herzindagi
yoga card image

ஆரோக்கியமான வாழ்விற்கு அனைத்து வயதினரும் செய்யக்கூடிய யோகா ஆசனம்

புதிதாகத் தொடங்குபவர்களுக்குப் பல எளிதான யோகா போஸ்கள் இருக்கின்றன. இவை மனதுக்கும் உடலுக்கும் நல்ல ஆரோக்கியத்தைத் தருகிறது
Editorial
Updated:- 2024-04-25, 18:55 IST

ஆரோக்கியம் என்பது நமது உடல், மனம், உணர்ச்சி மற்றும் ஆன்மீக இவை அனைத்தும் சேர்ந்தவையாகும். நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை வாழ நாம் நம்மை கவனித்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். இந்த கூறுகள் அனைத்தையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒட்டுமொத்த நல்வாழ்வைப் அடங்கும். யோகா என்பது ஒரு பாரம்பரிய மற்றும் புனிதமான அறிவியலும் சார்ந்தாகும். இது நமது முழு உடலை கவனித்துக்கொள்ள உதவுகிறது. உடல் தகுதி மற்றும் செயல்பாடுகள் நம்மை எச்சரிக்கையாகவும் சுறுசுறுப்பாகவும் வைத்திருக்க உதவுகின்றன. நாள் முழுவதும் ஆற்றலைப் பராமரித்தால் சந்தேகத்திற்கு இடமின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழமுடியும்.

மேலும் படிக்க: தொட்டால் சிணுங்கி செடியில் இருக்கும் பல ஆரோக்கிய பொக்கிஷ குணங்களை பற்றி தெரியுமா?

எல்லா வயதினரும் செய்யக்கூடிய சில யோகாசனங்களைப் பற்றி இன்று பார்க்கலாம். எந்த உபகரணமும் இல்லாமல் வீட்டிலேயே இதை எளிதாக செய்யலாம். இவற்றைப் பற்றி சொல்கிறார் அக்ஷர் யோகா நிறுவனத்தின் நிறுவனர் ஹிமாலயன் சித்தா அக்ஷர். அவர் கூறுகையில் யோகாவின் அழகு என்னவென்றால் யோகாவின் பலன்களை பெற நீங்கள் ஒரு யோகியாகவோ அல்லது யோகினியாகவோ இருக்கத் தேவையில்லை. நீங்கள் இளைஞராக இருந்தாலும் சரி, வயதானவராக இருந்தாலும் சரி, அதிக உடல் எடையுடன் இருந்தாலும் சரி, யோகாவுக்கு மனதை அமைதிப்படுத்தவும், உடலை வலுப்படுத்தவும் சக்தி உண்டு.

அனைவராலும் செய்யக்கூடிய யோகாசனம் பற்றி பார்க்கலாம் 

சுகாசனம்

Sukhasana inside

இடுப்பு, முதுகுத்தண்டை வலிமைப் படுத்தக்கூடியது இந்த சுகாசனம். இந்த யோகாவை மிக எளிமையாகச் செய்யலாம் உட்கார்ந்து செய்யும் ஆசனங்களில்இவௌ சுலபமானது. 

செய்முறை 

  • சுகாசனத்தில் நேராக இரு கால்களையும் விரித்து உட்காரவும்.
  • இடது காலை மடக்கி வலது தொடையின் உள்ளே அழுத்தவும்.
  • பிறகு வலது காலை மடக்கி இடது தொடையின் உள்ளே அழுத்தவும்.
  • முழங்கால்களில் உள்ளங்கைகளை வைக்கவும்.
  • முதுகுத்தண்டை நேராக வைத்து உட்கார வேண்டும்.
  • இந்த நிலையிலேயே சிறிது நேரம் இருக்க வேண்டும்.

விருக்ஷாசனம்

Vrikshasana inside

இந்த யோகா மன அமைதியை அடைய செய்கிறது. மனதில் ஏற்படும் கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு நன்மை பயக்கும். 

செய்முறை 

  • முதலில் நேராக நிற்க வேண்டும்.
  • அதன்பிறகு வணக்கத்துடன் உங்கள் கைகளை வானத்தை நோக்கி உயர்த்துங்கள்
  • பின் உடல் எடை தாங்கும் வகையில் இடது காலை தரையிலிருந்து தூக்க வலது பாத தொடையின் உட்புறத்தில் வைக்கவும்.
  • முடிந்தவரைக் கவட்டைக்கு அருகில் வைக்கவும்.
  • உங்கள் கால்களைச் சரியான இடத்தில் வைக்க உங்கள் உள்ளங்கைகளால் ஆதரிக்கலாம்.
  • முழங்கைகள் கைகளுக்கு இடையில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
  • மற்ற காலிலும் அவ்வாறே செய்யுங்கள்.
  • அதன்பிறகு எட்டு முதல் பத்து ஆழமான சுவாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

பாதஹஸ்தாசனம்

Padha Hasthasanam inside

ஜீரண சம்பந்தமான பிரச்சனைகளுக்கு இந்த ஆசனம் தீர்வாக இருக்கும்.  இரப்பை மற்றும் குடல் சம்பந்தமான பிரச்சினைகள் இருப்பவர்கள் இந்த யோகாவைச் செய்யலாம். நீரழிவு நோய்க்கு நல்ல பலனளிக்கிறது.

செய்முறை

  • நின்று கொண்டு இந்த யோகாசனத்தைத் தொடங்குங்கள்
  • மூச்சை வெளிவிட்டு மெதுவாக மேல் உடலை இடுப்பிலிருந்து கீழே வளைத்து கைகளால் கால் விரல்களைத் தொடவேண்டும்.
  • கால்களின் இருபுறமும் உள்ளங்கைகளை வைக்கவும்.
  • நீங்கள் தொடக்கத்தில் இதை செய்கிறீர்கள் என்றால் முழங்கால்களைச் சிறிது வளைத்துச் செய்யலாம்.
  • பயிற்சியின் மூலம் மெதுவாக முழங்கால்களை நேராக்கி தொடைகளால் மார்பைத் தொட முயற்சிக்கவும்.

விருக்ஷாசனம்

vajrasana inside

இந்த யோகா மன அமைதியை அடைய செய்கிறது. மனதில் ஏற்படும் கவலை மற்றும் மனச்சோர்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்களுக்கு நன்மை பயக்கும். 

செய்முறை

  • வஜ்ராசனம் செய்வதற்கு முதலில் தரையில் மண்டியிட்டு உட்காரவும்.
  • முழங்கால்களையும், கணுக்கால்களையும் ஒன்றாக நீட்டி பாதங்களை நேராக வைக்கவும்.
  • மூச்சை வெளியேற்றிக் கொண்டே கால்களின் மீது உட்காரவும்.
  • இடுப்பு, கணுக்கால் மற்றும் தொடை கெண்டைக்கால் பின் தசையின் மீது இருக்க வேண்டும்.
  • முதுகுத்தண்டு நேராக இருக்கும் நிலையில் உட்கார்ந்து, மூச்சை உள்ளிழுத்து மெதுவாக வெளியேற்றவும்.
  • தலையைப் பயன்படுத்தி உடலை மேலே இழுத்து, முதுகுத்தண்டின் கீழ் பகுதியில் உள்ள எலும்பை தரையை நோக்கி அழுத்தவும்.
  • தலையை நேராக்கி முன்னோக்கி பார்க்கவும்.
  • கைகளை தளர்த்தி உள்ளங்கைகளை தொடைகளின் மீது வைக்கவும்.

நௌகாசனம்

Naukasana inside

இந்த ஆசனம் செய்வதன் மூலம் உடலை நாள் முழுவதும் சூடாக வைத்துக்கொள்ளலாம். நௌகாசனம் உடல் சோம்பலை நீக்கவும் உதவுகிறது.

செய்முறை

  • இந்த ஆசனத்தை செய்ய முன் முதுகில் படுத்துக் கொள்ளுங்கள்.
  • மேல் உடலைத் தரையிலிருந்து 45 டிகிரி உயர்த்தவும்.
  • இடுப்பைச் சுற்றி சுழற்றி கால்களை தரையிலிருந்து 45 டிகிரி உயர்த்தவும்.
  • முழங்கால்களை வளைப்பதைத் தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • கைகளை முன்னோக்கி மற்றும் தரையில் இணையாக வைக்கவும்.
  • செய்யும் போது வயிற்று தசைகளை இறுக்குங்கள்.அதன்பின் உங்கள் முதுகை நேராக நீட்டவும்.

நுட்பமான பயிற்சிகளுடன் தொடங்குங்கள். கழுத்து, கைகள், மணிக்கட்டுகள், இடுப்பு மற்றும் கணுக்கால் ஆகியவற்றை மெதுவாகச் சுழற்றுவதன் மூலம் மூட்டுகளை வெப்பமாக்குவது இதில் அடங்கும். தசைகளை நீட்டி, அசைக்கும்போது விரைவாக நடக்கவும். இது உடற்பயிற்சியால் ஏற்படும் காயங்களிலிருந்து நம்மைப் பாதுகாத்து நம் உடலை உடற்பயிற்சிக்குத் தயார்ப்படுத்தும். 

மேலும் படிக்க: வேர்க்குருவை ஓட ஓட விரட்ட இந்த சிம்பிள் வீட்டு வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க

உங்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள இந்த யோகாசனங்களையும் செய்யலாம். இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், தயவுசெய்து பகிரவும். மேலும் இதுபோன்ற கட்டுரைகளைப் படிக்க Harzindagi உடன் இணைந்திருக்கவும்.

 

 

Image Credit- Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]