உங்களது குழந்தைகளை வெற்றியாளராக மாற்றுவதற்கான ரகசியம் இது தான்!

குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும். 

tips to make joly in life with parents

குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்க்கும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உள்ளது. சில நேரங்களில் மிகவும் சவாலான விஷயங்கள் என்றாலும், பொறுமையாக குழந்தைகளிடம் சொல்லிப்பாருங்கள், நிச்சயம் கேட்கக்கூடிய மனது அவர்களிடம் உள்ளது. அதிலும் இன்றைய குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் பலர் மெனக்கெடுகிறார்கள். கேட்டதையெல்லாம் வாங்கிக் கொடுத்தும், அவர்களுக்குப் பிடித்த விஷயங்களைச் செய்யும் குழந்தைகளை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கிறார்கள் பெற்றோர்கள். இத்தகை செயல்கள் அனைத்து நேரங்களிலும் சரியானதாக அமையுமா? என்றால் நிச்சயம் இருக்காது. சில நேரங்களில் உங்களது குழந்தைகளை அதிகம் அடம்பிடிக்க வைத்துவிடும்.

இதோ இன்றைக்கு மகிழ்ச்சியான மற்றும் வெற்றிகரமான குழந்தையை எவ்வாறு வளர்ப்பது? என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

child care tips ()

மகிழ்ச்சியாக இருத்தல்:

குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் பெற்றோர்கள் இதை முதலில் மேற்கொள்ள வேண்டும். எத்தனை இன்னல்கள் மற்றும் தடைகள் வந்தாலும் மகிழ்ச்சியுடன் பயணிக்க அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். இதற்கு பெற்றோர்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். இதை முறையாக பின்பற்றினாலே குழந்தைகள் மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். இந்த சூழலில் நீங்கள் எந்த செயல்கள் செய்தாலும் நிச்சயம் வெற்றியடைவார்கள்.

உறவுகள் குறித்து கற்றுக்கொடுக்கவும்:

குடும்பத்தில் உள்ள உறவினர்கள் பற்றிய புரிதல்கள் குழந்தைகளுக்கு இருக்க வேண்டும். எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய இன்னல்கள் வந்தாலும் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? என்றும் யாரையும் எளிதில் நம்பக்கூடாது மற்றும் பாசமிகு உறவுகளை எப்படி புரிந்துக்கொள்ள வேண்டும் என கற்றுக்கொடுக்க வேண்டும்.

முயற்சிகள் எதிர்ப்பார்ப்பு:

குழந்தைகளை வெற்றியாளராக மாற்றும் பொறுப்பு ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உள்ளது. அனைத்து குழந்தைகளுக்கும் ஏதோ ஒரு திறமை இருக்கும். அந்த திறமையை வளர்ப்பதற்கு முயற்சி செய்யலாம். மாறாக அவர்கள் அனைத்தையும் உடனே செய்துவிடுவார்கள் என்று எதிர்ப்பார்ப்பது தவறு. இத்தகைய செயல்கள் அவர்களின் நம்பிக்கையை இழக்க செய்யும். எனவே முயற்சிகளை எதிர்ப்பார்க்கலாம், முழுமையாக நிறைவேற வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது குழந்தைகளின் மனநிலையைப் பாதிக்கும்.

நம்பிக்கையை கற்றுக்கொடுக்கவும்:

குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் அவர்கள் மீது எப்போதும் நம்பிக்கை வைக்க வேண்டும். எந்த சூழலிலும் நம்பிக்கையுடன் எதையும் செய்தால் வெற்றியடையலாம் என்பதை அவ்வவப்போது அவர்களுக்கு உணர்த்த வேண்டும். நம்பிக்கை தான் வாழ்க்கை என்பது நிச்சயம் ஒரு நாள் அவர்களுக்கு புரியும்.

மேலும் படிக்க: வெயிலைச் சமாளிக்க கர்ப்பிணிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டியது?

parenting care

இதோடு குழந்தைகளுக்கு உணர்ச்சி நுண்ணறிவைக் கற்றுக்கொடுப்பது, மகிழ்ச்சியான பழக்கங்களை உருவாக்குவது,.சுய ஒழுக்கத்தை கற்றுக்கொடுப்பது மற்றும் அதிக நேரம் குழந்தைகளுடன் விளையாடுவது போன்ற நடவடிக்கைகளில் அவர்களை ஈடுபடுத்த முயற்சிக்கவும். இது போன்ற செயல்களை முறையாகப் பின்பற்றினாலே உங்களது குழந்தைகள் எப்போதும் மகிழ்ச்சியான வாழ்க்கையைப் பெறுவதோடு, வெற்றியாளராக எப்போதும் இருப்பார்கள் என்பது தான் நிதர்சன உண்மை.

Image source - Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP