menstrual cup: மென்சஸ் கப் பயன்படுத்துவதில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!!!

menstrual cup: மென்சஸ் கப் பயன்படுத்துவது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் படித்துத் தெளிவுபெறுங்கள்.

menses cup big

‘என்னது, ஒவ்வொரு மாசமும் வயித்து வலி, கால் வலின்னு சொல்லுற?’ என ஒரு ஆண் கேட்டால், அந்த பெண் என்ன செய்வாள். மாதந்தோறும் பெண்களுக்கு மாதவிடாய் வருவது இயல்பான ஒன்று தானே. பீரியட் என அழைக்கப்படும் இந்த மாதவிடாய் அருவருப்பான விஷயம் அல்ல, ஒரு பெண் தாயாக முடியும் என்பதை உணர்த்தும் உன்னதமான நிகழ்வு.

முன்பெல்லாம், மாதவிடாய் சமயத்தில் பெண்கள் சுத்தமான காட்டன் துணிகளைப் பயன்படுத்தினார்கள். இதை அடிக்கடி மாற்றுவது கடினம், மேலும் உதிரப்போக்கு அதிகமானால் கசிவுகளும் ஏற்படும். ஆனால் காலப்போக்கில் இன்று கடைகளில் விற்கப்படும் பேடு, டேம்பான்கள், மென்சஸ் கப்புகள் போன்றவற்றை பயன்படுத்துவது வழக்கம் ஆகிவிட்டது. இந்தப் படைப்புகள் பெண்களின் மாதவிடாய் அசவுகரியத்தை ஓரளவு குறைத்துவிட்டன. இதற்கு முன்பு மென்சஸ் கப்பினை நீங்கள் பயன்படுத்தியது உண்டா? இல்லை எனில், இதைப் பற்றிய முழு விவரங்களையும் இப்பதிவின் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.இது உங்கள் சுகாதாரத்துக்கு நிச்சயம் பாதுகாப்பானதாக இருக்கும். இதில் துளி அளவும் சந்தேகம் வேண்டாம். இதனை எப்படி பயன்படுத்தி, பலன்களை அனுபவிப்பது என்பதனை தெரிந்துகொள்ள பதிவைத் தொடர்ந்து படிக்கவும்.

மென்சஸ் கப் என்பது என்ன?

இந்த சுகாதார தயாரிப்பு மீண்டும் பயன்படுத்தக்கூடியது. இந்த கப் ரப்பர் மற்றும் சிலிக்கான் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது பார்ப்பதற்கு வடி குழாய் போல இருக்கும்.

மென்சஸ் கப்பினால் கிடைக்கும் நன்மைகள்

menses cup

  • மாதவிடாய் சமயத்தில் அதிக உதிரப்போக்கு ஏற்பட்டால் மென்சஸ் கப்பை பயன்படுத்தலாம். இது பேடுகள் மற்றும் டேம்பான்களை விட அதிக இரத்தப்போக்கை தாங்கும். எனவே, மாதவிடாய் சமயத்திற்கு ஏற்றச் சிறந்த சுகாதார தயாரிப்பாக இதைக் கருதலாம்.
  • எந்தவொரு தொற்றையும் தவிர்க்க, மாதவிடாயின்போது ஒவ்வொரு 6 மணி நேரத்துக்கு ஒரு முறை பேடுகளை மாற்ற வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 3 முறையாவது பேடுகளை மாற்ற வேண்டும். ஆனால், அதுவே மென்சஸ் கப்புகளை பயன்படுத்தினால், நீங்கள் அதைப் பல முறை பயன்படுத்தலாம்.
  • கடைகளில் கிடைக்கும் பேடுகள் மற்றும் டேம்பான்களை பயன்படுத்தும்போது தொற்றுகள் குறித்த பயம் உங்களுக்கு இருக்கும். ஏனெனில், இது போன்ற தயாரிப்புகள் மாதவிடாய் இரத்தத்தை உறிஞ்சி வைத்துக்கொள்கின்றன. இவ்வகை டேம்பான்களை பயன்படுத்துவதால் நச்சு அதிர்ச்சி நோய்(Toxic Shock Syndrome) போன்ற தீவிர பிரச்சனைகளும் உண்டாகலாம். ஆனால் மென்சஸ் கப்புகளில் இரத்தம் உறிஞ்சப்படுவதில்லை, மாறாகச் சேகரிக்கப்படுகின்றன. இதனால் தொற்று ஏற்படுவதற்கான அபாயமும் குறைகிறது.
  • மாதவிடாயின்போது ஏற்படும் மிகப்பெரிய பிரச்சனையும், பயமும் உதிரப்போக்கு குறித்தது தான். ஒவ்வொரு பெண்ணும் இந்த பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக, பேடு பயன்படுத்துவோருக்கு, இது பெரிய சவாலாகவே அமைகிறது. இவர்களின் குறை தீர்க்கும் இந்த மென்சஸ் கப்பை ஒரு வரம் என்று சொன்னால் அது மிகையாகாது. இதனைப் பயன்படுத்தும்போது, கறை ஏற்படுமோ என்ற அச்சமின்றி நிம்மதியாக இருப்பீர்கள்.

மென்சஸ் கப் பயன்படுத்துவது எப்படி?

menses cup

  • மென்சஸ் கப்பினை பயன்படுத்தும் முன்பு கைகளைக் கழுவ மறவாதீர். இல்லையேல், பாக்டீரியா தொற்று உண்டாக வாய்ப்புள்ளது
  • இப்போது கப்பினை மடக்கி கொள்ளவும்
  • மெல்ல பிறப்புறுப்பிற்குள் வைக்கவும்
  • இந்த கப் கருப்பை வாய்க்கு சற்று கீழே இருக்க வேண்டும்
  • இந்த கப்பினை பிறப்புறுப்பில் வைத்தவுடன், லேசாக சுழற்றவும்
  • அப்போது தான் பிறப்புறுப்பில் சரியாக பொருந்தும்.

மென்சஸ் கப்பினை சேமிப்பது எப்படி?

menses cup

  • ஒருவேளை கப் சரியாக சேமிக்கப்படாவிட்டால், அது சேதமடையக்கூடும். அதனால் அதை எவ்வாறு சேமிப்பது என்பதை அறிவது மிகவும் முக்கியம்
  • இந்த கப் வைப்பதற்காகக் கொடுக்கப்பட்டுக்குள்ள பையைப் பயன்படுத்தி சேமியுங்கள்.
  • எப்போதுமே மென்சஸ் கப்பினை உலர்ந்த அல்லது குளிர்ந்த இடத்திலேயே வைக்க வேண்டும்.

மென்சஸ் கப் தொடர்பான நன்மைகள் மற்றும் சில முக்கியமான தகவல்களை இந்த பதிவில் பார்த்தோம். இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: freepik
HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP