பத்த கோணாசனம் பெண்களுக்கான சிறப்பான ஆசனம் என்று கூறப்படுகிறது. ஹிந்தி மொழியில் பத்த என்றால் பிணைக்கப்பட்ட என்றும் கோண என்றால் கோணம் என்றும் பொருள். இந்த யோகாசனம் butterfly போஸ் என்று அழைக்கப்படுகிறது. இதனை செய்வதனால் பெண்களுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் ஏற்படுகிறது. பத்த கோணாசனம் செய்வது எப்படி என்றும் அதன் பலன்கள் குறித்தும் இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த ஆசனம் படைப்புத் திறனும் மன உறுதியும் மேம்படுகின்றது. மேலும் இது மனதைப் பக்குவப்படுத்த உதவுகிறது. கர்ப்பிணி பெண்களுக்கு பத்த கோணாசனம் மிக சிறந்த ஆசனம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: வயது முதிர்வை தடுக்க உதவும் ஹலாசனம்
இந்த ஆசனத்தை செய்து வந்தால் பெண்களுக்கு மலட்டுத்தனம் நீங்கும். மேலும் பெண் பிறப்புறுப்புகளின் குறைபாடுகள் நீங்க உதவுகிறது. அதே போல சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை குறைபாடுகள் நீங்கி சிறுநீரகத்தின் செயல்பாடு சீராக அமையும். பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் இடுப்புவலி, வயிற்று வலி மற்றும் அதிக இரத்தப்போக்கையும் இந்த ஆசனம் கட்டுப்படுத்துகிறது. முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் பெண்களுக்கு இந்த ஆசனம் பெரிதும் உதவும். பத்த கோணாசனத்தை தினமும் செய்து வந்தால் பின்புற முதுகு தசைகள் வலுப்பெறும். இந்த பட்டாம்பூச்சி போஸ் கழுத்து பகுதி, முதுகு, தலை பகுதிகளை தளர்வடைய உதவுகிறது. இந்த யோகாசன பயிற்சியின்போது மூளைக்கு எளிதில் ஆக்சிஜன் சென்றடைவதால் தலைவலி பிரச்சனைகள் குறையும்.
சில பெண்களுக்கு இந்த யோகாசன பயிற்சியில் கால்களை ஒன்றாக சேர்த்து வைக்கும்போது கால்கள் இரண்டும் தரையில் படாமல் மேலே தூக்கிக் கொண்டு நிற்கும். இந்த நிலையில் கால்களை மேலும் கீழுமாக ஏற்றி இறக்கி 10 முதல் 15 முறை தினமும் காலை, மாலை செய்து வந்தால் சில நாட்களில் கால்கள் தரையில் படிந்து விடும் என்று கூறப்படுகிறது.
என்னதான் இடுப்புக்கும் முட்டிக்கும் வலு சேர்க்கும் ஆசனமாக இது இருந்தாலும் இடுப்புப் பிரச்சினை உள்ளவர்களும், கடுமையான முட்டி வலி உள்ளவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்ப்பது நல்லது. மேலும் யோகா நிபுணர்களின் வழிகாட்டுதலின் கீழ் மட்டுமே இந்த பத கோணாசனம் செய்ய வேண்டும்.
Image source: google
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]