நம்மில் பலர் பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக அயராது உழைத்து வருகிறோம். கடின உழைப்பும் அதன் மூலம் வரக்கூடிய தொகையும் மக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்குமா? என்றால் நிச்சயம் இருக்காது. எந்தளவிற்கு அவர்களின் மனமும், உடலும் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே வாழ்நாள் முழுவதும் எப்போதும் ஆரோக்கியத்துடன் இருக்க முடியும். இதோ மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்? என்பது குறித்த சில டிப்ஸ்கள் இங்கே.
![calm down]()
மேலும் படிக்க: உங்களது குழந்தைகளை வெற்றியாளராக மாற்றுவதற்கான ரகசியம் இது தான்!
மனம் மற்றும் உடலை ஆரோக்கியமாகவும் வழிமுறைகள்:
- உடற்பயிற்சி: மக்கள் நாள் முழுவதும் உடல் வலிமையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என்றால் கட்டாயம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். முடிந்தால் ஜிம்மிற்கு செல்லுங்கள். இல்லையென்றால் வீட்டிலேயே ஸ்கிப்பிங், கார்டியோ பயிற்சி, யோகா போன்ற உங்களுக்குப் பிடித்த ஏதோ ஒரு உடற்பயிற்சியை செய்யவும். பல மணி நேரம் செய்ய வேண்டும் என்றில்லை. தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். இது உடலுக்கும், மனதிற்கும் உற்சாகத்தை அளிக்கும்.
- டயட்: உடல் எடையைக் குறைப்பதற்கு மட்டுமல்ல, மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும் என்றால்,கட்டாயம் உங்களது உணவு முறையில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளோடு டயட் முறையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக புரதம், கார்போரஹைட்ரேட், வைட்டமின் போன்ற ஊட்டச்சத்துள்ள உணவுகளைக் கட்டாயம் சாப்பிட வேண்டும். இத்தகைய உணவுகள் உங்களுக்கு ஆற்றலோடு நாள் முழுவதும் வலிமையையும் கொடுக்கும்.
- நாள் முழுவதும் உற்சாகத்துடன் இருக்க வேண்டும் என்றால் உணவுகள் எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததோ? அந்தளவிற்கு தூக்கம் அவசியம். தினமும் 8 மணி நேரமாவது தூக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். சரியான தூக்கம் உங்களுக்கு இல்லையென்றால் எந்தவொரு விஷயத்திலும் கவனம் செலுத்த முடியாது. எந்தவொரு வேலை செய்தாலும் எரிச்சலான மனநிலையைத் தான் இருக்கும்.
- வாழ்க்கையில் உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடிய விஷயங்களில் மற்றொன்று குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களுடன் மகிழ்ச்சியுடன் இருத்தல். இன்றைய பணிச்சூழல் அனைவரையும் மனரீதியாக பாதிக்கும் என்பதால், முடிந்த அளவிற்கு மாதத்திற்கு ஒருமுறை அல்லது 6 மாதத்திற்கு ஒருமுறையாவது குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கு முயற்சி செய்யுங்கள். மனம் மகிழ்ச்சியுடன் இருக்கும் போது உடலும் அதற்கேற்றால் போல் ஆரோக்கியமாக இருக்கும்.
- வாழ்க்கையில் எந்த கஷ்டங்கள் வந்தாலும் அனைத்தையும் அசால்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். வெறுப்பான மனநிலையை அனுபவிக்கும் சூழல் இருந்தால் பாடல்கள் கேட்பது, புத்தகம் படிப்பது போன்ற உங்களுக்குப் பிடித்த விஷயங்களை மேற்கொள்ளவும்.
மேலும் படிக்க: குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது?
இதையெல்லாம் முறையாக நீங்கள் பின்பற்றினாலும் உங்களுக்கு மன அழுத்தமான மனநிலை இருந்தால், மனநல மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்க கட்டாயம் இந்த விஷயங்களையெல்லாம் பின்பற்ற வேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
Image source - Google