உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் குடைமிளகாய் பயன்படுத்தப்படுகிறது. இதில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் நிறைவாகவும் உள்ளன. குடைமிளகாய் பீட்டா-கிரிப்டோக்சாண்டின், ஜியாக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற கரோட்டினாய்டுகளின் சிறந்த ஆதாரமாகும். வைட்டமின்களும் தாதுக்களும் நிறைந்துள்ள குடைமிளகாயின் ஆரோக்கிய நன்மைகளை இப்போது பார்க்கலாம்.
குடைமிளகாயில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும். எனவே நீங்கள் எடுத்துக் கொள்ளும் சத்தான உணவுகளுடன் குடைமிளகாயையும் சேர்த்துக் கொண்டால் உடல் எடையை குறைப்பது மிகவும் சுலபமாகிவிடும். மேலும் இதில் உள்ள வைட்டமின் B6 வளர்சிதை மாற்ற செயல்முறைக்கு நன்மை தரும்.
இந்த பதிவும் உதவலாம்: உடல் எடையை குறைக்க ஒரே ஒரு பீட்ரூட் போதும்!
சிவப்பு குடமிளகாயில் உள்ள லைக்கோபின் எனும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. குடைமிளகாய் ஃபோலேட் மற்றும் வைட்டமின் B6 இன் சிறந்த ஆதாரம் ஆகும். இதில் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தில் இருந்து உடலை பாதுகாக்கும் ஆன்டி ஆக்ஸிடன்ஸ்களும் உள்ளன. இவை இதய நோய்களின் ஆபத்தை கணிசமாக குறைக்கின்றன.
குடைமிளகாயில் உள்ள பண்புகள் கண்பார்வையை மேம்படுத்த உதவுகின்றன. மேலும் இதில் நிறைந்துள்ள லூடீன் மற்றும் ஜியாக்சாண்டின் விழித்திரையை சேதத்திலிருந்து பாதுகாக்கின்றன. கரோட்டினாய்டு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது கண்களை மாகுலர் சிதைவிலிருந்து பாதுகாக்கும் என ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.
குடைமிளகாயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகளும், ஆன்டி ஆக்ஸிடன்ட்களும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கின்றன. மேலும் இதில் உள்ள லைகோபீன் கரோட்டினாய்டுகள் , கர்ப்பப்பை வாய், புரோஸ்டேட், கணையம் மற்றும் சிறுநீர்ப்பை புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன. இதனுடன் குடைமிளகாயில் உள்ள என்சைம்கள் உணவுக்குழாய் மற்றும் இரைப்பை புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன.
உடலின் ஊட்டச்சத்து உறிஞ்சுதலுக்கு வைட்டமின் C மிகவும் அவசியமானது. உங்களுடைய தினசரி வைட்டமின் C தேவையை பூர்த்தி செய்ய குடைமிளகாயை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இது இரத்த சோகை அல்லது உடலில் இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: தொப்பை முதல் தொடை வரை, உடலில் கொழுப்பு சேர்வதற்கான காரணங்கள் என்ன?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
image source:freepik
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]