உலக சுகாதார தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 7 ஆம் தேதி கடைபிடிக்கப்படும் நிலையில் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ மரபியல், சுற்றுச்சுழல் மற்றும் வாழ்க்கைமுறை உள்பட பல காரணிகள் அடங்கி இருக்கின்றன. குறிப்பாக வாழ்க்கைமுறை ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. உலக சுகாதார தினத்தில் நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு பின்பற்ற வேண்டிய வாழ்க்கை முறை பற்றி இந்த கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.
உடற்பயிற்சி
தினமும் உடற்பயிற்சி செய்வது உடல்எடையைக் ஆரோக்கியமாக பராமரிக்கவும், இதய அமைப்பை வலுப்படுத்தவும், நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பல நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகிறது. வாரத்திற்கு 75 நிமிட தீவிரமான உடற்பயிற்சி செய்வதை வாடிக்கையாக கொண்டு இருந்தால் நீங்கள் ஆரோக்கியத்துடன் வாழலாம்.
ஆரோக்கியமான உணவுமுறை
பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த சீரான உணவை உட்கொள்வது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இவற்றில் நமது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் நார்ச்சத்து அனைத்தும் கிடைக்கின்றன. இதைவிட பதப்படுத்தப்பட்ட உணவுகள், கூல் டிரிங்க்ஸ் மற்றும் அதிகப்படியான உப்பு உட்கொள்வதை தவிர்க்கவும்.
நல்ல தூக்கம்
உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்ல தூக்கம் அவசியம். உங்கள் உடல் ஓய்வெடுக்கவும், புத்துணர்ச்சி பெறவும் தினமும் 9 மணிநேர தூக்கத்தை உறுதி செய்யுங்கள். தூங்குவதற்கு முன் காஃபின் அருந்துவதையும் மற்றும் எலக்ட்ரிக் சாதனங்கள் பயன்பாட்டை தவிர்க்கவும்.
மேலும் படிங்ககொழுத்தும் கோடை வெயில்! அசெளகரியம் இல்லாமல் நிம்மதியாக தூங்க இதை பண்ணுங்க
மன அழுத்த மேலாண்மை
நீங்கள் மன அழுத்தத்தில் இருந்தால் உடல் ஆரோக்கியம் நிச்சயம் பாதிக்கப்படும். தியானம், ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், யோகா ஆகியவற்றுக்கு நேரம் செலவழித்து மன அழுத்தத்தைக் குறைக்கவும். உங்களுக்கு அதிகளவு மகிழ்ச்சியை தரும் பொழுதுபோக்கு அம்சங்களை வளர்த்துக் கொள்ளுங்கள்.
நட்பு வட்டாரம்
வாரத்திற்கு ஒரு நாள் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுங்கள். இது நேர்மறையான எண்ணங்களுக்கு உதவும்.
மது அருந்தும் பழக்கத்தை கைவிடுங்கள்
அதிகப்படியான மது அருந்துதல் கல்லீரல் நோய், இருதய பிரச்சினைகள் மற்றும் சில வகையான புற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். மது அருந்துவதை நிறுத்த முடியவில்லை என்றால் குடிக்கும் அளவை படிப்படியாக குறைக்க முயற்சிக்கவும்.
புகையிலை பழக்கத்திற்கு X
உலகத்தில் பெரும்பாலான மரணங்கள் புகைப்பழக்கத்துடன் தொடர்புடையது. இது புற்றுநோய், இதய நோய் மற்றும் சுவாசக் கோளாறுகள் உட்பட பல உடல்நலப் பிரச்சினைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உடல்நல பரிசோதனை
வருடத்திற்கு இரண்டு முறை அதாவது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியத்திற்கு எதேனும் குறைபாடு இருந்தால் பரிசோதனைகள் அதை கண்டறிய உதவும். வரும் முன் காப்போம் என்ற எண்ணத்தில் உடல் பரிசோதனை செய்யவும்.
உடல்எடையை நிர்வகித்தல்
உடல் பருமன் பல நோய்களுக்கு வழிவகுத்து உங்கள் ஆயுட்காலத்தை குறைக்கும். சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியின் மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முயற்சி செய்யுங்கள். BMI வரம்பிற்குள் (18.5-24.9) எடையைக் பராமரிக்க முயற்சிக்கவும்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation