Egg roll without eggs : முட்டை இல்லாத சைவ முட்டை ரோல்!

முட்டை இல்லாமல் முட்டை ரோல் செய்வது எப்படி ? 35 நிமிடங்கள் போதும்.

making of egg roll

சிக்கன் ரோல், பன்னீர் ரோல் போல் நாம் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய உணவுகளில் முட்டை ரோலும் ஒன்று. ஒரு சில நேரங்களில் நாம் முட்டை சாப்பிடுவதை தவிர்க்கிறோம். எனினும் நீங்கள் முட்டை ரோல் சாப்பிடக் கூடாது என்று அர்த்தமல்ல. இதனால் முட்டையின்றி சைவ முட்டை ரோல் எப்படி செய்வது என இந்தப் பதிவில் பார்ப்போம்.

eggs

முட்டை ரோல் செய்யத் தேவையானவை

  1. அரை கப் கடலை மாவு
  2. இரண்டு அல்லது மூன்று சப்பாத்தி
  3. ஆறு ஸ்பூன் வெண்ணெய்
  4. அரை கப் முட்டைகோஸ்
  5. அரை கப் கேரட்
  6. கால் கப் வெங்காயம்
  7. அரை கப் கொத்தமல்லி
  8. ஒரு ஸ்பூன் மிளகாய் தூள்
  9. அரை ஸ்பூன் பேக்கிங் சோடா
  10. உப்பு
  11. மிளகு
  12. இரண்டு ஸ்பூன் தக்காளி சாஸ்
  13. இரண்டு ஸ்பூன் பச்சை மிளகாய் சாஸ்
  14. எண்ணெய்

முட்டை ரோல் செய்முறை

  • முதலில் வெங்காயம், கேரட், முட்டைகோஸ், பச்சை மிளகாய் ஆகிய காய்கறிகளை தண்ணீரில் நன்கு கழுவவும்
  • வெஜிடபிள் கட்டரை பயன்படுத்தி இவை அனைத்தையும் பொடியாக நறுக்கவும்
  • ஒரு பெரிய கிண்ணத்தில் நறுக்கிய காய்கறிகளைப் போட்டு அதில் தக்காளி சாஸ் மற்றும் பச்சை மிளகாயை சாஸ் சேர்த்து நன்றாகக் கலக்கவும்
  • மற்றொரு கிண்ணத்தில் கடலை மாவு, கொத்தமல்லி, தேவையான அளவு மிளகாய் தூள், உப்பு மற்றும் மிளகு சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் பயன்படுத்தி அது தடிமனான நிலையை அடையும் வரை கிண்டவும்
  • தற்போது ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் ஊற்றவும்
  • சூட்டில் வெண்ணெய் உருகிய பிறகு கடலை மாவு கலவையைக் கடாயில் ஊற்றிச் சமமாகப் பரப்பவும்
  • தோசை போல் இருபுறமும் நன்றாக வேக வைத்துவிடுங்கள்
  • வெந்த பிறகு அடுப்பை ஆஃப் செய்துவிடுங்கள். இது தான் முட்டை இல்லாத ஆம்லெட்
  • அதே கடாயில் சப்பாத்திகளை புரட்டிப் போட்டு சூடாக்கவும். இதன் பிறகு சப்பாத்திகளின் இருபுறமும் வெண்ணெய் தடவவும்
  • தற்போது முட்டையில்லா ஆம்லெட், சாஸ் மிக்ஸிங் காய்கறிகளைச் சாப்பாத்தி மீது போட்டு ரோல் வடிவிற்கு மாற்றவும்.
  • இதனை பேனில் 30 விநாடிகளுக்குச் சூடுபடுத்தினால் சுவையான முட்டை இல்லாத முட்டை ரோல் ரெடி

இது போன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஹிந்தகியுடன் இணைந்திருங்கள்

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP