herzindagi
reason for why anger comes during periods

மாதவிடாய் நாட்களில் கோபம் வருகிறதா? இவை தான் காரணம்!

மாதவிடாய் நாட்களில் பெண்கள் அதிகமாக கோபப்படுவதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
Editorial
Updated:- 2022-12-13, 11:02 IST

மாதவிடாய் நாட்களில் ஒவ்வொரு பெண்ணும் ஒவ்வொரு விதமாக நடந்து கொள்வார்கள். சில நேரங்களில் அவர்களுக்கு அதிக வலி இருக்கலாம். சில சமயங்களில் குறைவான வலியை உணரலாம். சில பெண்களுக்கு இந்த சமயத்தில் பாடல் கேட்க பிடிக்கும், சிலருக்கு பேச பிடிக்கும். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் எல்லா பெண்களுக்கும் பொதுவாக உள்ள குணாதிசயம் கோபப்படுவது.

மற்ற நாட்களை விட, மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அதிக கோபம் வருவதாக பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வந்துள்ளது. தேசிய மருத்துவ நூலகத்தின் இணையதளத்தில் வெளியான கட்டுரையில், இதுக் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சியின் போது, 15-49 வயதுக்குட்பட்ட 720 பெண்களிடம் இருந்து இதுக்குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.

மாதவிடாய் நாட்களில் அதிக கோபம் வர என்ன காரணம்?

girl shouting on periods

தேசிய மருத்துவ நூலகம் வெளியிட்டுள்ள கட்டுரையில், மாதவிடாய் நோய்க்குறி(PMS) உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் அதிக கோபப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அறிகுறிகள் மனநிலை மாற்றங்கள், அதிகப்படியான பசி, சோர்வு மற்றும் எரிச்சல் ஆகும்.

இந்த பதிவும் உதவலாம்: மென்சஸ் கப் பயன்படுத்துவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!!

இதனுடன், மாதவிடாய் காலங்களில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களாலும் பெண்களின் மனநிலை பாதிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால், பெண்கள் அதிகம் எரிச்சலடைவார்கள். அன்றாட வாழ்க்கையில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் பெண்கள் கூட மாதவிடாய் நாட்களில் கோபத்தைக் கட்டுப்படுத்தும் திறனை இழந்துவிடுகிறார்கள் என்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது.

மற்ற காரணங்கள்

girl get tensed on periods

ஆராய்ச்சியில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்களினால் மட்டுமே பெண்கள் கோபப்படுகிறார்கள் என்பது கிடையாது. ஒவ்வொரு பெண்ணின் குணாதிசயமும் மாறுப்படுகிறது, அவர்கள் தங்களது கட்டுப்பாட்டை இழக்கும் போது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: மாதவிடாயின்போது பெண்கள் இவற்றை எல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும்!!!

எனவே மாதவிடாய் நாட்களில் பெண்கள் ஏன் அதிகம் கோபப்படுகிறார்கள் என்பது இப்போது உங்களுக்கு தெரிந்திருக்கும். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]