Age Reversal Yoga : 10 வயசு குறைஞ்சு இளமையாக தெரிய, இந்த 3 யோகாசனங்களை செய்யுங்கள்!

விலையுயர்ந்த அழகு சாதன பொருட்கள் எதற்கு, செலவே இல்லாமல் என்றும் இளமையுடன் வாழ இன்றைய பதிவில் பகிரப்பட்டுள்ள யோகாசனங்களை தினமும் செய்யுங்கள்...

anti aging yoga asanas for women

என்றும் இளமையுடன், ஆரோக்கியமாகவும், அழகாகவும் வாழவே நாம் அனைவரும் விரும்புகிறோம். ஆனால் மன அழுத்தம், ஒழுங்கற்ற வாழ்க்கை முறை, மாசுபட்ட சூழல் போன்ற பல காரணங்கள் இளம் வயதிலேயே முதுமையான தோற்றத்திற்கு வழி வகுக்கின்றன.

இளம் வயதிலேயே வயதானவர் போல் தோற்றமளிப்பது அழகு சார்ந்த விஷயம் மட்டுமல்ல, இது போன்ற அறிகுறிகள் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்களையும் குறிக்கின்றன. வயது கூடும் பொழுது எலும்புகள் வலுவிழக்கத் தொடங்குகின்றன மற்றும் உடல் நல பிரச்சனைகளும் கணிசமாக அதிகரிக்கின்றன.

இந்நிலையில் உடல் மற்றும் அழகை பராமரிக்க யோகாவை தினமும் பயிற்சி செய்யலாம். இதற்கு உதவக்கூடிய சில ஆசனங்களை யோகா நிபுணரான சித்தா அக்ஷர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம். இந்த ஆசனங்களை தினமும் பயிற்சி செய்து வந்தால் இளமையான தோற்றத்துடன் ஆரோக்கியமான உடலையும் பெறலாம்.

ஹலாசனம்

anti aging halasana

  • இந்த யோகா பயிற்சியானது ஆரோக்கியமான சருமத்தை பெற உதவும்.
  • முதலில் முதுகு தரையில் படும்படி நேராக படுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் கால்களை மெதுவாக மேலே உயர்த்தவும்.
  • உங்கள் கைகளால் இடுப்பை பிடித்துக் கொள்ளுங்கள்.
  • கால்களை மெதுவாக உயர்த்தி தலைக்கு பின்னால் கொண்டு வரவும்.

குறிப்பு : கழுத்து வலி, ஸ்பான்டைலிடிஸ் மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இந்த ஆசனத்தை தவிர்க்க வேண்டும்.

சர்வங்காசனம்

anti aging sarvangasana

  • இந்த ஆசனம் முகம் மற்றும் தலையில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது தலைமுடியின் வளர்ச்சிக்கும் மிகவும் நல்லது.
  • முதலில் யோகா மேட்டில் நேராக படுத்துக் கொள்ளவும்.
  • பின்னர் மெதுவாக உங்கள் கால்கள் மற்றும் இடுப்பு பகுதியை மேலே உயர்த்தவும்.
  • உங்கள் கைகளால் இடுப்பை பிடித்துக் கொள்ளலாம் அல்லது சுவரின் ஆதரவுடன் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்

கபால் பதி பிராணயாமம்

anti aging kabalpathi pranayama

  • முதலில் பத்மாசனம் அல்லது சம்மணம் போட்டு சௌகரியமாக உட்கார்ந்து கொள்ளவும்.
  • நேராக உட்கார்ந்து கண்களை மூடிக்கொள்ளவும்.
  • உங்களுடைய உள்ளங்கையை முட்டியின் மீது மேல் நோக்கியவாறு வைக்க வேண்டும்.
  • இயல்பாக சுவாசிக்கவும் மற்றும் மூச்சை வெளியேற்றும் பொழுது சத்தத்துடன் வெளியிடவும்.
  • பிறகு இயல்பான முறையில் எவ்வித அழுத்தமும் இல்லாமல் மூச்சை உள்ளிழுக்கவும்.
  • மூச்சை வெளியேற்றும் பொழுது வயிற்றுப் பகுதி மற்றும் தொப்புளை முதுகுத்தண்டு பகுதியை நோக்கி உள்ளிழுக்க வேண்டும்.
  • மூச்சையை வெளியேற்றும் பொழுது வயிற்றுப் பகுதியை தளர்த்தலாம்.
  • இந்த ஆசனத்தை மெதுவாக பயிற்சி செய்யவும்.
  • அமைதியான இடத்தில் அமர்ந்து ரிலாக்ஸ் ஆக இந்த பிராணயாமா பயிற்சியை செய்யலாம்.
  • இதே முறையில் 2-3 மீண்டும் செய்யவும்.

இந்த பதிவும் உதவலாம்: மலச்சிக்கலை விரட்டி அடிக்கும் விளக்கெண்ணெய், எப்படி பயன்படுத்த வேண்டும் தெரியுமா?

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP