Garlic Milk : இதயத்திற்கு உகந்த பூண்டு பால், கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க இது தான் பெஸ்ட்!

கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, ஆரோக்கியமான உடலை பெற கால்சியம் மற்றும் ஆன்டி பாக்டீரியல் பண்புகள் நிறைந்த பூண்டு பாலை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்த்துக் கொள்ளுங்கள்….

garlic milk for cholesterol control

Garlic Milk Benefits : குறைந்த உடல் செயல்பாடு, ஆரோக்கியமற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் கொலஸ்ட்ரால் உட்பட பல உடல் நல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இரத்தத்தில் காணப்படும் கொலஸ்ட்ரால் எனும் கொழுப்பானது உடல் செயல்பாடுக்கு மிகவும் அத்தியாவசியமானது.

கொலஸ்ட்ராலின் அளவுகள் அதிகரிக்கும்பொழுது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் போன்ற பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. இந்நிலையில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் ஒரு அற்புதமான வீட்டு வைத்தியத்தை இன்றைய பதிவில் பார்க்கப் போகிறோம். இந்த குறிப்புகளை ஆயுர்வேத நிபுணரான ஐஸ்வர்யா சந்தோஷ் அவர்கள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

நிபுணர் கருத்து

நமது சமையலறையில் கிடைக்கக்கூடிய பால் மற்றும் பூண்டில் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. பூண்டில் வைட்டமின் B, C, செலினியம், மெக்னீசியம், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களுடன் ஆன்டி பாக்டீரியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் காணப்படுகின்றன. அதேசமயம், பாலில் புரதம் கால்சியம், வைட்டமின் A, D, K, E போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளன.

இந்த இரண்டு பொருட்களையும் தனித்தனியாக பயன்படுத்தி இருப்போம். ஆனால் இவ்விரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் முதல் கொலஸ்ட்ரால் வரை பல உடல் நல பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். பூண்டு பால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சிறந்தது.

garlic milk cholesterol

கெட்ட கொலஸ்ட்ரால் குறைய பூண்டு பால்

டாக்டர் ஐஸ்வர்யா சந்தோஷ் அவர்களின் கருத்துப்படி, பூண்டு பால் இதய நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இது இரத்த நாளங்களில் படிந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது.

பூண்டு பால் குடிப்பது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் கெட்ட கொழுப்பை நீக்க உதவுகிறது. மேலும் நல்ல கொழுப்பை மேம்படுத்துவதன் மூலம் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.

பூண்டில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இதய நோய்களைத் தடுக்க உதவுகின்றன. மேலும், பூண்டில் உள்ள அல்லிசின் எனும் தனிமம் இரத்த நாளங்களை விரிவுப்படுத்தி சீரான இரத்த ஓட்டத்திற்கு வழி வகுக்கிறது. இதய செயல்பாட்டை அதிகரிக்கும் இந்த பூண்டு பாலை வீட்டிலேயே தயார் செய்து குடிக்கலாம்.

பூண்டு பால் செய்முறை

  • ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர், 10 இடித்த பூண்டு மற்றும் 100 மில்லி பால் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • பூண்டு நன்கு வெந்து, கலவை பாதியாக வற்றும் வரை கொதிக்க வைக்கவும்.
  • பூண்டு பாலை வடிகட்டிய பிறகு எடுத்துக் கொள்ளலாம் அல்லது பூண்டுடன் சேர்த்தும் குடிக்கலாம்.
  • காலை 11 மணி அல்லது மாலை 4 மணிக்கு 100 மில்லி பூண்டு பாலை குடிக்கலாம்.

இதையும் கவனித்துக் கொள்ளுங்கள்

  • எப்போதும் ஃபிரஷாக தயாரித்த பூண்டு பாலை குடிப்பது நல்லது. பூண்டு பாலை தயார் செய்த பின், நீண்ட நேரம் கழித்து குடிப்பதை தவிர்க்கவும்.
  • உடலில் அதிக பித்தம் உள்ளவர்கள் அல்லது அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் பூண்டு பாலை தவிர்க்க வேண்டும்.
  • உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனை இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் பூண்டு பாலை எடுத்துக் கொள்வது நல்லது.

பூண்டு பாலின் மற்ற நன்மைகள்

drinking garlic milk for bad cholesterol

  • பூண்டு பால் சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது.
  • வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி மலச்சிக்கலுக்கு நல்ல நிவாரணம் தரும்.
  • இதில் உள்ள ஆன்டி பாக்டீரியல் பண்புகள் வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும்.
  • உடலின் வாத தோஷத்தை சமநிலையாக வைத்துக் கொள்ள உதவும்.
  • இதில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலியை குறைக்க உதவும்.
  • பூண்டு பாலில் உள்ள கால்சியம் சத்துக்கள் வலுவான எலும்புகள் மற்றும் ஆரோக்கியமான உடலை பெற உதவுகின்றன.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதன் மூலம் கொழுப்பை குறைக்கிறது.
  • இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன.
  • சரும பிரச்சனைகள் நீங்கி பளபளப்பான சருமத்தை பெறலாம்.
  • சளி மற்றும் இருமலுக்கும் நல்ல நிவாரணம் கொடுக்கும்.

கெட்ட கொழுப்பை குறைத்து, நல்ல ஆரோக்கியமான உடலை பெற பூண்டு பாலை உங்கள் தினசரி உணவு முறையில் சேர்த்து பயன்பெறுங்கள்…

இந்த பதிவும் உதவலாம்: உதிர்ந்த முடி மீண்டும் வளர, சாலியா விதைகளை இப்படி பயன்படுத்துங்க

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP