வீட்டு விசேஷங்கள் தொடங்கி சமையல் வரை பல தேவைகளுக்காக தேங்காயை பயன்படுத்துகிறோம். மிகவும் புனிதமான இந்த தேங்காயில் தனித்துவமான பல நன்மைகள் நிறைந்துள்ளன. அம்மா தேங்காய் துருவும் பொழுது, பச்சை தேங்காயை கை நிறைய அள்ளி வாய் நிறைய சாப்பிட்ட நாட்கள் மிகவும் அழகானவை. ஆனால் இன்றோ சமையலுக்கு தேங்காயை துருவி பயன்படுத்துபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். மிக்ஸி நம் வேலையை சுலபமாக்கி விட்டாலும், தேங்காய் சாப்பிடும் பழக்கத்தை நாம் மறந்து விட கூடாது. தேங்காயை உடைத்த பின், வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஒரு சிறிய துண்டு தேங்காயை பச்சையாக சாப்பிட கொடுக்கலாம்.
தேங்காயை பச்சையாக சாப்பிடுவது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் அற்புதமான பல நன்மைகளை கொடுக்கும். இதனுடன் சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியமும் மேம்படும். தேங்காயை பச்சையாக சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்…
இந்த பதிவும் உதவலாம்: குறைந்த விலையில் நிறைந்த பலன்கள் தரும் ஊற வைத்த கருப்பு கொண்டைக்கடலை!
தேங்காயில் இரும்பு சத்து, பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம் மற்றும் மெக்னீசியம் போன்ற பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுகின்றன.
இன்றைய வாழ்க்கை சூழலில் பலரும் மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளால் அவதிப்படுகிறார்கள். நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் நார்ச்சத்துக்கள் இல்லாத நிலையில் மலச்சிக்கல் ஏற்படுகிறது. சமைக்காத பச்சை தேங்காயில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 61% நார்ச்சத்துக்களால் ஆன தேங்காய் வயிற்றுக்கு உகந்தது. இது செரிமான பிரச்சனைகளை தடுத்து குடல் இயக்கத்தை எளிதாக்குகிறது.
நார்ச்சத்துக்கள் நிறைந்த தேங்காய் உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். இதன் மூலம் ஆரோக்கியமற்ற உணவு உட்கொள்ளலை கட்டுப்படுத்தலாம். இதை பச்சையாக சாப்பிடுவது உடலில் உள்ள கொழுப்பை வேகமாக எரிக்க உதவுகிறது.
மனிதனுக்கு காசு பணத்தை விட நல்ல ஆரோக்கியமே முக்கியமானது என்பதை கொரோனா உலகிற்கு புரிய வைத்துவிட்டது. இந்நிலையில் நம் உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருப்பதன் மூலம் நோய் தொற்றுகளை தடுக்க முடியும். தேங்காயில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகள் பல உடல்நல பிரச்சனைகளை தடுக்கின்றன. மேலும் சுவாச பிரச்சனைகள் உள்ளவர்களுக்கும் பச்சை தேங்காய் சிறந்தது.
பச்சை தேங்காயில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களை ஆக்சிஜனேற்ற சேதத்தில் இருந்து பாதுகாக்கின்றன. இது மன ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.
பச்சை தேங்காயில் உள்ள கொழுப்புகள் சருமம் மற்றும் முடிக்கு சிறந்தது. இது சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதுடன், அதை மென்மையாகவும் ஈரத்தன்மையுடனும் வைத்திருக்க உதவுகிறது. சருமத்தில் ஏற்படும் வறட்சி இளம் வயதிலேயே வயதான தோற்றத்தை கொடுக்கும். தேங்காயை பச்சையாக சாப்பிட்டு வர முகத்தில் ஏற்படும் வறட்சியை போக்கலாம். இதனுடன் முகப்பரு போன்று சரும பிரச்சனைகளையும் கட்டுப்படுத்த முடியும்.
தேங்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உச்சந்தலை தொடர்பான பிரச்சனைகளை தடுக்கவும் உதவுகின்றன.
ஆரோக்கியமான இதயத்திற்கு நம் உடலில் கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுக்குள் இருக்க வேண்டியது அவசியம். தேங்காயை பச்சையாக சாப்பிடுவது உடலின் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவுகிறது. இது இதய நோயின் அபாயத்தை குறைக்கிறது.
இந்த பதிவும் உதவலாம்: 5 கிலோ வரை எடையை குறைக்கலாம், அவலை இப்படி சமைத்து சாப்பிடுங்க!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]