herzindagi
health benefits of eating earlier for women

இரவில் சீக்கிரம் சாப்பிடுவதால் எத்தனை நன்மைகள் தெரியுமா?

<p style="text-align: justify;"><span style="text-align: justify;">இரவு நேரத்தில் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று செரிமானம். நேரம் தவறி சாப்பிடுவதால் வயிற்று வலி, அஜிரணக்கோளாறு, வாந்தி, வாயுத்தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படும்.</span>
Editorial
Updated:- 2024-04-08, 19:06 IST

இன்றைய அவசர உலகத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நாம் பொருளாதார தேவைகளை மட்டுமே முதன்மையாக கருதுகிறோம். உடல் நலத்தில் அக்கறை காட்டுவதே இல்லை. இதனால் தான் புதிய புதிய நோய்களை விலைக் கொடுத்து வாங்குகிறோம். முறையான தூக்கம், உணவு பழக்கம் இல்லையென்றால் உடல் நலம் முற்றிலும் பாதித்து விடும். குறிப்பாக இரவு நேர உணவில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். காலை மற்றும் மதிய நேர உணவுகளை விட இரவு நேரத்தில் நீங்கள் சாப்பிடக்கூடிய உணவுகள் உடல் ஆரோக்கியத்தில் பெரும் பங்கு வகிக்கிறது.  இதோ என்னென்ன? என்பது குறித்து விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

 health benefits of eating earlier

மேலும் படிக்க: பெண்களிடையே அதிகரிக்கும் இரத்த சோகை; குணப்படுத்துவதற்கான எளிய வீட்டு வைத்தியம்!

இரவு நேர உணவுகளால் ஏற்படும் நன்மைகள்:

  • நல்ல தூக்கம்: ஆண்கள் முதல் பெண்கள் வரை பலரும் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்பட்டுவருகின்றனர். இதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது தாமதமான இரவு உணவுகள். வழக்கத்திற்கு மாறாக 9 மணிக்கு மேல் நீங்கள் சாப்பிடும் போது அசௌகரியம் அல்லது அஜீரண பாதிப்புகள் ஏற்படும். இது தூக்கத்தை சீர்குலைக்கும். எனவே முடிந்தவரை 8 மணிக்குள் உங்களுடைய இரவு நேர உணவுகள் இருக்க வேண்டும்.
  • வளர்சிதை மாற்றம்: இரவு நேரத்தில் நீங்கள் சீக்கிரம் சாப்பிடும் போது, செரிமானம் சீக்கிரம் நடைபெறுகிறது. இதனால் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதோடு, மெட்டபாலிசத்தையும் அதிகரிக்கிறது.

eating earlier tips

  • எடைக் கட்டுப்பாடு: உடல் எடையைக் குறைக்க வேண்டும் என டயட்டில் இருப்பவர்கள், இரவு 7 மணிக்குள் சாப்பிட வேண்டும் என்பார்கள். எவ்வளவு விரைவாக நீங்கள் சாப்பிடுகிறீர்களோ? அந்தளவிற்கு செரிமானம் வேகமாக நடைபெறும். இதனால் உடலில் தேவையில்லாத கொழுப்புகள் சேர்வதில்லை. இதனால் உடல் எடையையும் அதிகரிக்காது.
  • செரிமானம் மேம்படும்: இரவு நேரத்தில் பலரும் சந்திக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று செரிமானம். நேரம் தவறி சாப்பிடுவதால் வயிற்று வலி, அஜிரணக்கோளாறு, வாந்தி, வாயுத்தொல்லை போன்ற பாதிப்புகள் ஏற்படும். இது இரவு நேர தூக்கத்தைக் கெடுத்துவிடும். எனவே இரவில் சீக்கிரம் சாப்பிட வேண்டும் என்பதை நினைவில் வைத்துக்  கொள்ளுங்கள்.

early dinner

  • குடல் ஆரோக்கியம்: இரவில் நீங்கள் எவ்வளவு விரைவாக சாப்பிடுகிறீர்களோ? அந்தளவிற்கு செரிமானம் விரைவாக நடைபெறும். உடலில் கெட்ட கொழுப்புகள் தேங்குவதைத் தடுப்பதோடு உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியையும் அதிகரிக்கிறது. உடலில் செரிமானம் சீராக இருந்தாலே எவ்வித உடல் நலப் பாதிப்புகளும் இருக்காது. சிறு குடல், பெருங்குடல் உள்பட அனைத்து உடல் உறுப்புகளும் சீராக இயங்குவதால் மலச்சிக்கல் போன்ற பாதிப்புகள் ஏற்படாது.

மேலும் படிக்க: இனி வேண்டாம்னு சொல்லாதீங்க. அதலைக்காயில் அவ்வளவு அற்புத மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கு!

இது போன்று பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் உள்ளதால் இனி மேலாவது இரவு நேரத்தில் சீக்கிரம் சாப்பிடும் பழக்கத்தைக் கடைப்பிடிக்க முயற்சி செய்யுங்கள்.

Image Source - Google 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]