கடவுளின் சிறந்த படைப்பு பெண்கள். வலி என்று தெரிந்தும் பிரசவத்திற்கு தயாராகும் வலிமை மிக்கவர்கள் நீங்கள். எவ்வளவு வலிமையான பெண்ணாக இருந்தாலும் சரி, அவர்களுக்குள் ஒரு சிறிய மென்மையான குழந்தை தன்மையும் இருக்கும். குடும்பப் பொறுப்பில் மூழ்கி இருக்கும் நீங்கள் என்றாவது ஒருநாள் உங்களுடைய ஆரோக்கியத்தை பற்றி கவலைப்பட்டது உண்டா? நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும்.
உங்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக வைத்திருக்க தினமும் யோகா செய்வதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள். உங்களுடைய குடும்ப மற்றும் தொழில் வாழ்க்கையை மேம்படுத்த, உங்களை உள்ளிருந்து வலுவாக வைத்திருக்க யோகா செய்யலாம். மருத்துவர் திவ்யா சரத் அவர்களின் கருத்துப்படி சரியான யோகாசனங்களை சரியான முறையில் செய்து வந்தால் பல ஆரோக்கிய நன்மைகளை பெற முடியும். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, நோய்கள் அண்டாமல் இருக்க தினமும் யோகா செய்யுங்கள். இதனால் கிடைக்கக்கூடிய நன்மைகளை தெரிந்து கொள்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: 3 நாட்களில் 1 கிலோ எடையை குறைக்க வேண்டுமா, இதோ உங்களுக்கான 5 சூப்பர் டிப்ஸ்!
முழு உடலுக்கும் பயிற்சி
யோகாசனங்களை செய்யும்பொழுது உங்கள் முழு உடலும் ஈடுபடுகிறது. எந்த உடற்பயிற்சி முறையிலும் இது சாத்தியமில்லை. இது உடலுக்கு முழுமையான ஆக்ஸிஜனை வழங்கி, உள் உறுப்புகளை மேம்படுத்துகிறது. இதனால் உடலில் இரத்த ஓட்டம் சிறப்பாக இருக்கும்.
ஹார்மோன்களை சம நிலையாக வைத்துக் கொள்ளும்
யோகாவை தினமும் பயிற்சி செய்து வந்தால் ஹார்மோன் சுரப்பிகள் சீராக செயல்படும். இதன் மூலம் ஹார்மோன் சமநிலையின்மையால் ஏற்படக்கூடிய பிரச்சனைகளான தைராய்டு, உடல் பருமன், முடி உதிர்தல், ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல உடல் நல பிரச்சனையை தடுக்கலாம்.
பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கு நன்மை தரும்
உஸ்த்ராசனம் போன்ற யோகா பயிற்சிகள் பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை பலப்படுத்துகின்றன.
வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தும்
சர்வங்காசனம் எனும் யோகா பயிற்சியானது தைராய்டு சுரப்பிகளை தூண்டி வளர்ச்சிதை மாற்றத்தை மேம்படுத்துகிறது. இது மட்டுமின்றி எளிய பயிற்சியான பத்மாசனம் முதல் கடுமையான பயிற்சிகள் வரை அனைத்தும் உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் எடையை குறைக்கவும் உதவுகின்றன.
இனியும் தயக்கம் வேண்டாம். இன்றிலிருந்து யோகா செய்ய தொடங்குங்கள். நோய் நொடியின்றி நீண்ட காலம் வாழ நம்மால் முடிந்த முயற்சிகளை செய்வோம்.
இந்த பதிவும் உதவலாம்: ஆயுர்வேத மூலிகையான சீந்திலை எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation