உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆசனம் கபோடாசனம். இந்த ஆசனம் ஆங்கிலத்தில் Pigeon Pose என்று அழைக்கப்படுகிறது. கபோடாசனம் செய்யும் போது உடல் முறுக்கப்படுகிறது. இந்த ஆசனம் செய்வதற்கு முன்பாக புஜங்காசனத்தை பயிற்சி ஆசனமாக செய்வது மிகவும் நல்லது.
![how to practise Kapotasana]()
- முதலில் வஜ்ராசனம் நிலையில் இருந்து தரையில் குப்புறப் படுங்கள். கைகளை மார்பு பகுதியை ஒட்டி வைக்கவும்.
- அடுத்ததாக தண்டால் அல்லது புஷ் அஃப்ஸ் எடுப்பது போல புஜங்காசனம் நிலைக்கு செல்லவும். ஆனால் தலையில் இருந்து இடுப்பு பகுதியை மட்டுமே உயர்த்த வேண்டும்.
- கைகளில் நன்கு அழுத்தம் கொடுத்து தோள் பட்டையை விரித்து தலையை பின்னே கொண்டு செல்லுங்கள்.
- இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கவும். இயல்பு நிலைக்கு திரும்பி தரையில் படுத்துவிடுங்கள்.
- ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடலாம். தற்போது கபோடாசனம் செய்யலாம்.
- பயிற்சி ஆசனத்தில் முயற்சித்ததை போல தான் கபோடாசனமும். ஆனால் இதில் தரையில் கால்களை விரித்து வைத்திருப்போம்.
- மார்பு பகுதியையொட்டி கைகளை வைத்து புஜங்காசனம் செய்யுங்கள்.
- தலையை பின்நோக்கி கொண்டு சென்று கால்களை பின்நோக்கி வளைத்து தலையை பாதத்தில் வைக்க முயற்சிக்கவும்.
- பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருங்கள். மீண்டும் ஒருமுறை செய்துவிட்டு இயல்பு நிலைக்கு திரும்புங்கள்.
- புறா பல்டி அடித்தால் எப்படி இருக்குமோ அது போல இந்த ஆசனம் செய்யும் போது உங்கள் உடல் வளைந்திருக்கும். ஆசனம் செய்யும் போது இடுப்பு பகுதியை மேலே தூக்க கூடாது.
- இதன் தளர்வு ஆசனமாக பாலாசனம் செய்யப்போகிறோம்.
- வஜ்ராசனம் நிலையில் இருந்து கைகளை மேலே உயர்த்தி அப்படியே தரையில் நீட்டி படுக்கவும்.
- முதுகுப் பகுதியை தளர்த்த இந்த ஆசனம் செய்கிறோம்.
மேலும் படிங்க உடலுக்கு சக்தியை கொடுக்கும் சந்திர பேதன பிராணயாமம்
கபோடாசனம் பயன்கள்
- இந்த ஆசனம் செய்யும் போது உங்கள் மார்புப் பகுதி விரிவடைவதால் நுரையீரல் வலுவடையும்.
- உடலின் முன்புறம், கணுக்கால், தொடைகள் மற்றும் இடுப்பு, வயிறு மற்றும் மார்பு மற்றும் தொண்டை ஆகியவற்றை நன்றாக ஸ்ட்ரெச் செய்வதால் அவை வலுவடையும்.
- முதுகு தசைகளைப் பலப்படுத்துவதோடு மடுமின்றி உடல் தோரணையும் மேம்படுத்துகிறது.
- கழுத்து உறுப்புகளைத் தூண்டுவதால் மூச்சுப் பிரச்சினை உள்ளிட்டவை சரியாக அதிக வாய்ப்புண்டு.
- படிப்படியாக ஆசனங்கள் பயிற்சி செய்த பிறகு நமக்கு நெகிழ்வுத்தன்மை கிடைக்கும். அதன் பிறகே இந்த ஆசனத்தைச் செய்ய வேண்டும்.
- முதியவர்கள் இந்த ஆசனம் செய்வதை தவிர்த்து விடுங்கள்.
மேலும் படிங்க வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆனந்த பாலாசனம்
இது போன்ற யோகா கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்து இருங்கள்.