Glowing Skin Yoga : முகம் ஜொலி ஜொலிக்க, இந்த யோகாவை செய்தால் போதும்!

Vakrasana Benefits : இயற்கையான முகப்பொலிவு என்றுமே அழகு தான். மேக் இல்லாமலும் முகம் தங்கம் போல் ஜொலி ஜொலிக்க இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள யோகாசனத்தை தினமும் பயிற்சி செய்யுங்கள்…

vakrasana benefits for health

Skin Glow Yoga : இன்றைய வாழ்க்கை சூழிலில் மாசு, மனஅழுத்தம், வாழ்க்கைமுறை மாற்றம், உணவுப்பழக்கவழக்கம் போன்ற பல காரணங்களால் சருமமும், ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது. சரும அழகை பராமரிக்க செயற்கையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையான வழியை தேர்வு செய்வதே சிறந்தது. இவ்வாறு செய்வதால் நிரந்தர பலன்களையும் பெற முடியும்.

பொலிவிழந்த முகத்திற்கு உயிர் கொடுத்து மீண்டும் பிரகாசிக்க செய்ய வேண்டுமா? இதற்கு நீங்கள் ஒரு ருபாய் கூட செலவு செய்ய வேண்டிய அவசியமே இல்லை. இது ஒரு சில அழகு சாதன பொருட்களை போல எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. உங்கள் முகம் ஜொலி ஜொலிக்க உடற்பயிற்சி நிபுணரான ஸ்மிருதி அவர்கள் பரிந்துரை செய்யும் இந்த யோகாசனத்தை பயிற்சி செய்யலாம். இந்த யோகாசனம் பற்றிய தகவல்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

பளபளப்பான சருமம் பெற வக்ராசனம்

vakrasana benefits for skin

இந்த எளிமையான யோகா பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் பல நன்மைகளை பெறலாம். இது உடலுக்கு நெகிழ்வு தன்மையை கொண்டு வருகிறது. வக்ராசனம் செய்வது கல்லீரல், சிறுநீரகம், கணையம், வயிறு, குடல் உட்பட உடலின் பல்வேறு உறுப்புகளுக்கு நன்மை பயக்கிறது. இயற்கையான சரும பொலிவு பெற பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி வக்ராசனத்தை தினமும் பயிற்சி செய்யவும்.

வக்ராசனம் செய்வது எப்படி?

  • இந்த ஆசனம் செய்வதற்கு முதலில் கால்களை நீட்டி உட்காரவும்.
  • பின்னர் உங்களுடைய வலது காலை மட்டும் மடக்கி, பாதத்தை இடது முழங்காலுக்கு அருகில் வைக்க வேண்டும்.
  • உடலை வலது பக்கமாக திருப்பவும்.
  • இப்போது உங்களுடைய இடது கையை வெளிப்புறமாக கொண்டு சென்று, வலது காலின் பெருவிரலுக்கு மேல் வைக்க வேண்டும்.
  • உடலை ஆதரிக்க வலது கையை பின்னால் வைத்து கொள்ளவும்.
  • 30 வினாடிகளுக்கு இந்த தோரணையில் இருக்க முயற்சி செய்யவும்.
  • பின்னர் பொறுமையாக இயல்பு நிலைக்கு திரும்பலாம்.
  • சிறிது நேரம் ஓய்விற்குப் பிறகு இதே முறையை பின்பற்றி இடது பக்கத்திலும் பயிற்சி செய்யவும்.

வக்ராசனத்த்தை தினமும் பயிற்சி செய்து வர பின்வரும் நன்மைகளையும் பெறலாம்…

vakrasana benefits and procedure

  • இந்த பயிற்சியானது சிறுநீரக பகுதிக்கு சீரான ஆக்ஸிஜன், ஊட்டச்சத்துக்கள் மற்றும் இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. இது சிறுநீரக மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும். இதை செய்து வர சிறுநீர் பாதை நோய்தொற்றையும் தடுக்கலாம்.
  • வக்ராசனத்தை தொடர்ந்து செய்து வந்தால் முதுகு வலி, தலைவலி மற்றும் கழுத்து வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
  • வக்ராசனம் உடலின் விறைப்பை குறைத்து அதன் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கிறது. விறைப்பான உடல் வாகு உள்ளவர்களுக்கு வக்ராசனம் பரிந்துரைக்கப்படுகிறது.
  • வஜ்ராசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் தொப்பை கொழுப்பையும் குறைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபின் அதிகரிக்க, எலும்புகள் வலு பெற முளைகட்டிய ராகி சாப்பிடுங்கள்!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source: freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP