image

கவலை மறந்து வாழ்க்கையில் சந்தோஷமாக வாழணுமா? மறக்காமல் இதைப் பின்பற்றுங்கள்!

வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும், கவலை இல்லாத வாழ்க்கையைப் பெறுவதற்கும் தேவையில்லாத பேச்சுக்களைக் குறைத்தாலே போதும்
Editorial
Updated:- 2025-12-01, 23:49 IST


கவலை இல்லாத வாழ்க்கையில் சுவாரஸ்சயம் இருக்காது. நம்முடைய வாழ்க்கையில் இன்பமும், துன்பமும் மாறி மாறி வந்தால் மட்டுமே சில வாழ்க்கையில் பல அனுபவங்களை நாம் கற்றுக்கொள்ள முடியும். அதற்கென்று கவலையை மட்டும் வாழ்க்கையாக கிடைத்துவிட்டால் என்ன செய்வது என்று தானே கேட்கிறீர்கள்? ஆம் நிச்சயம் மோசமான வாழ்க்கை முறையாகத் தான் இருக்கும். இதோ வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவதற்கும், கவலை இல்லாத வாழ்க்கையைப் பெறுவதற்கும் நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இங்கே விரிவாகத் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

 

கவலை இல்லாத வாழ்க்கைக்கான வழிமுறைகள்!

  • ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் துன்பங்கள் அதிகமாக இருக்க முதன்மை காரணம் அவர்களின் தேவையற்ற பேச்சுகளாகத் தான் இருக்கும். எனவே யாரைப் பற்றியும் நீங்கள் தேவையில்லாமல் பேசுவதைத் தவிர்க்கவும். பிறரைப் பற்றிக் குறை சொல்வதைத் தவிர்க்கவும். இவ்வாறு செய்வதன் மூலம் தேவையில்லாத சண்டைகளால் ஏற்படக்கூடிய கவலைகளை விரட்ட முடியும்.
  • வாழ்க்கையில் அனைத்து நேரங்களும் ஒரே மாதிரியாக இருக்காது. இன்பங்கள் வந்தாலும், துன்பங்கள் வந்தாலும் அளவோடு வைத்துக் கொள்ளவும். உங்களது புத்திசாலித்தனத்தை வெல்ல அனுமதிக்காதீர்கள். மற்றவர்களிடம் உங்கள் எதிர்ப்பார்பைக் குறைப்பது நல்லது.

மேலும் படிக்க: அதிகமாக உழைத்தும் பலன் இல்லையா? உங்கள் செயல்திறனை பாதிக்கும் 5 பழக்கங்கள்  இவை தான்

  • வாழ்க்கையில் கவலைகளைத் தவிர்க்க வேண்டும் என்று நினைத்தால் யாரையும் மகிழ்ச்சியுடன் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள். ஒரிடத்தில் 10 பேர் இருந்தால் அந்த இடத்தில் 18 கருத்துக்கள் எழக்கூடும். இப்படிப்பட்ட சூழலில் அனைவரையும் மகிழ்விப்பது என்பது முடியாத காரியம். இதனால் பிறர் உங்களைப் பற்றி குறைச்சொல்லும் போது கவலை ஏற்படாது. அதே சமயம் உங்களை வெறுப்பவர்கள் உங்களது செயல்பாடுகளைப் பார்த்து பொறாமைப்படுபவர்களாகவும், சிலர் உங்களது ரசிகர்களாகவும் இருப்பார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
  • வாழ்க்கையில் எதற்காவது ஆசைப்படுவது இயல்பான ஒன்று தான். அதுவே கிடைக்கவில்லையென்றால் அந்த மன வருத்தத்தை வார்த்தைகளால் வெளிப்படுத்த வேண்டிய அவசியமில்லை. முகத்தில் உள்ள கவலைகளே நமக்கு காட்டிக் கொடுத்துவிடும். எனவே நமக்கு எது முடியுமோ? அந்த விஷயத்திற்கு மட்டும் ஆசைப்படவும். இதனால் எளிதில் அதை அடைந்துவிடுவீர்கள்.
  • மேலும் எதாவது உங்களது தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று ஒத்துக்கொள்ளுங்கள். அதற்கு மாறாக தெரியும் என்று சொல்லிவிட்டு அதை எப்படி செய்வது என்று மனதிற்குள் குழப்பம் வேண்டாம். இல்லை என்றாலும், முடியாது என்றாலும், தெரியவில்லை என்றாலும் சொல்வதற்குப் பயப்பட வேண்டாம்.

மேலும் படிக்க: வாழ்நாள் முழுவதும் நீண்ட ஆயுளுடன் இருக்க ஆசையா? கட்டாயம் வாழ்க்கையில் இந்த பழக்கங்களைப் பின்பற்றுங்கள்!

  • கவலைகளை விரட்ட பிடித்த விஷயங்களைத் தினமும் மேற்கொள்ளுங்கள். குறிப்பாக பாடல்கள் கேட்பது, நடனம் ஆடுவது, புத்தகம் படிப்பது போன்ற செயல்பாடுகளை நீங்கள் மேற்கொள்ளுங்கள். மேலும் நல்ல தூக்கமும், ஆரோக்கியமான உணவு முறையும் உங்களது மனதை ஒருநிலைப்படுத்தவும், கவலையை மறக்கவும் உதவியாக இருக்கும் என்பதையும் நினைவில்வைத்துக் கொள்ளுங்கள்.

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]