பிறப்புறுப்பில் சிவத்தல், வீக்கம் அல்லது அரிப்பு போன்ற அறிகுறிகளை உணர்கிறீர்களா?
உங்கள் பிறப்புறுப்பில் இருந்து அடர்த்தியான, மஞ்சள் நிற வெளியேற்றம் ஏற்படுகிறதா?
இக்கேள்விகளுக்கான விடை ஆம் எனில் அது ஈஸ்ட் தொற்றின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். ஈஸ்ட் தொற்று பொதுவானதே, பெரும்பாலான பெண்கள் தங்கள் வாழ்க்கையின் ஏதேனும் ஒரு கட்டத்தில் இது போன்ற தொற்றுக்கு ஆளாகிறார்கள்.
பிறப்புறுப்பில் ஏற்படக்கூடிய இந்த ஈஸ்ட் தொற்று கேண்டிடியாஸிஸ் என்றும் ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. பிறப்புறுப்பில் காண்டிடா அல்பிகான்ஸ் என்ற பூஞ்சை அதிகமாக வளரும் போது இந்த தோற்று ஏற்படுகிறது. இதை தடுப்பதற்கான வழிகளை நிபுணர் க்டர் ஷீபா மிட்டல் அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகாசனங்கள்
கர்ப்பம், சர்க்கரை நோய் மற்றும் அதிக மன அழுத்தத்தில் உள்ள பெண்கள் மற்றும் ஆன்டிபயாடிக், கார்டிகோஸ்டீராய்டுகள் அல்லது கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கும் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என நிபுணர் கூறுகிறார். பொதுவாக இது போன்ற ஈஸ்ட் தொற்றுகளை தடுக்க நம் உடலில் போதுமான நல்ல பாக்டீரியாக்கள் இருக்கும். ஆனால் உடலின் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படும்போது, அது ஈஸ்ட் அதிகமாக வளருவதற்கான வாய்ப்பளிக்கும்.
பிறப்புறுப்பு ஈஸ்ட் தொற்றை தடுப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொள்வதற்கு முன், அதன் அறிகுறிகள் மற்றும் காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
ஈஸ்ட் நோய்த்தொற்றுகளை தடுப்பது எல்லா பெண்களுக்கும் சாத்தியமில்லை, இருப்பினும் அவை ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்க பின்வரும் விஷயங்களை கடைபிடிக்கலாம்.
ஜீன்ஸ், ஸ்கர்ட், உள்ளாடைகள், பேண்ட், பேண்டீஸ் ஆகியவற்றை இறுக்கமாக அணிவதை தவிர்க்கவும். இவை உங்கள் உடலின் வெப்பநிலை மற்றும் பிறப்புறுப்பை சுற்றியுள்ள பகுதியின் ஈரப்பத அளவை அதிகரிக்கலாம். இது ஈஸ்ட் தொற்றுக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
காட்டன் உள்ளாடைகளை தேர்வு செய்வதே சிறந்தது. ஏனெனில் இது வெப்பம் அல்லது ஈரப்பதத்தை தக்கவைக்காது. மேலும் இது உங்களை உலர்வாக வைத்திருக்க உதவும்.
வைப்ஸ் போன்ற சுகாதாரப் பொருட்கள் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் சில நல்ல பாக்டீரியாக்களையும் சேர்த்து அழிகின்றன. இதனால் பிறப்புறுப்பில் பாக்டீரியாக்களின் சமநிலை சீர்குலையலாம். குளியல், சோப்புகள், ஸ்ப்ரேக்கள், டம்பான்கள் மற்றும் பேடு போன்ற தயாரிப்புகள் வாசனையை அற்றதாக இருப்பது நல்லது. நறுமணம் மிக்க தயாரிப்புகளை தவிர்க்க முயற்சிக்கவும்.
சிறுநீர் கழித்த பிறகும் குளித்த பின்பும் எப்போதும் பெண்ணுறுப்பை முன்னிருந்து பின்பக்கம் துடைக்க வேண்டும். தொற்றுநோயை தவிர்க்க இந்த பகுதியை நன்கு உலர்வாக வைத்துக்கொள்ளவும்.
இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாய் வலியை குறைக்க உதவும் உணவுகள்
உங்களுக்கு மாதவிடாய் ஏற்படும் போது அடிக்கடி பேடு மாற்றுவதை தவறாமல் கடைபிடிக்கவும். இதன் மூலம் தொற்றுநோயின் அபாயத்தையும் குறைக்கலாம்.
இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் பிறப்புறுப்பில் ஈஸ்ட் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பை குறைக்கலாம்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]