herzindagi
image

மோரில் இதை மட்டும் கலந்து தினமும் குடிங்க, உங்கள் இடுப்பு கொழுப்பு 15 நாளில் கரைந்து விடும்

சுட்டெரிக்கும் கோடை காலம் துவங்கிவிட்டது, இந்த கோடை காலத்தில் உங்கள் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை கரைத்து உடல் எடையை குறைத்து ஆரோக்கியமாக வாழ வேண்டுமா? இந்த வெயில் காலத்தில் தினசரி மோரில் எந்த ஒரு பொருளை மட்டும் கலந்து குடியுங்கள். கோடை காலத்தை ஆரோக்கியமாக கடந்து உடல் எடையை குறைப்பீர்கள்.
Editorial
Updated:- 2025-02-23, 14:49 IST


இந்த வருடத்தின் கோடை காலம் வருவதற்கு முன்பாகவே பிப்ரவரி மாதத்திலேயே தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. குறிப்பாக பிப்ரவரி இறுதியிலேயே கோடை காலம் தொடங்கிவிட்டது என்றே நாம் சொல்லலாம், அந்த அளவிற்கு வெயில் பாட்டி வதைத்து வருகிறது. கோடைகாலத்தில் உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில இயற்கையான பானங்களை நாம் குடிக்க வேண்டும் அதில் ஒன்றுதான் மோர். பல நூற்றாண்டுகளாக மோர் தமிழர்களின் ஆரோக்கிய பானமாக கருதப்படுகிறது. இந்த மோரில், இஞ்சி கலந்து குடித்தால் உடல் எடையை நாம் தாராளமாக குறைக்க முடியும். ஏனென்றால் மோரில் உள்ள நற்பண்புகளும் இஞ்சியில் உள்ள நற்பண்புகளும் உடலில் எடையை குறைக்க பெரிதும் உதவுகிறது.

 

 

மேலும் படிக்க: ஒரே மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைக்க இந்த உணவு திட்டத்தை சமரசம் இல்லாமல் ஃபாலோ பண்ணுங்க

 


உங்கள் உடலுக்கு தேவைப்படும் அளவிற்கு சிறிய அளவில் நடை பயிற்சியும் லேசான அளவில் உடற்பயிற்சியின் தினமும் செய்து கொண்டு மோரில் இஞ்சியை எப்படி கலந்து குடித்து வந்தாலே உங்கள் உடலில் மற்றும் இடுப்பில் உள்ள கொழுப்புகள் மெழுகு போல கரைந்து விடும்.

இஞ்சி மோரும் - எடை இழப்பும்

 

mix ginger with yogurt and drink it - the belly fat will melt away in 15 days

 

  • ஆங்கிலத்தில் மோர் என்றும் அழைக்கப்படும் மோர், வெண்ணெய் மற்றும் கிரீம் நிறைந்தது. இதை குடிப்பதன் மூலம் உங்கள் எடையை பெருமளவில் குறைக்கலாம். ஆனால் அதைச் செய்வதற்கு ஒரு சரியான வழியும் இருக்கிறது.
  • குளிர்ந்த மோர் கோடையில் ஒரு இனிமையான பானமாகும். இது எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. பாரம்பரிய மோர் என்பது கிரீம் மற்றும் வெண்ணெயைக் கலந்த பிறகு எஞ்சியிருக்கும் எச்சமாகும்.
  • 100 மில்லி மோர் சுமார் 40 கலோரி ஆற்றலை வழங்குகிறது. வெண்ணெய் நீக்கப்பட்டிருப்பதால், பாலை விட இதில் கொழுப்பு குறைவாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளன. இது புரதம் மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். இதில் சிறிது அளவு சோடியம், பொட்டாசியம், வைட்டமின்கள் மற்றும் பாஸ்பரஸ் ஆகியவையும் உள்ளன.
  • மோரில் நல்ல பாக்டீரியாக்கள் மற்றும் புரதங்கள், கால்சியம், வைட்டமின்கள் பி12 மற்றும் டி ஆகியவை உள்ளன. இது பாலை விட கொழுப்பு மற்றும் கலோரிகளில் குறைவாக உள்ளது, இது எடை இழக்க விரும்புவோருக்கு ஆரோக்கியமான விருப்பமாக அமைகிறது.
  • ஒரு கப் மோரில் சுமார் 98 கலோரிகள் உள்ளன, அதே நேரத்தில் ஒரு கப் பாலில் சுமார் 146 கலோரிகள் உள்ளன. குறைந்த கலோரி விருப்பங்களைத் தேர்ந்தெடுப்பது உங்கள் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலைக் குறைப்பதால் எடை குறைக்க உதவும்.
  • இஞ்சி சாற்றை மோருடன் கலந்து குடிப்பதால் உடல் எடையை எளிதில் குறைக்கலாம். இது தவிர, நீங்கள் சீரகப் பொடியையும் கலந்து உட்கொண்டால், விரைவில் வித்தியாசத்தைக் காண்பீர்கள்.
  • கூடுதலாக, மோரில் உள்ள புரோபயாடிக்குகள் ஆரோக்கியமான குடல் பாக்டீரியாவை ஊக்குவிக்கும், இது செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு மண்டலத்தை ஆதரிக்க உதவுகிறது.
  • மோர் கால்சியம் மற்றும் பாஸ்பரஸின் நல்ல மூலமாகும். இந்த ஊட்டச்சத்துக்கள் எலும்பு வலிமையைப் பராமரிக்கவும், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றன.
  • மோர் செரிமான பிரச்சனைகளை நீக்குகிறது. இதில் உள்ள அமிலம் வயிற்றைச் சுத்தப்படுத்தி, அழுக்குகளை வெளியேற்ற உதவுகிறது. இது உடலை நச்சு நீக்கவும் உதவுகிறது.

எடை இழப்பு கோடை மோர் செய்வது எப்படி? பருகுவது எப்படி?

 

Butter_Milk_700x

 

  1. சந்தைகளில் கிடைக்கும் பால் பாக்கெட் வாங்கி அதை இரவில் காய்ச்சி வைத்து தயிராக உரை ஊற்றி வைக்கவும்.
  2. இரவு முழுவதும் நன்றாக பால் தயிராக மாறிய பின்பு, காலை 6.00 மணி அளவில் மூன்று பெரிய ஸ்பூன் தயிரை எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு, சிறிதளவு இஞ்சியை லேசாக நறுக்கி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைக்கவும்,
  3. அதை அப்படியே வடிகட்டாமல் கிளாசில் மாற்றி அப்படியே குடிக்கவும்.
  4. தேவைப்பட்டால் இஞ்சி உடன் சிறிதளவு சீரகப் பொடியை கலந்து குடிக்கலாம், இது உங்கள் உடலில் எடை குறைப்பில் விரைவான வித்தியாசத்தை பார்க்க முடியும்.


மோரும் - உடற்பயிற்சியும்

 

Untitled design - 2025-02-23T144416.141


நவீன உணவு முறை பழக்கவழக்கத்தால் பெரும்பாலான இளைஞர்கள் இளம் பெண்கள் உடல் பருமனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். உடல் எடையை குறைப்பதில் உடற்பயிற்சி மிகவும் முக்கியம் ஏனென்றால் தினமும் உட்கார்ந்த வாழ்க்கை முறையை மட்டும் வாழாமல் உடல் அசைவுகளை கொடுக்கும் வாழ்க்கை முறை கட்டாயம் நமக்கு தேவை. முடிந்தளவு தினமும் காலை எழுந்து இரண்டு கிலோமீட்டர் நடைப்பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்கள். லேசான அளவில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யத் தொடங்குங்கள். இத்துடன் இஞ்சி கலந்த மோரை 30 நாட்கள் உடற்பயிற்சி செய்து குடித்து வந்தால் இடுப்பில் உள்ள கொழுப்பு முழுவதுமாக கரைந்து உடல் எடை கட்டுக்கோப்பாக இருக்கும்.

 

மேலும் படிக்க: 35 வயது பெண்கள் நேரம் கிடைக்கும்போது இந்த 10 உடற்பயிற்சியை வீட்டில் செய்யுங்க 10 கிலோ குறைந்து ஸ்லிம் ஆகிடலாம்

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

 

 

image source: freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]