Giloy Tea Benefits : ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ இந்த ஒரு டீ போதும்!

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது முதல் வயிற்றுப் பிரச்சனைகளை நீக்குவது வரை சீந்தில் டீ தரும் ஆரோக்கிய நன்மைகளை இன்றைய பதிவில் காணலாம்…

giloy tea uses

சீந்திலை ஆரோக்கியத்தின் அமிர்தம் என குறிப்பிடலாம். சீந்திலில் அழற்சி எதிர்ப்பு ஆன்டி பயோட்டிக், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் எதிர்ப்பு பண்புகள், வைரஸ் எதிர்ப்பு பண்புகள் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்கும் பண்புகள் காணப்படுகின்றன. சீந்தில் சாறு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சிறந்தது. இதில் கால்சியம் பாஸ்பரஸ் புரதம் போன்ற சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. ஆரோக்கியத்தை மேம்படுத்த சீந்திலை பொடி, சாறு அல்லது டீ வடிவில் எடுத்துக் கொள்ளலாம்.

சீந்தில் டீ தயாரிக்கும் முறை மற்றும் அதன் ஆரோக்கிய நன்மைகளை ஆயுர்வேத நிபுணரான தீக்ஷா பவ்சர் அவர்களிடமிருந்து தெரிந்து கொள்வோம். உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆயுள் முழுவதும் நோயின்றி வாழ நிபுணர் பரிந்துரை செய்யும் முறையில் டீயை பருகி பயனடையுங்கள்.

சீந்தில் டீ செய்முறை

seendhil kashayam

  • சீந்தில் டீ செய்வதற்கு அதன் இலைகள் மற்றும் தண்டுகளை எடுத்துக் கொள்ளவும்.
  • இதை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைக்கவும்.
  • இந்த டீயை மாலையில் குடிக்க விரும்புபவர்கள், காலையில் 6-7 மணி நேரங்களுக்கு ஊற வைத்துக் கொள்ளலாம்.
  • அதற்குப் பிறகு ஊறிய இலைகள் மற்றும் தண்டுகளை இடித்து, 1 கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
  • இது பாதியாக வற்றிய பிறகு வடிகட்டி குடிக்கலாம்
  • சீந்தில் இலை மற்றும் தண்டுகள் இல்லாதவர்கள் உலர்ந்த சீந்தில் பொடியையும் டீ தயாரிக்க பயன்படுத்தலாம்.
  • சீந்தில் பொடியை இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து அந்த நீரை குடிக்கலாம்
  • இந்த டீயை இன்னும் ஆரோக்கியமானதாக மாற்ற மஞ்சள், துளசி, கிராம்பு போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்.

சீந்தில் டீ நன்மைகள்

seendhil kodi nanmaigal

  • சீந்தில் டீ குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
  • இதை குடித்து வர பருவகால காய்ச்சல், சளி, இருமல் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.
  • உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை உள்ளிருந்து சுத்தப்படுத்துகிறது.
  • சீந்தில் டீ இரத்தத்தை சுத்திகரிப்பதன் மூலம் பாக்டீரியாவை எதிர்த்து போராட உதவுகிறது.
  • வயது முதிர்வின் அறிகுறிகளை எதிர்க்கும் பண்புகள் சீந்திலில் காணப்படுகின்றன. எனவே சீந்தில் டீ குடிப்பது சரும பிரச்சனைகள் மற்றும் வயது முதிர்வின் அறிகுறிகளை குறைக்க உதவும்.
  • செரிமானம், மலச்சிக்கல் போன்ற வயிறு சார்ந்த பிரச்சனை உள்ளவர்களுக்கும் சீந்தில் டீ நன்மை தரும்.
  • சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்கவும் சீந்தில் டீ குடிக்கலாம்.

குறிப்பு : இந்த இயற்கையான மூலிகை எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இருப்பினும் உங்களுக்கு ஏதேனும் உடல்நல பிரச்சனைகள் இருந்தால் அல்லது நீங்கள் கர்ப்பமாக இருந்தால் மருத்துவரின் ஆலோசனை இன்றி சீந்தில் டீயை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

இந்த பதிவும் உதவலாம்: 2 வாரங்களில் ஃபிட் ஆக வேண்டுமா? இதோ உங்களுக்கான டயட் டிப்ஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

image source:freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP