herzindagi
how to do ananda balasana

Ananda Balasana Benefits : வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் ஆனந்த பாலாசனம்

உச்சி முதல் பாதம் வரை அனைத்து பாகங்களுக்கும் பலன் பெற தினமும் ஆனந்த பாலாசனம் செய்யுங்கள்.
Editorial
Updated:- 2024-02-14, 21:11 IST

உடல் நலனும் யோகாவும் என்ற தொடரில் நாம் அடுத்ததாகப் பார்க்கப் போகும் ஆனந்த பாலாசனம். இதற்கு ஆங்கிலத்தில் Happy baby pose என அழைக்கப்படுகிறது. எந்த ஆசனம் செய்தாலும் உங்களுக்கு உடல் பாகங்கள் வலிக்கும். ஆனால் இந்த ஆசனம் செய்யும் போது குழந்தை போல மகிழ்ச்சியாக உணர்வீர்கள். இதற்கான காரணத்தை பின்னே பார்க்கலாம். இந்த ஆசனம் நெகிழ்வுத்தன்மை, சுவாசம் மற்றும் உடல்வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மனநலத்தை மேம்படுத்துவதே இந்த ஆசனத்தின் முக்கிய பலனாகும்.

ஆசனத்தை தொடங்கும் முன்பாக பயிற்சி ஆசனம் செய்யலாம். தரையில் படுத்து கால்களை நீட்டி பத்த கோணாசனம் அதாவது பட்டாம்பூச்சி போல ஆசனம் செய்ய போகிறோம். பட்டாம்பூச்சி போல கால்களை விரித்து வைத்து கொள்ளவும். கைகளை வைத்து கால்களை அழுத்தவும். பிறப்புறுப்பு பகுதியை நன்றாக விரிக்கவும். பத்து விநாடிகளுக்கு இதே நிலையில் இருக்கவும். கால்களை நேராக நீட்டி தளர்வுபடுத்திக் கொள்ளுங்கள். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும்.

இரண்டு முறை செய்த பிறகு பயிற்சி ஆசனம் இரண்டை தொடங்கவும். தரையில் படுத்து கால்களை மட்டும் மேலே கொண்டு வரவும். கால்களை கைகளால் பிடித்து அழுத்தம் கொடுத்து இடுப்பு பகுதிக்கு கொண்டு வர முயற்சிக்கவும்.

Happy baby pose

தற்போது ஆனந்த பாலாசனத்தை தொடங்கலாம். கால்களை மடக்கி நெஞ்சின் அருகே கொண்டு வந்து அதன் பிறகு கால்களை தூக்கி இரண்டு கைகளையும் உள் வழியாக கால்களுக்குள் கொண்டு வந்து பாதங்களை பிடிக்கவும்.

மேலும் படிங்க ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் பயனளிக்கும் கூர்மாசனம்

தற்போது முழங்க கால்களை மார்பு பகுதிக்கு கொண்டு வரவும். இதே நிலையில் பத்து விநாடிகளுக்கு இருக்கவும். ஆழ்ந்த மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடவும். சிறுவயதில் குழந்தைகள் கால்களை பிடித்து வாயின் அருகே கொண்டு வருவது போலவும், கட்டை விரலை வாயால் கடிப்பது போலவும் இந்த ஆசனம் இருக்கும்.

கால்களை விரித்தே வைத்திருக்க வேண்டும். மடங்க கூடாது. இயல்பு நிலைக்கு திரும்பி தளர்த்திக்கலாம். தளர்வு பயிற்சிக்கு நேராக அமர்ந்து கைகளை மேலே உயர்த்தி தலையை தரையோடு கொண்டு வரவும்.

ஆனந்த பாலாசனம் பயன்கள்

  • இந்த ஆசனத்தின் பயிற்சி நினைவாற்றலை அதிகரிக்கும். இந்த ஆசனம் உங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும்
  • இந்த ஆசனத்தை செய்வது இரத்த அழுத்தம் குறைத்து, இதயத் துடிப்பைக் சீராக வைத்திருக்க உதவும்
  • ஆனந்த பாலாசனத்தை தொடர்ந்து செய்வது இரைப்பை அழற்சி போன்ற வயிற்று பிரச்சனைகளை சீராக்கும்.

மேலும் படிங்க நினைவாற்றலை அதிகரிக்க அர்த்த சிரசாசனம் செய்யுங்க

இது போன்ற உடல்நலன் சார்ந்த யோகா கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]