Ear Health : காதுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க 3 எளிய குறிப்புகள்!

உடலின் முக்கிய உறுப்பான காதுகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க இப்பதிவில் பகிரப்பட்டுள் குறிப்புகள் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்…

ear health protection ayurvedic tips

மனித உடலில் உள்ள மிகவும் முக்கியமான, அதேசமயம் உணர்திறன் வாய்ந்த உறுப்புகளில் காதும் ஒன்றாகும். பெரும்பாலும் காதுகளில் வலி அல்லது தொற்று ஏற்பட்டால் மட்டுமே அதன் மீது கவனம் அல்லது அக்கறை செலுத்துகிறோம். ஆனால் உடலின் மற்ற பாகங்களை போலவே காதுகளையும் கவனித்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காதுகளில் ஏற்படக்கூடிய பல பிரச்சனைகளை தடுக்கலாம்.

காதுகளில் ஆரோக்கியத்தை எவ்வாறு பராமரிப்பது? இதற்கான விடையை ஆயுர்வேத நிபுணரான வரலக்ஷ்மி மந்த்ரா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.

ஹெட்போன்கள் பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளவும்

ayurvedic tips for ear health

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானவர்களும் ஹெட்ஃபோன்களை (புளூடூத்) பயன்படுத்துகின்றனர். இதில் ஒரு சிலர் பாடல்களைக் கேட்க, வீடியோ பார்க்க, அழைப்புகளில் பேச வேண்டும் என்றால் மட்டுமே ஹெட்ஃபோன்களைப் பயன்படுத்துகிறார்கள். மறுபுறம் 24 மணி நேரத்தில் 14-15 மணிநேரமும் ஹெட்ஃபோன்களை பயன்படுத்துபவர்களும் இருக்க தான் செய்கிறார்கள்.

நீங்கள் தினமும் புளூடூத்தை அதிகமாக பயன்படுத்துபவராக இருந்தால் இனி அதை போதுமானவரை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். மேலும் டாக்டர் வரலட்சுமி அவர்களின் கருத்துப்படி ஹெட்போன்களை அதிகம் பயன்படுத்துவதால் கேட்கும் திறன் குறைகிறது. கட்டாய தேவைகளுக்காக ஹெட்ஃபோன்களை பயன்படுத்தினாலும், ஒலியின் அளவை 60 சதவீதத்திற்கும் குறைவாக வைத்து கொள்ளும்படி மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

காதுகளை சுத்தமாக வைத்துக் கொள்ளவும்

மற்ற உடல் பாகங்களை போலவே காதுகளையும் சுத்தம் செய்ய வேண்டியது அவசியம். இதை செய்ய தவறினால் அழுக்குகள் சேர்ந்து, அடர்ந்த அடுக்குகளாக மாறி பல பிரச்சனைகளை உண்டாக்கலாம். மேலும் காதுகளை சுத்தம் செய்ய ஹேர் பின், சாவி போன்ற விஷயங்களை பயன்படுத்துவது முற்றிலும் தவறானது. குளித்து முடித்த பிறகு சுத்தமான இயர் பட்ஸ் அல்லது காட்டன் துணியால் காதுகளின் வெளிப்புறத்தில் இருக்கும் அழுக்குகளை சுத்தம் செய்யலாம். தேவைப்பட்டால் காதுகளை சுத்தம் செய்ய மருத்துவரின் உதவியையும் நாடலாம்.

ear care tips

விமான பயணத்தின் போது காதுகளை கவனித்துக் கொள்ளவும்

விமானப் பயணத்தின் போது விமானம் புறப்படும் பொழுதும், தரையிறங்கும் பொழுதும் காதுகள் அடைக்கலாம். இந்த காற்றழுத்தத்தினால் காது மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த அழுத்தத்தை குறைக்க புறப்படும் பொழுதும் இறங்கும்பொழுதும் காதுகளை மூடிக்கொள்ளலாம். நீங்கள் விரும்பினால் இந்த சமயத்தில் சூயிங்-கம் மெல்லலாம் என மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

மருத்துவரின் அறிவுரை படி, இரவு தூங்க செல்வதற்கு முன் 2 சொட்டு ரோஸ்வுட் எண்ணெயை காதில் போட வேண்டும். இது பல காது பிரச்சனைகளை தடுக்கிறது. இது தவிர சத்தம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: ஆயுர்வேதத்தின் படி இந்த 3 பழங்களும் அதீத மருத்துவ குணங்கள் நிறைந்ததாக சொல்லப்படுகிறது!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP