Women's Reproductive Health : பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் யோகாசனங்கள்

பெண்களின் ஹார்மோன் அல்லது இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான பல பிரச்சனைகளை யோகா செய்வதன் மூலம் குறைக்கலாம். இதற்கு உதவக்கூடிய சில யோகாசனங்களை இப்பதிவில் படித்தறியலாம்…

 
womens reproductive health improving yoga

பண்டைய காலத்தில் இருந்தே யோகா நம் பாரம்பரிய நடைமுறையாக இருந்து வருகிறது. உடல் மற்றும் மன நலத்தை மேம்படுத்துவதுடன் ஏராளமான நல் அம்சங்களை கொண்டுள்ளன. யோகாசனம், பிராணயாமா மற்றும் தியான பயிற்சிகள் யோகாவின் நுட்பங்களில் அடங்கும். யோகா அனைத்து உடலமைப்பு உள்ளவர்களுக்கும் ஏற்றது.

கர்ப்ப காலத்தில் உடல் எடையை பராமரிப்பது முதல் தாய் மற்றும் சிசுவின் பிணைப்பை மேம்படுத்துவது வரை கர்ப்பிணிகளுக்கும் ஏராளமான நன்மைகளை யோகா தருகிறது.

யோகாவின் நன்மைகள்

யோகா எனும் உடற்பயிற்சி அனைவருக்கும் ஏற்றது. இந்த சக்தி வாய்ந்த பயிற்சிகளை செய்வது மிகவும் எளிது. சுகாசனம் வஜ்ராசனம், பாதகோனாசனம் போன்ற ஆசனங்கள் ஹார்மோன் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகளை குறைக்கின்றன. இந்நிலையில் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பராமரிக்கும் யோகாசனங்கள் பற்றி உலக யோகா அமைப்பின் நிறுவனரான சித்த அக்ஷர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம்.

மண்டூகாசனம்

mandookasanam for womens reproductive health

  • இதை செய்வதற்கு முதலில் வஜ்ராசனம் தோரணையில் உட்காரவும்
  • பின் இரு கைகளையும் முன்னால் நீட்டவும்
  • உங்களுடைய கை கட்டை விரல்களை உள்ளங்கையில் மடித்து வைத்து, மற்ற நான்கு விரல்களையும் அதன் மீது வைத்து மூடிக்கொள்ளவும்
  • இவ்வாறு மூடிய கைகளை, தொப்புளுக்கு மேல் வைக்கவும்.
  • உங்கள் மேல் உடலை வளைத்து, கீழ் உடலின் மீது சாயவும். கழுத்துப் பகுதியை நீட்டி கண்களை மூடிக்கொண்டு சுவாசத்தில் கவனம் செலுத்தவும்.

ப்ரசரித்த பதோத்தனாசனம்

  • இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் இரண்டு கால்களையும் 4 அடி இடைவெளியில் அகட்டி நிற்கவும்.
  • இப்போது கைகளை மார்பிலிருந்து தலைக்கு மேல் உயர்த்தவும். பின் மெதுவாக மூச்சை வெளியேற்றியவாறு உடலை முன்னோக்கி வளைத்து கீழே குனியவும்.
  • உங்கள் முழங்கைகளை மடித்து இரண்டு கைகளையும் பாதங்களுக்கு நேராக கொண்டு வரவும்.
  • பின்னர் உங்கள் தலையை கீழே இறக்கி தரையைத் தொட முயற்சிக்கவும். முடிந்தவரை முதுகு நேராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • இந்தத் தோரணையை 30 வினாடிகளுக்கு, மூன்று முறை வரை செய்யலாம்.

பாத கோனாசனம்

butterfly pose for womens reproductive health

  • இந்த ஆசனம் செய்வதற்கு, முதலில் யோகா மேட்டில் கால்களை நீட்டி உட்காரவும்.
  • பின்னர் கால்களை மடக்கி பாதங்கள் இரண்டும் ஒன்றோடு ஒன்று ஒட்டும் நிலையில் நேராக வைக்கவும்.
  • உங்கள் கைகளைக் கொண்டு பாதங்களை பிடித்துக் கொள்ளலாம்.
  • மூச்சை மெதுவாக உள்ளிழுத்து சுவாசிக்கவும், அதே சமயம் உங்கள் கால் மற்றும் தொடை பகுதியை மேலும் கீழும் அசைக்க வேண்டும்.
  • இந்த ஆசனத்தை மூன்று முறை 15-20 வினாடிகளுக்கு செய்யலாம்.

கலியாசனம்

goddess pose for womens reproductive health

  • கால் விரல்கள் வெளிப்புறமாக இருக்கும் வகையில் கால்களை அகட்டி நிற்கவும்.
  • இந்த தோரணையில் உங்கள் முதுகு நேராக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  • அடுத்ததாக கைகளை உயர்த்தி தோள்பட்டைக்கு இணையாக வைக்கவும்.
  • இப்போது உங்கள் முழங்கைகளை வளைத்து, உள்ளங்கைகளை வானத்தை நோக்கி வைக்கவும்.

பாலாசனம்

child pose for womens reproductive health

  • இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் மண்டியிட்டு உட்காரவும்.
  • உங்கள் முழங்கால்களை வசதிக்கு ஏற்ப விரித்து வைக்கவும். பின் மூச்சை உள்ளெழுத்து கைகளை தலைக்கு மேல் உயர்த்தவும்.
  • பின்னர் மூச்சை வெளியிடும்போது உள்ளங்கைகளை தரையில் வைத்து நீட்டவும்.
  • நெற்றி தரையில் படும்படி குனிந்து சுவாசிப்பதில் கவனம் செலுத்தவும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் மஞ்சள் நீர் குடிப்பதால் உடலில் இவ்வளவு மாற்றங்களா?

பிராணாயாமம் மற்றும் தியானம்

pranayama for womens reproductive health

கபால்பதி, அனுலோம் விலோம், பஸ்த்ரிகா போன்ற பிராணயாமா பயிற்சிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன், உடலில் உள்ள நாடிகளையும் சுத்தப்படுத்துகின்றன. இது மன அழுத்தத்தைக் குறைப்பதால் நரம்பு மண்டலத்திற்கு நல்லது. இனப்பெருக்க ஆரோக்கியம் மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளுக்கு ஒரு முக்கிய காரணமான மன அழுத்தத்தை இது போன்ற பயிற்சிகள் மூலம் குறைக்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP