நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்திய ஒவ்வொரு உணவுப்பொருள்களிலம் ஒவ்வொரு விதமான மருத்துவக் குணங்கள் புதைந்துள்ளது. சாப்பிடும் காய்கறிகள் முதல் சமையலுக்குப் பயன்படுத்திய அத்தனைப் பொருள்களிலும் உள்ள ஊட்டச்சத்துக்கள் தான் இன்றைக்கும் அவர்கள் நோய் நொடியின்றி வாழ்வதற்கு பேருதவியாக உள்ளது. இவற்றில் ஒன்றான அதலைக்காய் மற்றும் அதன் மருத்துவக் குணங்கள் என்ன? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
அதலைக்காயின் மருத்துவக்குணங்கள்:
அதலைக்காய் என்ற பெயர் அனைவருக்கும் நிச்சயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. பாகற்காய் போன்று கசப்பு சுவைக் கொண்ட இந்த காய் தென் மாவட்டங்களில் அதிகம் விளையக்கூடியது. பச்சை நிறத்தில் சிறியதாக இருக்கும் இந்த காயில் அதிகளவில் மருத்துவக் குணங்கள் புதைந்துள்ளது.இன்றைக்கு நம்மில் பலர் சந்திக்கும் மிகப்பெரிய உடல் நலப் பாதிப்புகளில் ஒன்று நீரழிவு. சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைப்பது, குறைந்த அளவில் உணவுகளைச் சாப்பிடுவது, பாகற்காய் போன்ற கசப்புத்தன்மையுள்ள காய்கறிகளைச் சாப்பிடுவார்கள். இதே போன்று தான் அதலைக்காயும். இதில் உள்ள வைட்டமின் சி, ஜிங்க், போன்ற பல்வேறு அத்தியாவசிய ஊட்டசசத்துக்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
மஞ்சள் காமாலை:
மஞ்சள் காமாலை நோயைக் குணப்படுத்துவதற்கு எப்படி கீழாநெல்லி சிறந்த மருந்தாக உள்ளதா? அதைப் போன்று அதலைக்காயையும் பயன்படுத்தலாம். இவற்றைத் தினமும் காலை உணவுடன் சாப்பிடும் போது, கல்லீரல் போன்ற உடல் உறுப்புகளில் தேங்கியுள்ள நச்சுகளை அகற்றுகிறது. மேலும் மஞ்சள் காமாலை பாதிப்பும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பிக்கும்.
குடல் புழுக்களை அழித்தல்:
இன்றைக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிக இனிப்பு சுவைக் கொண்ட சாக்லேட்டுகள் உள்ளிட்ட பல ஸ்வீட்ஸ்களை சாப்பிடுகிறோம். இதனால் வயிற்றில் புழுக்கள் அதிகளவில் உற்பத்தியாகிறது. இதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கசப்புத் தன்மை பிடிக்காவிடிலும் அதலைக்காய் சாப்பிட வேண்டும். இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் வயிற்றுப் புழுக்களை அழிக்க உதவுகிறது. உங்களது குழந்தைகளுக்குப் பிடிக்கவில்லையென்று சொன்னாலும் கொஞ்சமாவது சாப்பிட கற்றுக்கொடுப்பது நல்லது.
எடை மேலாண்மை:
இன்றைய உணவுப் பழக்க வழக்கங்களால் பலரது உடல் எடைக் கட்டுக்கடங்காமல் அதிகரித்து வருகிறது. அதிகரித்த எடையைக் குறைப்பதற்காக ஜிம்மிற்கு செல்வது முதல் டயட்டில் இருப்பது போன்ற பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இதோடு அதலைக்காயையும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் உள்ள நார்ச்சத்துக்கள் எடையை கணிசமாக குறைப்பதற்கு உதவியாக உள்ளதுஃ
மேலும் படிக்க:வெயிலைச் சமாளிக்க கர்ப்பிணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது?
அதலைக்காயில் ஆன்டி - ஆக்ஸிடன்டகள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது. இது போன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் கசப்புத் தன்மை இருந்தால் அதலைக்காயை சேர்த்துக் கொள்ளுங்கள். மற்ற காய்கறிகளைப் போன்று அனைத்து சீசன்களிலும் கிடைக்காது. மழைக்காலங்களில் அதிகளவு கிடைக்கும் என்பதால் வாங்கிப் பயன்படுத்த மறந்துவிடாதீர்கள்.
Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation