herzindagi
image

சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் மற்றும் கருமையை நீக்கணுமா? இந்த அழகுக்குறிப்புகளைப் பின்பற்றுங்கள்!

முகத்தில் இறந்த செல்கள் அப்படியே தங்கிவிடுவதன் மூலம் சருமத்தில் முகப்பருகள், கரும்புள்ளிகள் போன்ற பல பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது.  
Editorial
Updated:- 2025-11-13, 22:10 IST

பெண்கள் என்றாலே அழகுக்கு மற்றொரு பெயர் என்று கூறலாம். ஆண்களைக் காட்டிலும் பெண்கள் எப்போதுமே முகத்தைப் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். இதற்காக அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் வீட்டிலேயே சில அழகுக்குறிப்புகளைப் பின்பற்றி முகத்தைப் பொலிவாக்க முயல்வார்கள். ஆனாலும் ஊட்டச்சத்துக் குறைபாடு, சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களாலும் சருமத்தில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. குறிப்பாக முகப்பருக்கள், கரும்புள்ளிகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடுகிறது. இவற்றை அப்படியே விட்டுவிடும் போது சருமம் பொலிவின்றி காணப்படும். இதற்கு ஸ்கரப்பிங் செய்வது சிறந்த தேர்வாக அமையும். இதற்காக கடைகளில் பிரத்யேக பொருட்கள் விற்பனையாகிறது. இருந்தப்போதும் எவ்வித கெமிக்கல் இல்லாமல் முகத்தைப் பொலிவாக்க வேண்டும் என்றால் வீட்டிலேயே சில ஸ்க்ரப்களைப் பயன்படுத்தலாம். இதோ அவற்றில் சில உங்களுக்காக.


சருமத்தைப் பொலிவாக்க உதவும் ஸ்கரப்கள்:

வால்நட் ஸ்க்ரப்:

முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை நீக்க வால்நட் ஸ்கரப் உதவியாக இருக்கும். ஒரு கைப்பிடி வால்நட் மற்றும் தேனை முதலில் எடுத்துக் கொள்ளவும். இதையடுத்து ஒரு மிக்ஸியில் வால்நட்டுகளை பொடியாக அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு சிறிய கிண்ணத்திற்கு மாற்றி இதனுடன் சிறிதளவு தேன் கலந்துக் கொள்ளவும். இதையடுத்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்யவும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும். சருமம் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

மேலும் படிக்க: உங்கள் உதடுகள் வறண்டு போவதை தடுக்க உதவும் இயற்கையான வீட்டு வைத்திய முறை

எலுமிச்சை மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்:

இயற்கையாகவே சருமத்தைப் பளபளப்பாக எலுமிச்சை சிறந்த தேர்வாக உள்ளது. எலுமிச்சை சாறுடன் சிறிதளவு நாட்டுச் சர்க்கரை சேர்த்து ஸ்க்ரப் போன்று தயார் செய்துக் கொள்ளவும். இதை முகத்தில் அப்ளை செய்து லேசாக மசாஜ் செய்யவும். பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவினால் போதும் . இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமத்திற்குப் பொலிவைத் தருவதோடு பல சரும பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது.

 


கிரீன் டீ மற்றும் சர்க்கரை ஸ்க்ரப்:

ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்ட கிரீன் டீயை வைத்து ஸ்கரப் செய்யலாம். கிரீன் டீ மற்றும் சர்க்கரையை சம அளவு எடுத்துக் கொண்டு ஸ்கரப் தயார் செய்துக் கொள்ளவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அப்ளை செய்யவும். அரை மணி நேரத்திற்குப் பின்னதாக முகத்தைக் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவவும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும்.

மேலும் படிக்க: குளிர்காலத்தில் உங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய சரும பராமரிப்பு முறை

ஓட்ஸ் மற்றும் பால் ஸ்க்ரப்:

ஒரு கப் அளவு ஓட்மீலை பாலுடன் கலந்து ஸ்க்ரப் தயார் செய்யவும். இதை முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் அப்ளை செய்துக் கொள்ளவும். பின்னர் கைகளைக் கொண்டு உங்களது தோலில் மெதுவாக ஸ்க்ரப் செய்து, 10 நிமிடங்கள் அப்படியே விட்டுவிட்டு, பின்னர் கழுவினால் போதும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி எப்போதும் பொலிவுடன் இருக்க உதவியாக இருக்கும்.

சருமத்தைப் பாதுகாக்கும் ஸ்க்ரப் பயன்படுத்தும் முறைகள்:

  • சருமத்தைப் பொலிவாக்க உதவும் இயற்கையான ஸ்க்ரப்களை கடுமையாகப் பயன்படுத்தக்கூடாது. மெதுவாக சருமத்தில் அப்ளை செய்யும் போது சருமம் பொலிவாக இருக்கும்.
  • சருமத்தைப் பொலிவாக்கும் ஸ்க்ரப்களை வாரத்திற்கு இரண்டு முறைக்கு மேலாகப் பயன்படுத்தவும். இயற்கையாக பயன்படுத்தப்படும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமத்திற்கு பொலிவைத் தருகிறது.
  • இதோடு மட்டுமின்றி சருமத்தை மென்மையாக வைத்திருக்க எப்போதும் மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துங்கள். வெயிலில் இருந்து பாதுகாக்கவும் இது பேருதவியாக இருக்கும்.

மேலும் படிக்க: உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் பராமரிக்க வேண்டுமா? இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

சருமத்தைப் பொலிவாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய முறைகளில் ஸ்க்ரப்கள் மற்றும் பல அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தினாலும் உள்ளார்ந்த ஊட்டச்சத்துக்களை உடலுக்குக் கொடுப்பது அவசியம். ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும். நீரேற்றமாக இருந்தாலும் சரும பிரச்சனையைத் தவிர்க்க முடியும் என்பதால் தினமும் 2 அல்லது 3 லிட்டர் வரை கட்டாயம் தண்ணீர் அருந்த வேண்டும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]