புதிதாக வாங்கும் பை, தண்ணீர் பாட்டில், காலணி ஆகியவற்றில் நாம் ஒரு சிறிய சிலிக்கா ஜெல் பாக்கெட் பார்த்திருப்போம். அது ஏன் ? எதற்கு ? என்று தெரியாமலேயே குப்பையில் வீசி இருப்போம். அதில் சாப்பிடக் கூடாது என எழுதப்பட்டு இருக்கும். எதற்காக புதிய பொருட்களில் சிலிக்கா ஜெல் பாக்கெட் பயன்படுகிறது, எவ்வாறு இதை பயன்படுத்துவது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
சிலிக்கா ஜெல் எதற்கு ?
சிலிக்கா ஜெல் ஈரப்பதத்தை உறிஞ்சக்கூடியது. சிலிக்கா ஜெல் தானாக கெட்டுப் போகாது அதே போல பிற பொருட்கள் கெட்டுப்போவதையும் தடுக்கும். பருவமழை காலத்தில் இந்த சிலிக்கா ஜெல் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை நீங்கள் சிலிக்கா ஜெல் பாக்கெட் தூக்கிப் போட்டு இருந்தால் இனி அந்த தவறை செய்யமாட்டீர்கள்.
கிச்சனில் சிலிக்கா ஜெல் பயன்பாடு
மழைக்காலத்தில் ஈரப்பதம் காரணமாக வீட்டின் கிச்சனில் உள்ள பல பொருட்கள் பதத்து போகும். இந்த மாதிரியான நேரங்களில் பலசரக்கு பொருட்கள் இருக்கும் பாத்திரத்தில் சிலிக்கா ஜெல் பாக்கெட் போட்டு வைக்கவும். இது பலசரக்கு பொருட்களை ஈரப்பதம் ஆகாமல் தடுக்கும். பலசரக்கு பொருள் பாக்கெட் கிழிந்து இருக்க கூடாது.
நகைகள் கருக்காமல் தடுக்க
வீட்டில் தங்கம், வெள்ளி ஆபரணங்கள் இருந்தால் அதில் இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட் போட்டு வைக்கவும். இது நகைகள் கருக்காமல் பார்த்து கொள்ளும். அதே போல ஆபரணங்களும் பளபளப்பை இழக்காது.
செல்போன், வாட்ச் சரிசெய்ய
மழைக்காலத்தில் செல்போன், வாட்ச் ஆகியவை நனைந்துவிடும். மின்சாதன பொருள் என்பதால் உடனடியாக பயன்படுத்தாமல் 15 நிமிடங்களுக்கு சிலிக்கா ஜெல் சுற்றி வைக்கவும். மொத்த ஈரமும் உறிஞ்சப்படும்.
அலமாரி நறுமணம்
வீட்டில் மரத்திலான அலமாரி இருந்தால் அங்கு இந்த சிலிக்கா ஜெல் இரண்டு - மூன்று போட்டு வைக்கவும். அலமாரியில் வீசும் துர்நாற்றத்தை இது அகற்றிடும்.
மேலும் படிங்கமிச்சமான சோப் மீதியை தூக்கி போடாதீங்க; வீட்டில் வேறு விஷயங்களுக்கு பயன்படும்
மழை நேரத்தில் ஈரப்பதம் காரணமாக பேப்பர், தாழ் ஆகியவை சேதம் அடையாமல் பாதுக்காக்க இந்த சிலிக்கா ஜெல் பாக்கெட் உதவும். இதில் ஒரே முக்கிய விஷயம் இதை குழந்தைள், வீட்டில் வளர்க்கும் உயிரினங்களின் அருகே வைக்காதீர்கள். இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஜிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation