Breast Milk Improving Tips : தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க இந்த 2 குறிப்புகளை பின்பற்றினால் போதும்!

தாய்ப்பால் சுரைப்பை அதிகரிப்பதற்கான வழிகளை தேடுகிறீர்களா? இப்பதிவில் பகிரப்பட்டுள்ள இரண்டு குறிப்புகளும் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்…

expert tips to improve breast milk

குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட ஒரு சிறந்த உணவு இருக்கவே முடியாது. இதில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் இருக்கும். குழந்தை பிறந்ததிலிருந்து 6 மாதங்கள் நிறைவடையும் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் ஒரு சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரப்பதில்லை. மன அழுத்தம், சர்க்கரை நோய், தைராய்டு, உயர் இரத்த அழுத்தம் போன்ற பல்வேறு உடல் நல பிரச்சனைகளாலும் தாய்ப்பால் சுரப்பு பாதிக்கப்படலாம்.

இதுபோன்ற சூழலில் எந்த உணவு அல்லது பானத்தை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குழப்பமும் உங்களுக்கு இருக்கலாம். கவலை வேண்டாம், உங்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க நிபுணர் பரிந்துரை செய்துள்ள இந்த இரண்டு குறிப்புகளையும் பின்பற்றி பயன்பெறுங்கள். இந்த தகவல்கள் யாவும் மருத்துவர் ஷீபா மிட்டால் அவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது.

அடிக்கடி தாய்ப்பால் கொடுக்கவும்

how to increase breast milk supply in women

உங்களால் முடிந்தவரை குழந்தைக்கு ஒரு நாளில் பலமுறை தாய்ப்பால் கொடுக்க முயற்சி செய்யுங்கள். ஆரம்பக் கட்டத்தில் குழந்தை அதிகமாக தூங்கும்பொழுது இதை செய்வது கடினமாக இருக்கலாம். இருப்பினும் சரியான இடைவெளிகளில் குழந்தைக்கு தவறாமல் பால் கொடுக்கவும். ஏனெனில் நீங்கள் ஒவ்வொரு முறை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுதும், மார்பகங்கள் ஹார்மோன்களை வெளியிடுகின்றன. இந்த ஹார்மோன்கள் தாய்ப்பால் சுரப்பை மேம்படுத்தும்.

ஆகையால் நீங்கள் குழந்தைக்கு எவ்வளவு தாய்ப்பால் கொடுக்கிறீர்களோ, அதற்கு ஏற்ப உங்கள் குழந்தையின் தேவைக்கு ஏற்ற பாலும் சுரக்கத் தொடங்கிவிடும்.

போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும்

breast milk improving tips

குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் தாய்ப்பாலில் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். போதுமான அளவு தண்ணீர் குடிக்காத நிலையில் தாய்ப்பால் சுரப்பு பாதிக்கப்படலாம்.

இதனுடன் குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுத்த பிறகும் உடலில் நீர் பற்றாக்குறை ஏற்படும். உங்களை நீரேற்றமாக வைத்துக் கொள்வதன் மூலம் தாய்ப்பால் சுரப்பையும் மேம்படுத்தலாம்.

குறிப்பு

உங்களுக்கு தாய்ப்பால் கொடுக்க சிரமமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் உற்பத்தி பற்றிய கவலை அதிகமாக இருந்தால் மருத்துவரை உடனடியாக ஆலோசிக்க வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: கண்களின் ஆரோக்கியம் காக்கும் அற்புத உணவுகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP