிறது. மூளை கட்டியின் அறிகுறிகள் மற்றும் அதிகரிக்கும் வழக்குகளுக்கான காரணங்களையும் தெரிந்து கொள்வோம்…

brain tumor awareness world brain tumor day  for public

அடிக்கடி ஏற்படும் தலைவலி, குமட்டல், மங்கலான பார்வை மற்றும் உடல் சமநிலையின்மை ஆகியவை மூளை கட்டி போன்ற பெரிய பிரச்சனைகளின் அறிகுறியாகவும் இருக்கலாம். இது போன்ற அறிகுறிகளை புறக்கணிக்காமல் சரியான நேரத்தில் கண்டறிந்து மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். இல்லையேல் இது உயிருக்கும் ஆபத்து விளைவிக்கலாம். இன்றைய காலகட்டத்தில் தவறான வாழ்க்கை முறையால் மூளை கட்டியின் அபாயம் பெருமளவு அதிகரித்துள்ளது. இந்த நோய் குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 8 ஆம் தேதி உலக மூளை கட்டி அனுசரிக்கப்படுகிறது.

மூளையில் உள்ள ஒரு செல் அல்லது பல செல்கள் அசாதாரண வளர்ச்சி அடையும் பொழுது திசுக்களில் கட்டிகள் உருவாகின்றன. இந்த கட்டிகள் சாதாரண கட்டிகளாக இருக்கலாம் அல்லது வீரியம் நிறைந்த புற்றுநோய் கட்டிகளாகவும் இருக்கலாம். சில தீவிர நோய்களின் தாக்கத்தினால் மூளை கட்டிகள் உருவாகலாம். இதைத்தவிர மோசமான வாழ்க்கை முறையும் மூளை கட்டிகள் வருவதற்கான ஒரு முக்கிய காரணமாக அமைகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள், உணவில் பயன்படுத்தப்படும் ஒரு சில தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் மரபணு காரணங்களாலும் மூளை கட்டிகள் வரலாம். மூளை கட்டி வருவதற்கான காரணங்கள் இன்னும் உறுதியாக கண்டறியப்படவில்லை.

மூளைக கட்டியின் அறிகுறிகள்

world brain tumor day awareness

  • மூளை கட்டி உள்ள இடம் மற்றும் அதன் அளவை பொறுத்து அறிகுறிகள் மாறுபடலாம்.
  • காலையில் எழுந்தவுடன் தலைவலி
  • சுயநினைவின்மை
  • திடீர் வாந்தி
  • நடத்தை மாற்றம்
  • பேசுவதில் சிரமம்
  • எரிச்சல்
  • கண்பார்வை குறைபாடு
  • அறிவுத்திறன்களில் மாற்றம்
  • உடலின் ஏதேனும் ஒரு பகுதியில் பலவீனமாக உணர்தல்
  • அன்றாட வேலைகளில் குழப்பம்
  • வலிப்பு மற்றும் காது கேளாமை

மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளை உணர்ந்தால் தாமதிக்காமல் மருத்துவரை ஆலோசனை செய்ய வேண்டியது அவசியம்.

brain tumor causes and symptoms

தொடர் தலைவலி, வாந்தி, நடத்தையில் மாற்றம், மங்கலான பார்வை, பேசுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளைப் புறக்கணிக்காதீர்கள். மூளைக்கட்டி சரியான நேரத்தில் கண்டறியப்பட்டால், அதை திறம்பட குணப்படுத்த முடியும். அறுவைசிகிச்சை நுட்பங்கள், மரபணு கண்டுபிடிப்புகள் மற்றும் பல சிகிச்சைகள் மூலம் மூளைக் கட்டிகளுக்கு பாதுகாப்பான சிகிச்சைகளை பெறலாம்.

உலக மூளை கட்டி தினத்தை முன்னிட்டு, நாம் அனைவரும் மூளைக் கட்டி குறித்து கவனமாகவும், விழிப்புடனும் செயல்படுவோம். இந்நோய் பற்றிய விழிப்புணர்வுடன் மூளை கட்டியை எளிதாக எதிர்கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சிறுநீர் பாதை தொற்றில் இருந்து விடுபட உதவும் 5 வீட்டு வைத்தியங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP