மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பேட்கள் ரேயான், பருத்தி அல்லது இரண்டின் கலவையால் செய்யப்பட்டவையாக இருக்கும். ஆனால் இதில் ஆபத்தான ரசாயனங்கள் பயன்படுத்தபடுகின்றன. இதனால் பெண்களின் கருவுறும் தன்மை பாதிக்கிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? எஃப்டிஏ அறிக்கையின்படி, "இதில் இருக்கும் டையாக்சின் என்பது பிறப்புறுப்பின் திசுக்களை பாதிக்கிறது." இதன் காரணமாக, பிறப்புறுப்பு சம்பந்தமான மற்ற பிரச்சனைகளும் ஏற்படத் தொடங்குகின்றன. இதைத் தவிர்க்க, ஆர்கானிக் பேட்டுகளை பயன்படுத்தலாம்.
கடைகளில் கிடைக்கும் பேட்களைப் பற்றி பல கவர்ச்சியான கூற்றுக்கள் வெளிவருகின்றன. பெண்கள் அதை உண்மை என்று நம்பி நீண்ட காலமாக பயன்படுத்துகிறார்கள். ஆனால் இவ்வாறு செய்வது சரியல்ல. ஏனெனில் இது தொற்று அபாயத்தை அதிகரிக்கிறது. இதைத் தவிர்க்க, ஒவ்வொரு 4 முதல் 8 மணி நேரத்திற்கும் பிறகு பேட்டுகளை மாற்ற வேண்டும். நீங்கள் எங்காவது வெளியே செல்வதாக இருந்தால், மாதவிடாய் கப் பயன்படுத்தலாம். நீங்கள் அதை 12 மணி நேரம் அணிந்து கொள்ளலாம்.
இதுவும் உதவலாம் :மாதவிடாய் வலியை குறைக்க உதவும் உணவுகள்
மாதவிடாய் காலங்களில் வெளியேறும் ரத்தம் அடிக்கடி துர்நாற்றம் வீசும். இதற்காக நீங்கள் அதிக வாசனை திரவியங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற அவசியமில்லை. இது ஈஸ்ட் தொற்று மற்றும் பிற நோய்த்தொற்றுகளுக்கு வழிவகுக்குத்து விடும். ஏனெனில் இதில் செயற்கை பொருட்கள் மற்றும் பிற இரசாயனப் பொருட்கள் கலந்து இருக்கின்றன. உங்கள் சருமத்திற்கு இவை நல்லதல்ல.
சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி அதிகமாக இருக்கும். இதைத் தவிர்க்க, அவர்கள் வலி நிவாரணிகளை எடுத்துக்கொள்கிறாள். இது மிகவும் தவறான செயல். அமெரிக்காவின் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் கூற்றின்படி, மாதவிடாய் நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள் மிகவும் ஆபத்தானவை. அவை மாரடைப்பையும் ஏற்படுத்தும் அபாயம் கொண்டது. இது தவிர, இந்த மருந்துகள் அல்சர், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால், உடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களும் பாதிக்கப்படுகின்றன. இதைத் தவிர்க்க, மருந்துகளைப் பயன்படுத்த வேண்டாம், ஆனால் இயற்கையான குறிப்புகளைப் பின்பற்றி மாதவிடாய் வலியை போக்கி கொள்ளலாம்.
இதுவும் உதவலாம் :உடல் எடையை குறைக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சியைத் தவிர்க்கத் தொடங்குகிறார்கள். மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம், கடினமான உடற் பயிற்சி வேண்டாம் வாக்கிங் செய்வதே போதுமானது.
இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்து, பகிருங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு, ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தோடு தொடர்ந்து இணைந்திருங்கள்.
Image Credit : Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]