வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் வாழ உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டியது அவசியம். " ஹெல்த் இஸ் வெல்த் " என்று ஆங்கில பழமொழிக்கு இணங்க ஆரோக்கியமான உடலே உண்மையான செல்வமாகும். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழ்வது ஒரு வரம்! இந்த வரத்தை நீங்களும் பெற விரும்பினால் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரக்கூடிய உணவுகளை உங்கள் தினசரி உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஆரோக்கியமான உணவு, தினசரி உடல் செயல்பாடு அல்லது உடற்பயிற்சி போன்ற விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வந்தால் நோய்கள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். அப்படி நாம் சேர்த்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவு தான் முளைகட்டிய ராகி. ராசியை 6-8 மணி நேரங்களுக்கு ஊற வைத்து, பின்பு தண்ணீரை வடித்து விட்டு ராகியை ஒரு வெள்ளை துணியில் கட்டி வைக்க வேண்டும். உங்கள் தேவைக்கு ஏற்ப 1-2 நாட்களுக்கு ராசியை முளைகட்ட விடலாம். அவ்வப்போது தண்ணீர் மட்டும் தெளித்தால் போதும். சிறிய ராசியில் இருந்து எட்டிப் பார்க்கும் இந்த அழகிய முளைகளை காண இரு கண்கள் போதாது. முளைகட்டிய ராகியை இப்படி நீங்களே வீட்டில் செய்து சுவைத்துப் பாருங்கள். மனமும் நிறையும் உங்கள் ஆரோக்கியமும் செழித்திடும்!
இந்த பதிவும் உதவலாம்: 5 கிலோ வரை எடையை குறைக்கலாம், அவலை இப்படி சமைத்து சாப்பிடுங்க!
சுவையும் சத்துக்களும் நிறைந்த முளைகட்டிய ராகியின் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் படித்தறியலாம்.
செரிமான ஆரோக்கியத்திற்கு நல்லது
குளிர்காலங்களில் செரிமான பிரச்சனைகள் இயல்பை விட கொஞ்சம் அதிகமாகவே இருக்கலாம். மேலும் செரிமான பிரச்சனைகள் மலச்சிக்கல் போன்ற நிலைகளை ஏற்படுத்தும். இந்நிலையில் நார்ச்சத்து நிறைந்த முளைகட்டிய ராகியை உங்கள் காலை உணவில் சேர்த்து வர, செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம். இதனுடன் அன்றைய நாள் முழுவதும் ஆற்றலுடன் சுறுசுறுப்பாக செயல்படலாம்.
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
குறைந்த உடல் செயல்பாடு, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்க வழக்கங்களால் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. இது போன்று செயல்பாடுகள் இதய ஆரோக்கியத்திற்கும் ஏற்றது அல்ல. இந்நிலையில் இதய தமனிகளில் ஏற்படும் அடுப்பை தடுக்கவும், இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ளவும் முளைகட்டிய ராகியை உங்கள் உணவு வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம். இது தமனிகளில் கொழுப்பு படிவதை தடுத்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும்
இன்றைய காலகட்டத்தில் பலரும் சர்க்கரை நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு இல்லை என்றாலும் ஆரோக்கியமான உணவு முறை, மாத்திரைகள் மற்றும் உடற்பயிற்சி மூலம் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு ராகி ஒரு வரப் பிரசாதம் என்றே சொல்லலாம். இதில் நிறைந்துள்ள அதிகப்படியான நார்ச்சத்து இரத்த சர்க்கரையின் அளவுகளை கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
உடல் எடையை குறைக்க உதவும்
உடல் எடையை குறைக்க சமச்சீரான உணவை எடுத்துக் கொள்ளும்படி நிபுணர்களும் பரிந்துரை செய்கிறார்கள். எனவே நார்ச்சத்தும் ஊட்டச்சத்துக்களும் நிறைந்த ராகி எடை இழப்புக்கான சிறந்த தேர்வாக இருக்கும். இதை காலை உணவில் சேர்த்து வர கொழுப்பை விரைவில் குறைத்து நல்ல ஃபிட்டான உடல் அழகை பெறலாம்.
இரும்புச்சத்து நிறைந்தது
பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களில் இரும்பு சத்தும் ஒன்று. மாதவிடாய் நாட்களில் வெளியேறும் இரத்தத்தை ஈடு செய்யும் வகையில் இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதை செய்து வந்தால் இரத்த சோகையை தடுக்கலாம். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் முளைகட்டிய ராகியை வாரத்திற்கு 1-2 முறையாவது சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம்.
இந்த பதிவும் உதவலாம்: தேங்காயை ஏன் பச்சையாக மென்று சாப்பிட வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation