உலக சுகாதார தினம் 2024 ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 7 அன்று உலகம் முழுவதும் பல்வேறு சுகாதார பிரச்சினைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த கடைபிடிக்கப்படுகிறது. இதன் வரலாறு மற்றும் கருப்பொருள் பற்றி இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளுங்கள்.
நீண்ட ஆயுளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்திட ஆரோக்கியம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. கொரோனா பேரிடருக்கு பிறகு பெரும்பாலான மக்கள் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். நல்வாழ்விற்கு ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பொதுமக்கள் உணர்ந்துள்ளனர். நோய்கள் மட்டுமல்ல மனநலன் சார்ந்த விஷயங்கள், வரும் முன் காப்பது உள்ளிட்ட ஆரோக்கியம் தொடர்பான அனைத்தும் உலகளவில் பிரதானமாகியுள்ளது. இந்த பயணத்தை நினைவு கூரும் விதமாக ஏப்ரல் 7ஆம் தேதி உலக சுகாதார தினம் கடைபிடிக்கப்படுகிறது.
சர்வதேச பொது சுகாதாரத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு நிறுவனமான உலக சுகாதார அமைப்பு 1950ல் நிறுவப்பட்டதை இந்த தினம் நினைவுகூருகிறது. 1948ல் இருந்து ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
11 அதிகாரப்பூர்வ உலக சுகாதார பிரச்சாரங்களில் ஒன்றாக 1948ல் முதல் உலக சுகாதார மாநாடு நடைபெற்ற போது உலக சுகாதார தினத்தை ஏப்ரல் 7ஆம் தேதி கடைபிடிக்க முடிவு செய்யப்பட்டது. பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றைத் தீர்ப்பதற்கான ஆதரவைத் பெறவும் இந்த தினத்தில் முடிவு செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டுகளில் ஏப்ரல் 7ஆம் தேதியன்று மனநலன், தாய் மற்றும் குழந்தை பராமரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளன. இந்த நாளில் பல்வேறு வகையான உடல்நலப் பிரச்சினைகள், மனநலன் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தி மக்களுக்குக் கற்பிப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகள் திட்டமிடப்படுகின்றன.
இந்த ஆண்டு உலக சுகாதார தினத்தின் கருப்பொருள் 'எனது ஆரோக்கியம், எனது உரிமை' ஆகும். அதாவது அத்தியாவசிய சுகாதார சேவைகளை பெறுவது ஒருவரின் உரிமை சார்ந்தது என எடுத்துக்காட்டுகிறது. ஆரோக்கியத்திற்கான பொருளாதாரம் பற்றிய உலக சுகாதார அமைப்பின் கூற்றுபடி குறைந்தபட்சம் 140 நாடுகள் தங்கள் அரசியலமைப்பில் ஆரோக்கியத்தை மனித உரிமையாக அங்கீகரித்துள்ளன. இன்னும் பல நாடுகள் தங்கள் மக்களுக்கு சுகாதார சேவைகளை அணுகுவதற்கான உரிமையை உறுதிப்படுத்த சட்டங்களை நிறைவேற்றவில்லை.
இந்த ஆண்டின் கருப்பொருள் பல விஷயங்களை உள்ளடக்கியது. அனைவருக்கு எல்லா இடங்களிலும் தரமான சுகாதார சேவைகள், கல்வி, பாதுகாப்பான குடிநீர், சுத்தமான காற்று, நல்ல ஊட்டச்சத்து, சுகாதாரமான வசிப்பிடம், பாதுகாப்பான பணியிடம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றை உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]