குளிர்காலம் என்பது மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டின் பருவமாகும். இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் வைட்டமின் சி நிரம்பிய பீட்ரூட்டை பல ஆரோக்கிய நன்மைகளுக்காக உட்கொள்ள வேண்டிய மிக அத்தியாவசியமாகும். நீங்கள் பீட்ரூட்டை விரும்பி சாப்பிடுபவராக இருந்தால் இந்த குளிர்காலத்தில் வீட்டிலேயே செய்து பார்க்க சில சுவையான பீட்ரூட் ரெசிபிகள் இங்கே பகிரப்பட்டுள்ளன.
குளிர்காலத்தை அல்வாவின் சீசன் என்றே அழைக்கலாம். வட இந்தியாவில் குளிர்காலத்தின் போது விதவிதமான அல்வாவை மக்கள் ருசித்து மகிழ்கிறார்கள். எனவே நீங்கள் வீட்டிலேயே பீட்ரூட் அல்வா செய்து பார்க்கலாம். இதற்கு உங்களுக்கு தேவையானது துருவிய பீட்ரூட், பால், சர்க்கரை, நெய் மற்றும் ஏலக்காய் தூள். மேலும் உலர்ந்த பழங்களை சேர்த்துக் கொள்ளலாம்.
மிகவும் சுவையான பீட்ரூட் கேக் உங்கள் மனதில் தனி இடத்தை பிடிக்கும். சாக்லேட் கேக்கைப் போலவே இந்த உணவையும் தயாரிக்க வேண்டும். அதன் சாரத்தை அடைய பீட்ரூட் தூள் அல்லது சாறு சேர்க்க வேண்டும்.
மேலும் படிங்க முட்டை இல்லாத சைவ முட்டை ரோல் !
லட்டுகளில் பல வகைகள் உள்ளன. ரவா லட்டு செய்முறையை நாம் அனைவரும் அறிந்திருப்போம். அது போலவே தான் பீட்ரூட் லட்டு செய்முறையும். ரவா லட்டு செய்யும் போது பீட்ரூட் துருவல் அல்லது பீட்ரூட் சாறு மற்றும் தேங்காயை பயன்படுத்தினால் பீட்ரூட் லட்டு ரெடி
ஹம்முஸ் என்பது பாரம்பரியமாக உப்பு நிறைந்த உணவு. எனினும் ஹம்முஸில் சிறிது இனிப்பு மற்றும் நிறைய பீட்ரூட்கள் மற்றும் ஸ்ட்ராபெர்ரிகளுடன் சேர்த்து உருவாக்கலாம். இதை பிரெட்டூடன் தொட்டு சாப்பிடலாம். இந்த உணவுக்கு பீட்ரூட், ஸ்ட்ராபெர்ரி, கொண்டைக்கடலை மற்றும் எலுமிச்சை சாறு மட்டுமே தேவை.
மேலும் படிங்க சிக்கன் காதலர்களுக்கான சூப்பர் ஆந்திரா ஸ்டைல் சிக்கன் ஃப்ரை
இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் இனிப்பு வகைகளில் பர்பியும் ஒன்று. தேங்காய் பர்பியை போலவே பீட்ரூட் பர்பி தயாரிக்கலாம். இந்த இனிப்பை செய்வதற்கு பீட்ரூட் கூழ், பால், பாலாடைக்கட்டி, நெய், ஏலக்காய் தூள், சர்க்கரை மற்றும் விருப்பமான உலர் பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
Herzindagi video
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]