herzindagi
image

30 நாளில் 5 கிலோ உடல் எடையை குறைக்க இந்த இயற்கை சாறை தினமும் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள்

உடல் எடையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்று போராடும் நபரா நீங்கள். இன்றிலிருந்து தவறான உணவு முறை பழக்கவழக்கத்தை விட்டுவிட்டு ஆரோக்கியமான உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடியுங்கள் அதோடு இந்த பதிவில் உள்ள இயற்கையான கொத்தமல்லி இலை சாறை தயாரித்து 30 நாள் தினமும் காலை வெறும் வயிற்றில் குடியுங்கள். உங்கள் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும்.
Editorial
Updated:- 2025-04-03, 23:23 IST

தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள், இளம் பெண்கள் உடல் பருமனால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். தவறான உணவு முறை பழக்கவழக்கத்தை கடைபிடித்து வருவதால் உடல் பருமன் அதிகரித்து வருவதாக பல்வேறு மூத்த மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். உடல் எடையை குறைக்க வேண்டும் என்றால் முதலில் நீங்கள் உங்கள் உணவுமுறை பழக்கவழக்கத்தை முற்றிலுமாக மாற்ற வேண்டும். அதிலும் மிக குறிப்பாக நேரத்திற்கு உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும் குறிப்பாக, காலை 8 மணிக்குள் காலை உணவும்ம, மதியம் 1 மணிக்குள் மதிய உணவும், இரவு 7 மணிக்கு முன்பு இரவு உணவை கட்டாயம் நீங்கள் சாப்பிட்டுவிட்டு லேசான நடைபயிற்சி செய்து இரவு தூங்கச் செல்ல வேண்டும்.

 

மேலும் படிக்க: 14 நாட்களில் எடையைக் குறைத்து தொப்பையைக் குறைக்க தனித்துவமான செய்முறை- இந்த 3 பொருட்கள் போதும்

உடல் எடையை குறைக்க

 

cumin-cinnamon-and-clove-water-to-lose-weight-and-reduce-belly-fat-in-14-days-1742398220488 (1)

 

உடல் எடையை நீங்கள் ஆரோக்கியமாக குறைக்க வேண்டும் என்றால் சரியான உணவு முறை பழக்கவழக்கத்தை பின்பற்றுவதோடு மட்டுமல்லாமல் தினமும் கட்டாயம் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். குறிப்பாக காலை அரை மணி நேரம் மாலை வேலைகளில் அரை மணி நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப இதை நடை பயிற்சியாக நீங்கள் செய்து கொள்ளலாம் குறிப்பாக காலை அரை மணி நேரம் நடைபயிற்சி மாலை அரை மணி நேரம் நடைப்பயிற்சி செய்தாலே போதுமானது தான். உட்கார்ந்த வாழ்க்கை முறையை மட்டும் வாழாமல் உடல் அசைவுகளோடு வாழ கற்றுக் கொள்ளுங்கள். தேவைப்பட்டால் ஜிம்மிற்கு சென்று லேசான உடற்பயிற்சியை நீங்கள் செய்ய வேண்டும்.

வெறும் வயிற்றில் கொத்தமல்லி இலை சாறு

 

coriander-leaf-juice-1

 

தற்போதைய நவீன காலத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இளம் பெண்கள் குப்பை உணவுகளை விரும்பி சாப்பிடுகிறார்கள். அதிலும் சிக்கன் ரைஸ், சிக்கன் நூடுல்ஸ், ப்ரைடு சிக்கன், சவர்மா, சிக்கன் பர்கர், மயோனைஸ் கலந்த உணவுகள் என பெரும்பாலும் குப்பை உணவுகளை வாரம் முழுவதும் சாப்பிடுகிறார்கள். இதனால் குடலில் நாள்பட்ட கழிவுகள் ஒட்டி இருந்து செரிமான பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் உடல் பருமன் அதிகரித்து சிறிதளவு தூரம் நடந்தாலே மூச்சு வாங்கி உடல் முழுவதும் வலிக்கும் அளவிற்கு பல பிரச்சனைகளை கொண்டு வருகிறது.


இது போன்ற நேரங்களில் நீங்கள் இயற்கையான சில வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்ய வேண்டும். அதில் ஒன்றுதான் இந்த கொத்தமல்லி இலை கொத்தமல்லி இலையை சாராக எடுத்து ஒரு 30 நாள் காலை தினமும் வெறும் வயிற்றில் நீங்கள் குடித்து வந்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி உங்கள் உடல் எடை படிப்படியாக குறைய தொடங்கும். கொத்தமல்லி இலை சாறு மட்டும் குடித்தால் போதாது. அதோடு சேர்த்து தினமும் ஒரு மணி நேரம் உடற்பயிற்சி நீங்கள் செய்ய வேண்டும் என்பது கட்டாயம்.

உடல் எடையை குறைக்கும் கொத்தமல்லி சாறு

 

396460-coriander-juice-1

 

தேவையான பொருட்கள்

 

  • ஒரு கொத்து கொத்தமல்லி இலைகள்
  • அரை எலுமிச்சம்பழம்

 

செய்முறை

 

  1. கொத்து இலையாக இருக்கும் கொத்தமல்லி செடியில் இலைகளை மட்டும் தனியாக பிரித்தெடுக்கவும்.
  2. லேசான சிறிய காம்புகளை கொத்தமல்லி இலைகளுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
  3. கொத்தமல்லி இலைகளை நன்றாக கழுவி மிக்ஸி பிளண்டரில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  4. அதனுடன் அரை எலுமிச்சம்பழம் சாறு கலக்கவும்.
  5. பின்னர் மீண்டும் மிக்ஸி பிளண்டரில் போட்டு கொத்தமல்லி இலை சாறு மற்றும் எலுமிச்சை சாறு நன்றாக கலக்கும் வகையில் தயார் செய்யவும்.
  6. பின்னர் ஒரு வடிகட்டியை எடுத்து சாற்றை முழுவதுமாக வடிகட்டி தண்ணீர் சாறை மட்டும் தனியாக எடுக்கவும்.
  7. அதனுடன் சிறிதளவு பெருங்காயத்தூள் கலந்து குடிக்கவும்.
  8. ஒரு கிளாஸ் தண்ணீரில் கொத்தமல்லி இலைகளைப் போட்டு இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில், அதை வடிகட்டி, தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்.

எடை இழப்பில் கொத்தமல்லி இலையின் நன்மைகள்

 

51kfKUhyicL._AC_UF1000,1000_QL80_

 

  • கொத்தமல்லியில் வைட்டமின்கள் ஏ, கே மற்றும் சி, தாதுக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இதில் மாங்கனீசு, இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் உள்ளன, மேலும் எலுமிச்சையில் பெக்டின் நிறைந்துள்ளது, இது எடை இழப்புக்கு உதவுகிறது.
  • இது இரத்த சுத்திகரிப்புக்கு உதவுகிறது மற்றும் செரிமானத்தை மேம்படுத்துகிறது, குடல் ஆரோக்கியத்திற்கு ஒரு நல்ல உணவாக செயல்படுகிறது . கொத்தமல்லி மற்றும் எலுமிச்சை சாறு சேர்ப்பது எடை இழப்பு உட்பட பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும். கொத்தமல்லியுடன் இணைந்தால், உடலில் உள்ள கொழுப்பை எரிக்கும் விளைவை இரட்டிப்பாக்குகிறது.
  • கொத்தமல்லி நீர் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இது ஒரு சஞ்சீவியாகக் கருதப்படுகிறது, குறிப்பாக தைராய்டு மற்றும் எடை இழப்புக்கு.
  • கொத்தமல்லி நீர் செரிமானம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. இது வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிப்பதைத் தடுக்கிறது. அதுமட்டுமின்றி, வயிற்று வலி, எரியும் உணர்வு, வாயு போன்ற செரிமான பிரச்சனைகளைப் போக்கவும் இது உதவுகிறது.
  • கொத்தமல்லி நீர் எடை இழப்புக்கும் உதவுகிறது. இது வளர்சிதை மாற்ற செயல்முறையை துரிதப்படுத்துகிறது. மேலும் உடலில் தேங்கியிருக்கும் கொழுப்பை எரிக்கவும் இது உதவுகிறது. இதன் காரணமாக, உங்கள் எடை வேகமாகக் குறையத் தொடங்குகிறது.
  • கொத்தமல்லி நீர் உடலில் இருந்து நச்சுகளை நீக்கி உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்த உதவுகிறது. அதனால்தான் இது 'நச்சு நீக்கும் நீர்' என்றும் அழைக்கப்படுகிறது. இது தவிர, கல்லீரலை சுத்தப்படுத்தவும் இது உதவுகிறது.
  • ஒரு கிளாஸ் தண்ணீரில் கொத்தமல்லி இலைகளைப் போட்டு இரவு முழுவதும் அப்படியே வைக்கவும். மறுநாள் காலையில், அதை வடிகட்டி, தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து குடிக்கவும்

எடை இழப்பில் எலுமிச்சை சாறின் நன்மைகள்

 

Untitled-design---2024-12-11T190054.546-1733923874876

 

  • எடை இழப்பு பயணத்தில் ஒரு முக்கிய மூலப்பொருளாக இந்த எலுமிச்சை நீரை ஊட்டச்சத்து நிபுணர்கள், உடற்பயிற்சி பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். தினமும் எலுமிச்சை தண்ணீர் குடிப்பது உங்கள் எடை இழப்பு பயணத்திற்கு ஒரு சிறந்த தொடக்கமாகும். காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது எடை குறைக்க உதவும் என்று பலர் கூறுகிறார்கள்.
  • இதை வெறும் வயிற்றில் குடிப்பது உங்கள் எடையைக் குறைக்க உதவும். ஒரு கிளாஸ் தண்ணீரில் அரை எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் 6 கலோரிகள் மட்டுமே கிடைக்கும்.
  • எலுமிச்சை நீர் அமிலத்தன்மை கொண்டது, ஆனால் அது செரிமான அமைப்பில் நுழைந்தவுடன் அது கார விளைவைக் கொண்டிருக்கிறது, இதனால் எலுமிச்சை நீர் எடை இழப்புக்கு ஒரு உண்மையான கூட்டாளியாக அமைகிறது. ஏனெனில் இது பசியை அடக்கி, மற்ற ஆரோக்கியமற்ற இனிப்பு பானங்களை குடிப்பதைத் தடுக்கிறது.
  • நாளின் தொடக்கத்தில் எலுமிச்சையைச் சேர்ப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நாளுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. எலுமிச்சை தண்ணீர் பகலில் உங்கள் வயிற்றை நிரப்ப உதவுகிறது மற்றும் அதிகமாக சாப்பிடும் விருப்பத்தை குறைக்கிறது.
  • எலுமிச்சை சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதைக் குடிப்பதால் குடல்கள் சுத்தமடைந்து செரிமானம் பலப்படுகிறது. இது எடை இழப்புக்கும் உதவுகிறது.
  • எலுமிச்சை வைட்டமின் சி நிறைந்த ஒரு உணவுப் பொருள். இது ஆக்ஸிஜனேற்ற மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. தினமும் எலுமிச்சை சாப்பிடுவது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்திருப்பதோடு புற்றுநோயைத் தடுக்கிறது.
  • ஒரு நாளைக்கு இரண்டு முறை எலுமிச்சை நீரைக் குடிப்பது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. சளி, இருமல் மற்றும் தொண்டை புண் ஆகியவற்றிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. காலையில் எலுமிச்சை தண்ணீர் குடிப்பதால் உடலில் இருந்து நச்சுகள் வெளியேறி, உடலில் சேரும் கொழுப்பு குறைகிறது. எடை இழப்புக்கு எலுமிச்சை நீர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
  • எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதன் கிளைசெமிக் குறியீடும் குறைவாக உள்ளது. இதன் நார்ச்சத்து கார்போஹைட்ரேட் செரிமானத்தை மெதுவாக்குகிறது, இதனால் இரத்த சர்க்கரை அளவை வெகுவாகக் குறைக்கிறது.

மேலும் படிக்க: 30 நாட்கள் தினமும் காலை எலுமிச்சையுடன் வெதுவெதுப்பான நீரைக் குடித்தால் நம் உடலில் என்ன நடக்கும்?

 

இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த  சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil

 

image source: freepik

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]