herzindagi
tips to walking

ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கணுமா? தினமும் 30 நிமிடங்கள் வாக்கிங் போங்க போதும்!

<span style="text-align: justify;">தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இதய ஆரோக்கியம், உடல் எடைக் குறைப்பு, எலும்புகள் வலுவாகுதல் போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும்&nbsp;</span>
Editorial
Updated:- 2024-04-12, 16:22 IST

இன்றைக்கு மாறிவரும் உணவு பழக்கவழக்கங்கள், கலாச்சார மாற்றங்கள் போன்ற பல்வேறு காரணங்களால் புது விதமான நோய்ப் பாதிப்புகளை மக்கள் அதிகளவில் சந்தித்து வருகின்றனர். இதையடுத்து புதிய புதிய நோய்களால் ஏற்படக்கூடிய பாதிப்பைக் குறைக்க வேண்டும் என்பதற்காக வாழ்க்கை முறையில் பல மாற்றங்களை மேற்கொள்ள முயல்கின்றனர். 

இந்த சூழலில் மக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றாலும் முறையாக உடல் நலத்தைப் பராமரிக்க வேண்டும் என்றாலும் நடைப்பயிற்சி ஒரு சிறந்த வழியாக அமையும். ஆம் ஒவ்வொரு நாளும் வெறும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இதய ஆரோக்கியம், உடல் எடைக் குறைப்பு, எலும்புகள் வலுவாகுதல் போன்ற பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதோடு மட்டுமின்றி வேறு என்னென்ன? நன்மைகளை நீங்கள் பெற வேண்டும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

walking habits

மேலும் படிக்க: மகிழ்ச்சியான மனநிலையைப் பெறுவதற்கு நீங்கள் செய்ய வேண்டியது?

நடைப்பயிற்சி செய்வதால் ஏற்படும் நன்மைகள்:

  • எலும்புகள் வலுப்பெறுதல்: தினமும் காலை எழுந்தவுடன் ஒரு அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, தசைகள் வலுப்பெறும். இதோடு எலும்புகள் உறுதியாகக்கூடும். 
  • இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துதல்: நம்மில் பலர் சாப்பிட்டவுடன் லேசாக குட்டித்தூக்கம் போட வேண்டும் என்று நினைப்பார்கள். இத்தகைய செயல்கள் உடலில் கெட்ட  கொழுப்புகளைச் சேர்வதற்கு வழிவகுக்கிறது. எனவே சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் நடக்கும் போது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.
  • செரிமானம் மேம்படும்: உடலில் செரிமான மண்டலத்தைச் சீராக்குவதற்கு நடைப்பயிற்சி மிகவும் உதவியாக இருக்கும். எனவே காலை, மதியம், மாலை என எப்போது சாப்பிட்டாலும்  கொஞ்ச நேரம் நடைப்பயிற்சி செல்லுங்கள். இது உடலின் செரிமான பகுதிக்குள் என்சைம்கள் உற்பத்தியாகிச் சாப்பிட்ட உணவு விரைவில் ஜீரணமாவதற்கு உதவியாக உள்ளது. இதோடு வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் பிரச்சனையையும் தீர்ப்பதற்கு நடைப்பயிற்சி பேருதவியாக உள்ளது.
  • இதய ஆரோக்கியம்: தினமும் ஒரு அரை மணி நேரத்திற்காவது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது இதயத்தை வலிமையாக்க உதவுகிறது. மேலும் இதய நோய்கள் வராமலும் தடுக்கிறது.
  • உடல் எடைக்குறைப்பு: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தேர்வு செய்யும் உடற்பயிற்சிகளில் ஒன்று நடைப்பயிற்சி. தொடர்ச்சியாகக் காலை அல்லது மாலை என இரண்டு வேளைகளிலும் நடைப்பயிற்சி செல்லும் போது உடலில் உள்ள கலோரிகள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைவதோடு உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

walking help reduce weight

  • கவலைகளை மறத்தல்: அமைதியான சூழலில் நடைப்பயிற்சி செல்லும் போது மனதில் உள்ள கவலைகள் மறையக்கூடும். அதிலும் பிடித்த பாடல்களைக் கேட்டுக் கொண்டே நடக்கும் போது மனதில் இனம் புரியாத மகிழ்ச்சிகள் ஏற்படும்.

மேலும் படிக்க: சுட்டெரிக்கும் வெயிலால் பேராபத்தை ஏற்படுத்தும் பக்கவாதம்; தற்காத்துக் கொள்வது எப்படி?

இதுபோன்ற பல்வேறு நன்மைகள் இருப்பதால், முடிந்தவரைத் தினமும் அரை மணி நேரம் நடைப்பயிற்சி சென்று, உடல் நலத்தைப் பாதுகாக்க முயற்சி செய்யுங்கள்.
 
 Image source - Google 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]