herzindagi
double chin remedy at home

Double Chin Exercise : தினமும் 5 நிமிடங்கள் செய்தால் போதும், கழுத்து சதையை விரைவில் குறைத்திடலாம்!

இரட்டை கன்னம் பற்றிய கவலையா? கழுத்து பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் குறைக்க நிபுணர் பரிந்துரை செய்யும் இந்த மூன்று பயிற்சிகளை முயற்சி செய்து பாருங்கள்…
Editorial
Updated:- 2023-07-25, 15:46 IST

உடல் எடை சற்று கூடினால் போதும், கழுத்து பகுதியில் கொழுப்பு சேர்ந்து இரட்டைக் கன்னமாக காட்சியளிக்கும். உடலில் எந்தப் பகுதியில் கொழுப்பு சேர்ந்தாலும் அது தோற்றத்தை பாதிக்கும். குறிப்பாக முகத்தில் கொழுப்பு சேரும் பொழுது வயதான தோற்றத்தை கொடுக்கும். மேலும் உடலில் படிந்துள்ள இதுபோன்ற கொழுப்புகளை நீக்குவது சற்று கடினமாக இருக்கலாம். இதற்கு குறிப்பிட்ட உணவு முறையை பின்பற்றுவதுடன் உடற்பயிற்சியையும் செய்ய வேண்டும்.

கழுத்து பகுதியில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பை நீக்க இந்த 3 எளிய பயிற்சிகளை செய்தால் போதுமானது. இந்த 3 பயிற்சிகள் குறித்த தகவல்களை ஊட்டச்சத்து மற்றும் யோகா நிபுணரான சிம்ரன் கவுர் அவர்கள் பகிர்ந்துள்ளார். இரட்டைக் கண்ணம் அல்லது கழுத்து பகுதியில் உள்ள கொழுப்பை குறைக்க இந்த மூன்று பயிற்சிகளையும் முயற்சி செய்யலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க ஒரே ஒரு பீட்ரூட் போதும்!

 

பயிற்சி 1 

double chin workout

  • முகத்தை மேல் நோக்கி பார்க்கவும்.
  • பின்னர் நாக்கை நீட்டி, உதட்டின் மேல் பகுதியை தொட முயற்சி செய்யுங்கள்.
  • இவ்வாறு செய்யும் பொழுது தலை மேல் நோக்கியவாறு இருக்க வேண்டும்.
  • இதை செய்யும் பொழுது கழுத்தின் நரம்பு பகுதியில் நீட்சி ஏற்படும். 
  • இந்த பயிற்சியை  5-10 முறை செய்ய வேண்டும். இது இரட்டைக் கன்னத்தை நீக்க உதவும்.

பயிற்சி 2

  • கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரலைத் தவிர மற்ற அனைத்து விரல்களையும் மடக்கி வைக்கவும்.
  • உங்களுடைய இரு விரல்களுக்கு இடையில் தாடை பகுதியை வைக்கவும்.
  • இரு விரல்களையும் கீழிருந்து மேல் நோக்கி நகர்த்தவும்.
  • இரண்டு கைகளை கொண்டு கன்னத்தில் இரு பக்கத்திலும் இந்த பயிற்சியை செய்யுங்கள்.
  • இந்த பயிற்சியை செய்யும் பொழுது முகம் மேல் நோக்கி இருக்க வேண்டும்.
  • இந்த பயிற்சியை 10 முறை செய்யலாம். இதனைத் தொடர்ந்து செய்யும் பொழுது கழுத்து பகுதி நல்ல வடிவம் பெறும்.

exercise to reduce double chin in women

பயிற்சி 3

  • இரண்டு கைகளிலும், அனைத்து விரல்களையும் மடக்கி வைக்கவும்.
  • இப்பொழுது இரட்டைக் கன்னம் உள்ள பகுதியில்,  உங்கள் 2 கைகளையும் கொண்டு லேசாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • அழுத்தம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கக் கூடாது.
  • இந்த பயிற்சியை 5-10 முறை செய்யலாம்.

 

இந்த பதிவும் உதவலாம்: குடைமிளகாயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா, தெரிஞ்சா அசந்திருவீங்க!

 

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]