PCOS என்பது பெண்களின் கருப்பையில் உருவாகும் நீர்க்கட்டிகளாகும். நீர்க்கட்டிகளால் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மன அழுத்தம், அதிகரிக்கும் பொறுப்புகள், மோசமான வாழ்க்கை முறை போன்ற பல காரணங்களினால் நீர்க்கட்டிகள் உருவாகலாம்.
நீர்க்கட்டிகளுக்கான சிகிச்சையை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில் மாதவிடாய் பிரச்சனைகள், உடல் பருமன், குழந்தையின்மை, தேவையற்ற முடி வளர்ச்சி, அதிகப்படியான முடி உதிர்தல், சர்க்கரை நோய் போன்றவற்றின் அபாயம் அதிகரிக்கலாம்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் நேரத்தில் கட்டாயம் இந்த விஷயங்களை செய்யாதீர்கள்
PCOS (பாலிசிஸ்டிக் ஓவரியன் சிண்ட்ரோம்) என்பது இனப்பெருக்க வயதுடைய பெண்களை பாதிக்கும் ஒரு பொதுவான நிலையாகும். இதனால் உடலில் ஆண்ட்ரோஜன் எனும் ஆண் ஹார்மோன் அதிகமாக உற்பத்தி செய்யப்படும். இது ஹார்மோன் சமநிலையின்மைக்கு வழிவகுக்கிறது. மேலும் ஹார்மோன் சமநிலையின்மையால் அதிக உதிரப்போக்கு, மன நிலை மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் நாட்களில் உடல் சூடு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். நீங்களும் நீர்க்கட்டியால் அவதிப்படுகிறீர்கள் என்றால், இப்பதிவில் பகிரப்பட்டு உள்ள ஆயுர்வேத குறிப்பு உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
நீர் கட்டிகளை சமாளிக்க உதவும் ஒரு அற்புத மூலிகையை பற்றி இப்பதிவில் பார்க்கப் போகிறோம். மிகவும் பழமை வாய்ந்த இந்த மூலிகை பெண்களுக்கு ஏராளமான நன்மைகளை தருகிறது.
மாதவிடாய் பிரச்சனைகளுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு மிகவும் நல்லது. இந்த மூலிகை ஹார்மோன் சமநிலையின்மையை சீராக்குகிறது. இக்காரணத்தினால் நீர்கட்டிகளின் சிகிச்சைக்கும் தண்ணீர் விட்டான் கிழங்கு பயன்படுத்தப்படுகிறது. நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை உணவியல் நிபுணர் லாவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
லாவ்னீத் பத்ரா அவர்கள் தண்ணீர் விட்டான் கிழங்கை பெண்களின் இனப்பெருக்கத்திற்கான டானிக் என குறிப்பிட்டுள்ளார். இதில் ஸ்டெராய்டல் சபோனின்கள், கிளைகோசைடுகள், ஆல்கலாய்டுகள், பாலிசாக்கரைடுகள், மியூசிலேஜ்கள் உட்பட 50 க்கும் மேற்பட்ட சேர்மங்கள் உள்ளன. இதில் உள்ள பயோ ஆக்டிவ் கூறுகள் அனைத்தும் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
இந்த ஆயுர்வேத மூலிகை ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், கருப்பையை பராமரிக்கவும் உதவுகிறது. இது புதிய நீர்க்கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கிறது மற்றும் நோய் சார்ந்த பிற அறிகுறிகளையும் குறைக்க உதவுகிறது. இதை எடுத்துக் கொள்வதால் மாதவிடாய் நாட்களில் உதிரப்போக்கும் சீராக இருக்கும்.
இந்த பதிவும் உதவலாம்: பிறப்புறுப்பில் ஏற்படும் ஈஸ்ட் தொற்றை பெண்கள் எவ்வாறு தடுக்கலாம்?
நீர்க்கட்டியால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு ஒரு அருமருந்து என்றே சொல்லலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]