சுட்டெரிக்கும் கோடை காலம் துவங்கிவிட்டது. தற்போதைய நவீன காலத்தில் தவறான உணவு முறை பழக்க வழக்கத்தால் 30 வயதை எட்டியுள்ள இளம் பெண்கள், இளைஞர்கள் கூட உடல் பருமனால் சிரமப்பட்டு வருகின்றனர். இதற்கு மிக முக்கிய காரணம் உட்கார்ந்த வாழ்க்கை முறை, தவறான உணவு முறை பழக்கவழக்கம், தினமும் ஒரு அரை மணி நேரம் கூட ஆரோக்கியத்திற்காக நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது தான். இந்த கோடை வெயிலில் உங்கள் உடல் எடையை குறைப்பதற்கு நீங்கள் தினமும் காலை ஒரு அரை மணி நேரம் செலவு செய்தால் போதுமானது. தற்போதைய காலத்தில் வேலைகளுக்கு செல்லும் பெரும்பாலானோர் உடற்பயிற்சி செய்வதில் சுணக்கம் காட்டி வருகின்றனர் ஏனென்றால், அவர்களுக்கு நேரமில்லை என்று அவர்களே சமாளித்துக் கொள்கிறார்கள்.
உட்கார்ந்த வாழ்கை முறை வாழும் இளம்பெண்கள்
தினமும் காலை எழுந்ததும் என்ன செய்கிறோம் குளித்துவிட்டு வேலைக்கு செல்கிறோம், அலுவலகத்துக்கு சென்று அமர்ந்தே வேலை பார்க்கிறோம். மீண்டும் மாலை வீடு திரும்புகிறோம் சாப்பிடுகிறோம் தூங்குகிறோம். ஆனால் உடல் அசைவு என்பது நம்மிடத்தில் இல்லை ஏனென்றால் அருகில் இருக்கக்கூடிய சிறிய கடைகளுக்கு கூட பைக்கில் பைக், வாகனங்களில் தான் செல்கிறோம். இப்படி எந்த ஒரு வேலையை செய்வதற்கும் கூட வாகனங்களில் செல்வது, ஆன்லைனில் ஆர்டர் போடுவது என பெரும்பாலான இளைஞர்கள் உட்கார்ந்த வாழ்க்கை முறையைத்தான் நகர்த்தி வருகிறார்கள்.
தினமும் காலை 30 நிமிடம் நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- ஒரு எடுத்துக்காட்டுக்கு நீங்கள் ஒரு 30 வயதை கடந்த நபராக இருக்கலாம். உங்களின் எடையை கணக்கிட்டு பார்த்தால் கிட்டத்தட்ட 75 கிலோ க்கு மேல் இருப்பீர்கள்.
- உடலில் கொழுப்புகள் அதிகம் இருந்தால் உடல் பருமன் அதிகரித்துக் கொண்டே போகும் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால் உடல் எடையை நாம் குறைக்க வேண்டும் என்றால் உடலில் இருக்கும் கொழுப்புகளை நாம் எரிக்க வேண்டும். அந்த உடல் பருமனை வெளிக்காட்டும் கெட்ட கொழுப்பை எரிப்பதற்கு தினமும் காலை அரை மணி நேரம் வியர்வை வரும் வகையில் நடந்தாலே போதுமானது.
தினமும் காலை நடைப்பயிற்சி செய்வது எப்படி?
- தினமும் நீங்கள் தூங்கச் செல்வதற்கு முன் உங்கள் செல்போனில் அலாரம் வைத்து விடுங்கள் காலை 6 மணிக்கு சமரசம் இல்லாமல் எழுந்து விடுங்கள்.
- காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் 300 மில்லி பெதுபெதுப்பான நீரை குடிக்கவும்
- பின்னர் காலை கடன்களை முடித்து குறிப்பாக பற்களை துவக்கி விட்டு உங்களுக்கு ஏதுவான ஆடைகளை உடுத்திக் கொள்ளுங்கள்
- அப்படியே வீட்டிலிருந்து வெளியே வந்து லேசான முறையில் உடல் அசைவுகளை செய்யுங்கள் குறிப்பாக ஜம்பிங் ஜாக்ஸ், கீழே குனிந்து பெருவிரலை தொடுங்கள் இப்படி ஒரு ஐந்து நிமிடம் செய்துவிட்டு.
- மெதுவாக ஓடத் தொடங்குங்கள். ஒரு இலக்கை நிர்ணயித்து உங்கள் வீட்டில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் அல்லது 3 கிலோ மீட்டர் தூரத்தை இலக்காக வைத்து ஓடத் தொடங்குங்கள்.
- முதலில் மிகவும் மெதுவாக ஓடுங்கள் பின்னர் கொஞ்சம் வேகத்தை அதிகரித்து பொன்னரை கிலோமீட்டர் தூரத்தை வியர்வை வரும் வகையில் விறுவிறுப்பாக ஓடவும்.
- பின்னர் மீண்டும் அந்த இலக்கிலிருந்தே வீடு திரும்பும் போது அதே வேகத்தில் வேகமாக ஓடி வரவும்.
- தினமும் 30 நிமிடம் உடலில் வியர்வை வரும் வகையில் ஓடி வந்தாலே போதுமானது அப்படியே வீட்டிற்கு வந்து குளித்து விடுங்கள்.
- இப்படி தினமும் 30 நாளுக்கு காலை 6 மணிக்கு எழுந்து வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரை குடித்துவிட்டு அரை மணி நேரம் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு விறுவிறுப்பாக உடலில் வியர்வை வரும் வகையில் தோட்டமாகவோ அல்லது விறுவிறுப்பான நடை பயிற்சியாகவோ செய்து வந்தால் ஒரே மாதத்தில் அதாவது 30 நாளில் உடலில் உள்ள கொழுப்புகளை எரித்து ஐந்து கிலோ உடல் எடையை தாராளமாக குறைக்கலாம்.
உடலில் ஆற்றலைப் பராமரிக்க உதவும்
தினமும் காலையில் ஓடுபவர்கள் நாள் முழுவதும் உற்சாகமாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள். மேலும், உங்கள் உடல்நலம் சிறப்பாக இருக்கும், மேலும் நீங்கள் அதிக எச்சரிக்கையாக இருப்பீர்கள். வேலையில் உங்கள் கவனம் அதிகரிக்கிறது, அதாவது கவனம் செலுத்த உங்களுக்கு அதிக பலம் கிடைக்கும். எனவே, நீங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது அரை மணி நேரமாவது ஜாகிங் செய்ய வேண்டும்.
மன ஆரோக்கியத்திற்காக ஓடவும்
ஜாகிங் உடலில் இருந்து எண்டோர்பின்கள் எனப்படும் நல்ல மனநிலையைத் தரும் ஹார்மோன்களை வெளியிடுகிறது. இது உங்கள் மனநிலையை மேம்படுத்தவும், நன்றாக இருக்கவும் உதவுகிறது. இது பதட்டம், மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு போன்ற மன உளைச்சலை ஏற்படுத்தும் காரணிகளிலிருந்து விலகி இருக்க உதவுகிறது. இது மன உறுதியையும் தருகிறது மற்றும் எந்த சூழ்நிலையிலும் தடுமாறாமல் சரியான முடிவுகளை எடுக்க உங்களை அனுமதிக்கிறது.
எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்
தினமும் தவறாமல் ஜாகிங் செய்வது உடலில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்பை எரிக்க உதவியாக இருக்கும். வெறும் 30 நிமிடங்கள் ஓடுவது 250 முதல் 300 கலோரிகளை எளிதில் எரித்து உங்களை இலகுவாக உணர வைக்கும். இது தவிர, பல ஆய்வுகள், உடலை ஆரோக்கியமாகவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் ஓட்டப் பயிற்சிகள் பயனுள்ளதாக இருக்கும் என்பதைக் காட்டுகின்றன.
சகிப்புத்தன்மையை அதிகரிக்க உதவும்
நீங்கள் தொடர்ந்து ஜாகிங் பயிற்சி செய்தால், அது உங்கள் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது. ஜாகிங் அமைதியற்ற மனதை ஏற்படுத்தாமல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் பலனை வழங்குகிறது. நீங்கள் சோர்வடையாமல் நாள் முழுவதும் வேலை செய்யலாம். பல மருத்துவர்கள் தொடர்ந்து ஓடுவதையும் பரிந்துரைக்கின்றனர்.
நுரையீரல் ஆரோக்கியமாக இருக்க உதவும்
நுரையீரல் ஆரோக்கியத்தையும் செயல்பாட்டையும் மேம்படுத்துவதன் மூலம் உங்கள் உடலுக்கு நன்மை பயக்க நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஜாகிங் என்பது ஆக்ஸிஜனேற்றத்தை மேம்படுத்தி நுரையீரல் சிறப்பாக செயல்பட உதவும் ஒரு சிறந்த பயிற்சியாகும்.
இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும்
நீங்கள் நீண்ட நேரம் மிதமான வேகத்தில் ஓடினால், உங்களுக்கு இரத்த அழுத்தப் பிரச்சினைகள் ஏற்படாது. இரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுக்குள் வைத்திருப்பது நன்மை பயக்கும். இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்களுக்கு ஓடுவது ஒரு சிறந்த வழி. உங்கள் ஆரோக்கியத்திற்காக இப்போதே குறைந்தது 30 நிமிடங்களாவது ஜாகிங் செய்யத் தொடங்க வேண்டும்.
இதயம் ஆரோக்கியமாக இருக்கும்
ஜாகிங் கொழுப்பைக் குறைக்கிறது, மேலும் கொழுப்பு இதயத்துடன் நேரடியாக தொடர்புடையது. எனவே, இதய நோய்களுக்கு காரணமான உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயைத் தவிர்க்க, தொடர்ந்து ஜாகிங் செய்ய வேண்டும். இதய நோய்களைத் தடுக்க தினமும் காலையில் எழுந்து ஜாகிங் செல்வதால் நன்மைகள் உள்ளன.
தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கும்
வழக்கமான ஜாகிங் உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும். இரவில் தூங்குவதில் சிரமப்படுபவர்கள் அல்லது தூங்கும் போது அமைதியற்றவர்களாக உணருபவர்கள், வழக்கமான ஜாகிங் இந்தப் பிரச்சனையைப் போக்க உதவும். இது தூக்கம் தொடர்பான பிரச்சனைகளை நீக்குவதில் நன்மை பயக்கும்.
மிக முக்கியமான குறிப்பு
ஒரு முப்பது நாள் என்பது எந்த வகையிலும் சமரசம் இல்லாமல் தினமும் காலை 6 மணிக்கு எழுந்து 30 நிமிடம் மூன்று கிலோமீட்டர் தூரம் கட்டாயம் உடற்பயிற்சி செய்து நடை பயிற்சி அல்லது ஓட்ட பயிற்சி செய்து தந்தாலே உங்கள் உடலில் உள்ள கொழுப்புகள் கரைந்து கண்டிப்பாக 5 கிலோ உடல் எடையை 30 நாளில் குறைப்பீர்கள். இதில் எந்த வகையிலும் சமரசம் இருக்க கூடாது 30 நாள் கட்டாயம் இதை செய்தாலே போதுமானது.
மேலும் படிக்க:மோரில் இதை மட்டும் கலந்து தினமும் குடிங்க, உங்கள் இடுப்பு கொழுப்பு 15 நாளில் கரைந்து விடும்
இந்த கட்டுரை உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள். மேலும், இதுபோன்ற உடல்நலம், ஆரோக்கியமான வாழ்வு சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை தினமும் தெரிந்து கொள்ள எப்போதும் ஹெர்ஜிந்தகி உடன் இணைந்திருங்கள். ஹெர்ஜிந்தகியின் முகநூல் பக்கத்தை இந்த லிங்கின் மூலம் பின் தொடருங்கள் HerZindagi Tamil
image source: freepik
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation