herzindagi
halim aaliv seeds usage for hair

Halim Seeds Hair Growth : உதிர்ந்த முடி மீண்டும் வளர, சாலியா விதைகளை இப்படி பயன்படுத்துங்க

முடி உதிர்வால் முடி மெலிந்து உயிரற்று காணப்படுகிறதா? நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த வீட்டு வைத்தியத்தை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-09-13, 05:00 IST

இன்றைய வாழ்க்கை சூழலில் ஆண், பெண் இருவருக்கும் அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது. முடி உதிர்வு அதிகரிக்கும் பொழுது பெண்களுக்கு உச்சந்தலையை சுற்றியுள்ள பகுதிகளில் முடி குறைவாகவும், ஆண்களுக்கு வழுக்கையும் ஏற்படலாம். முடி உதிர்வை தடுக்கவும் கொட்டிய இடத்தில மீண்டும் முடி வளரவும், நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த வீட்டு வைத்தியம் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

முடி உதிர்வதற்கான வீட்டு வைத்தியத்தை ஊட்டச்சத்து நிபுணரான ருஜூதா திவாகர் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நிபுணரின் பதிவில், வழுக்கை தலை உடைய ஒரு நபர் தன்னுடைய தங்கையின் அறிவுரைப்படி ஒரு வீட்டு வைத்தியத்தை பின்பற்றி வந்துள்ளார். அவருக்கு முடி உதிர்வு குறைந்து, புதிதாக முடி வளர தொடங்கியுள்ளது. தன் தங்கையின் வீட்டு வைத்தியத்தை பின்பற்றிய அவர் தன்னுடைய இழந்த முடியை மீண்டும் பெற்றுள்ளார். வழுக்கை தலையில் முடி வளர்ந்த அந்த அதிசய புகைப்படத்தையும் நிபுணர் பதிவு செய்திருந்தார்.

அந்த நபர் பின்பற்றிய வீட்டு வைத்தியத்தை நீங்களும் தெரிந்து கொள்ள வேண்டுமா? பதிவை தொடர்ந்து படியுங்கள் இதில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகள் மற்றும் குறிப்புகளை கவனமாக பின்பற்றவும்.

இந்த பதிவும் உதவலாம்: ஹீமோகுளோபின் அதிகரிக்க, எலும்புகள் வலு பெற முளைகட்டிய ராகி சாப்பிடுங்கள்!

முடி உதிர்வுக்கு சாலியா விதைகள் 

சாலியா விதைகளில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்திற்கு அதிக நன்மைகளை தருகின்றன. இதில் புரதம், இரும்புச்சத்து, போலிக் ஆசிட், நார்ச்சத்து போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. சாலியா விதைகளில் உள்ள பண்புகள் முடி உதிர்வை குறைக்க உதவுகின்றன. முடி உதிர்வை எதிர்கொள்பவர்கள் பின்வரும் முறையில் சாலியா விதைகளை தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

halim aaliv seeds milk

சாலியா விதை சாப்பிடும் முறை

  • சிறிதளவு தண்ணீரில் 5-10 சாலியா விதைகளை சேர்த்து எட்டு மணி நேரங்களுக்கு ஊற வைக்க வேண்டும். இரவு தூங்கச் செல்வதற்கு முன் பாலுடன் இந்த விதைகளை சேர்த்து குடிக்க வேண்டும். முடி உதிர்வால் அவதிப்படும் ஆண், பெண் இருவரும் இந்த குறிப்பை பின்பற்றலாம்.
  • இதை பாலுடன் சேர்த்து குடிக்க விருப்பமில்லாதவர்கள் சாலியா விதைகளை கொண்டு லட்டு தயார் செய்து சாப்பிடலாம்.
  • சாலியா விதைகளுடன் கொப்பரை தேங்காய், நெய் மற்றும் வெல்லம் சேர்த்து லட்டு தயார் செய்து சாப்பிடலாம்.
  • சாலியா விதைகள் பார்ப்பதற்கு ஆளி விதைகளை போல தோன்றினாலும். இவை இரண்டும் வேறு வேறு வேறு என்பதை இங்கு தெளிவு படுத்துகிறோம்.

சாலியா விதையின் மற்ற நன்மைகள்

  • சாலியா விதைகள் காயங்களை விரைவில் குணப்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது.
  • குடல் ஆரோக்கியத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும்.
  • இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

halim aaliv seeds dietitian rujutha diwakar

  • இதில் சக்தி வாய்ந்த பூஞ்சை எதற்கு பண்புகள் நிறைந்துள்ளன.
  • உடலின் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவும்.
  • இது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலின் அளவுகளை அதிகரிக்கிறது.
  • சாலியா விதைகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்தும்.
  • இதில் உள்ள பண்புகள் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

சாலியா விதைகளில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருந்தாலும், இதை சிறிய அளவுகளில் மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 5-10 விதைகளுக்கு மேல் எடுத்துக்கொள்ள கூடாது. உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் மருத்துவரை ஆலோசனை செய்த பின் சாலியா விதைகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: அழகும் ஆரோக்கியமும் தரும் நெல்லிக்காய் தண்ணீர், தினமும் இப்படி குடித்து பாருங்க!

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:google

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]