உணவியல் நிபுணரான டெஸ்டினி மூடி கூறிய ஆலோசனையில் சில பயனுள்ள பானங்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். இவை தொப்பை கொழுப்பை எரிக்க உதவுகிறது மற்றும் உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்க்கப்படும்போது குறிப்பிடத்தக்க தாக்கத்தை அளிக்கிறது.
மேலும் படிக்க: வெள்ளை பூசணி பலனை முழுமையாக அனுபவித்தால் நீங்கள்தான் ஆரோக்கியமானவர்கள்
EGCG (epigallocatechin gallate) இருப்பதால், க்ரீன் டீ குடிப்பது தொப்பையைக் குறைக்க உதவுகிறது. மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து கிரீன் டீ குடித்து வந்தால் இடுப்பு சுற்றளவு குறைக்க வழிவகுக்கிறது. தொப்பை கொழுப்பைக் குறைப்பது மட்டுமல்லாமல் உடலில் உள்ளே இருக்கும் உறுப்புகளைச் சுற்றியுள்ள உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைப்பதற்கு உதவியாக இருக்கிறது. இதுபோன்ற உள்ளுறுப்பு கொழுப்புகள் நாள்பட்ட நோய்களுக்கு வழிவகுக்கிறது
உணவில் இஞ்சியை சேர்த்துக்கொள்வதால் உடலில் முக்கிய சேர்மங்களான ஜிங்கரோன் மற்றும் ஷோகோல்கள் சரியாக செயல்பட உதவுகிறது, இது தொடர்ந்து தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. கொழுப்பை எரிக்கும் நன்மைகளைத் தவிர, இஞ்சி குமட்டலைப் போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்.
குறிப்பு: இந்த இஞ்சி டீயை பகல் அல்லது இரவின் எந்த நேரத்திலும் குடிக்கலாம். இது செரிமானத்திற்கு உதவுகிறது மற்றும் தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
புரோட்டீன் ஷேக்குகளை குடிப்பது எடை இழப்புக்கு உதவுகிறது. நீங்கள் தேர்வு செய்யும் 25-கிராம் புரோட்டீன் ஷேக்கில் சுமார் 100 கலோரிகள் இருக்க வேண்டும். புரோட்டீன் ஷேக்குகள் உணவுக்கு இடையில் ஒரு சிறந்த தேர்வாக இருக்கலாம், சிற்றுண்டியாக அல்லது சிறிய உணவுகளுடன் சேர்த்து அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கவும். பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. புரோட்டீன் ஷேக் நன்மைகளை முழமையாக பெற குறைந்த அளவு சர்க்கரைகள், இயற்கை பொருட்கள் கொண்ட ஷேக்ஸ் பொடிகளைத் தேர்ந்தெடுக்கவும். நீ
மஞ்சள் கலந்த பானங்கள் நமது கலாச்சாரங்களில் பிரபலமான ஒரு பாரம்பரிய பானமாகும். மஞ்சளில் குர்குமின் உள்ளதால் இரத்த சர்க்கரையை சீராக்க உதவுகிறது. அதன் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. குர்குமின் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்த சேர்மங்களை தவறாமல் உட்கொள்வது உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. இது இடுப்புக்கு விரிவடைவதற்கு பங்களிக்கிறது. கூடுதலாக பாலில் உள்ள புரதம் பசியைத் தடுக்க உதவுகிறது.
புதினா இரைப்பைக் குழாயில் உள்ள தசைகளை ஆற்றவும், சீரான செரிமானத்தை ஊக்குவிக்கவும் மற்றும் வீக்கத்தைக் குறைக்கவும் உதவுகிறது. புதினா பசியைக் கட்டுப்படுத்தவும் உதவும். இது கலோரி உட்கொள்ளலை நிர்வகிப்பதை எளிதாக்குகிறது. கூடுதலாக இது அடிப்படையில் கலோரி இல்லாதது உடல் கொழுப்பை நிர்வகிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
மேலும் படிக்க: யாருக்கெல்லாம் ஐஸ் குளியல் நன்மையை தருகிறது, பாதகத்தை ஏற்படுத்துகிறது தெரியுமா?
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]