சமூகத்தில் குழந்தைகளைப் பொறுப்புடனும், மரியாதையுடன் வளர்ப்பது ஒவ்வொரு பெற்றோர்களின் கடமைகளில் முக்கியமான ஒன்று. அம்மா மற்றும் அப்பாவின் வழிகாட்டுதல்கள் முறையாக இல்லையென்றால் எதிர்காலத்தில் குழந்தைகள் பொறுப்பற்றவர்களாக மாறிவிடுவதற்கு அவர்களே காரணமாக அமைவார்கள்.
இன்றைக்கு நிச்சயம் ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மா மற்றும் அப்பா இருவரும் பணிக்குச் செல்வார்கள். வேலை, குடும்பச் சூழல் எனப் பல நெருக்கடிகள் இருந்தாலும் குழந்தைகளுடன் கட்டாயம் நேரத்தைச் செலவிட வேண்டும் எனக் குழந்தை நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். “ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா”? என்ற பழமொழிக்கு ஏற்ப குழந்தைகளுக்கு எந்தளவிற்குச் சிறு வயதில் சமூகத்தைப் பற்றி கற்றுக்கொடுக்கிறோமோ? அதை வைத்துத் தான் எதிர்காலத்தில் அவர்கள் பொறுப்புடன் மாறுவார்கள். இதோ குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் கட்டாயம் செய்ய வேண்டிய சில விஷயங்கள் குறித்து இங்கே தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் பின்பற்ற வேண்டியது:
குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்கு அவர்களின் தந்தை மற்றும் தாயிடம் உள்ளது. குழந்தைகள் ஒவ்வொருவரும் ஏதாவது விஷயத்தைத் தனியாக இருந்து செய்ய வேண்டிய நிலை ஏற்படும் போது, பெற்றோர்கள் எப்படிச் செய்தார்கள்? என யோசிப்பார்கள். அனைத்து செயல்களிலும் பெற்றோர்கள் ரோல் மாடலாக இருப்பதால் எப்போதுமே அவர்களிடம் நல்ல கருத்துக்களைப் பகிர வேண்டும். நல்ல செயல்களை அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ள வேண்டும். குழந்தைகளைப் பொறுப்புடன் வளர்ப்பதற்கு இந்த விஷயங்களைப் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அடுத்ததாக மரியாதையுடன் எப்படி நடந்துக் கொள்வது என்பது பற்றி குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். சிறு வயதில் பேசக்கூடிய மழலைப் பேச்சுகள் பெற்றோர்களுக்கு இனிமையாகத் தான் இருக்கும். வா, போ என்றும் சில நேரங்களில் அம்மாக்களை வாடி, போடி என்றும் கூட குழந்தைகள் செல்லமாகப் பேசுவார்கள். இத்தகைய செயல்களால் மற்றவர்களைக் குழந்தைகளைத் தவறுதலாக நினைக்கக்கூடும். எனவே யாராக இருந்தாலும் மரியாதையுடன் பேச வேண்டும். இந்த செயல்களை அவர்கள் செய்ய வேண்டும் என்றால் பெற்றோர்கள் குழந்தைகளையும் வாங்க, போங்க என மரியாதையுடன் பேச வேண்டும். பெற்றோர்கள் பேசுவதைத் தான் குழந்தைகள் பேசுவார்கள் என்பதால் முதலில் பெற்றோர்கள் இதைப் பின்பற்ற வேண்டும். அடுத்தப்படியாக படிப்பு என்று வரும் போது அதிகம் கட்டாயப்படுத்தாதீர்கள்.
மாறாக நன்றாக படித்தால் என்ன நடக்கும்?வாழ்க்கையில் எப்படியெல்லாம் முன்னேற்றத்தைக் காண முடியும் என சொல்லிக் கொடுக்கவும். இதுவே படிப்பின் மீதான ஆர்வத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும். மேலும் மற்ற குழந்தைகளுடன் போட்டி பொறாமையுடன் இருக்கக்கூடாது என்பதையும் அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும்.
மேலும் படிக்க:உலக சுகாதார தினம் 2024 : “எனது ஆரோக்கியம் எனது உரிமை”
இதோடு தனிப்பட்ட சுகாதாரத்தையும் குழந்தைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். காலை எழுந்தவுடன் பல் துலக்குவது முதல் குளிப்பது என அனைத்து விஷயங்களையும் பெற்றோர்கள் செய்து குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுக்கவும். மேலும் சமூகத்தில் எப்படி நடந்துக் கொள்ள வேண்டும்? என்பது போன்ற சின்ன சின்ன விஷயங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதையும் பெற்றோர்கள் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.Image source - Google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation