நாடெங்கிலும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெளியில் செல்ல முடியாத அளவிற்கு வெயில் தாக்கம் இன்னமும் நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அவ்வப்போது எச்சரிக்கை விடுத்து வருகிறது. பொதுவாகச் சுட்டெரிக்கும் வெயிலால் உடல் சோர்வு, உடல் முழுவதும் அரிப்பு, சோர்வு, பலவீனம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது இயல்பான ஒன்று. ஆனால் சமீப காலங்களாக அதிகரிக்கும் வெப்பத்தால் உயிரைப் பறிக்கக்கூடிய ஹீட் ஸ்ட்ரோக் அதாவது பக்கவாத நோய் தாக்குதல் அதிகரிக்கிறது.
மேலும் படிக்க:இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் தெரியுமா?
ஹீட் ஸ்ட்ரோக் என்றால் என்ன?
மனிதர்களுக்கு அவர்களின் உடலின் வெப்பநிலையும், பிஎச் அளவும் சரிசமமாக இருக்க வேண்டும். அப்போது தான் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியும். இல்லையென்றால் உடல் உறுப்புகள் எதுவும் முறையாக வேலை செய்யாது. மேலும் உடலின் வெப்பநிலை 99 டிகிரி செல்சியசுக்கும் அதிகமாகப் போகும் போது, அதைத் தாங்கிக் கொள்ள முடியாது. இதனால் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென்று பக்கவாதம் ஏற்படுவதோடு, பல நேரங்களில் உயிரைக் கூட பறிக்கும்.
தற்போது நாடெங்கிலும் வெயிலின் கொடுமை அதிகரித்துள்ளதால் மகாராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பை மக்கள் சந்தித்து வருகின்றனர். அதுவும் 50 வயதிற்கு மேல் உள்ளவர்கள் வெயில் நேரத்தில் வெளியில் செல்வதால் பல உயிரிழப்புகளையும் சந்திக்கின்றனர் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ஹீட் ஸ்ட்ரோக்கின் அறிகுறிகள்:
உடலில் வெப்பநிலை அதிகமாகும் போது உடல் சோர்வு, உடல் சூடு அதிகரித்தல், வேர்வையின்மை, வாந்தி , மயக்கம் போன்ற பாதிப்புகளைச் சந்திப்பார்கள். மேலும் உடல் உப்பு மற்றும் தண்ணீர் இழக்கும் போது கை, கால் வலிகள் ஏற்படும். இதை முதல் நிலை என்கின்றனர். மேலும் உடலில் வெப்பநிலை 101 டிகிரிக்கு அதிகமாகும் போது கடுமையான தலைவலி, காய்ச்சல், வாந்தி, அதிகமாகத் தண்ணீர் தாகம் மற்றும் இரத்த அழுத்தம் குறைந்து மயக்க நிலைக்குச் சென்றுவிட நேரிடும். இதை வெயிலின் பாதிப்பு தான் என அலட்சியமாக நினைக்காமல், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. இல்லையென்றால் அதீத வெப்பம் பல நேரங்களில் பக்கவாதத்தை ஏற்படுத்தும். மேலும் உயிரைக்கூடப் பறிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தற்காத்துக் கொள்வது எப்படி?
காற்றோட்டமான இடத்தில் எப்போதும் இருக்க வேண்டும். உடல் சோர்வடையும் போது வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற பழங்களைக் கொண்டு தயார் செய்யப்படும் ஜூஸ்களைப் பருக வேண்டும்.
மேலும் படிக்க:இனி வேண்டாம்னு சொல்லாதீங்க. அதலைக்காயில் அவ்வளவு அற்புத மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கு!
காட்டன் மற்றும் தளர்வான ஆடைகளை மட்டும் அணிய வேண்டும். தாகம் இல்லையென்றாலும் வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கு ஏற்ப அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் காலை 11 மணியிருந்து மாலை 4 மணி வரை வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். ஒருவேளை வெளியில் செல்லக்கூடிய சூழல் இருந்தால் குடை, தொப்பி போன்றவற்றை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation