herzindagi
okra fry

Andhra Bendakaya Vepudu - சுவையான வெண்டைக்காய் வேப்புடு ரெசிபி

ஆந்திரா ஸ்பெஷல் சைவ சமையலில் நாம் அடுத்து ருசிக்க இருப்பது வெண்டைக்காய் வேப்புடு.
Editorial
Updated:- 2023-12-12, 22:01 IST

ஆந்திராவில் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெண்டைக்காய் வேப்புடு செய்முறை பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். வெண்டைக்காயுடன் வறுத்த வேர்க்கடலை சேர்த்து மிக எளிதாக 20 நிமிடங்களுக்குள் செய்யக்கூடிய ஸைட் டிஷ் என வெண்டைக்காய் வேப்புடுவை குறிப்பிடலாம். இதனைத் தயிர் சாதம், ரசம் சாதத்துடன் சாப்பிட்டால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவிற்கு ருசியாக இருக்கும்.

வெண்டைக்காய் வேப்பு செய்யத் தேவையானவை

okra plant

  1. வெண்டைக்காய் 
  2. உளுத்தம் பருப்பு
  3. வறுத்த வேர்க்கடலை 
  4. கடலெண்ணெய் 
  5. வெங்காயம் 
  6. காய்ந்த மிளகாய் 
  7. பச்சை மிளகாய் 
  8. பூண்டு 
  9. உப்பு 
  10. மஞ்சள் தூள் 
  11. மிளகாய் தூள்
  12. கொத்தமல்லி 

மேலும் படிங்க காரசாரமான ஆந்திரா அந்நியன் தக்காளி சட்னி

வெண்டைக்காய் வேப்புடு செய்முறை 

lady finger

  • சமையலை தொடங்குவதற்கு உப்பு காரமில்லாத 75 கிராம் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு 10 விநாடிகளுக்கு அரைக்கவும் 
  • வேர்க்கடலையை பொடி போல் ஆக்கி விடக் கூடாது  
  • தற்போது ஒரு கடாயில் ஆறு ஸ்பூன் கடலெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஐந்து காய்ந்த மிளகாய், ஒரு ஸ்பூன் கடுகு போடவும்
  • கடுகு பொறிந்தவுடன் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்
  • உளுத்தம் பருப்பு தங்க பழுப்பு நிறத்திற்கு மாறியவுடன் கறிவேப்பிலை போடுங்கள்
  • அடுத்ததாக இரண்டு பச்சை மிளகாயை சிறிதாக நறுக்கு கடாயில் போடவும்
  • ஒரு மீடியம் சைஸ் வெங்காயத்தை சின்ன சின்னதாக வெட்டிச் சேர்க்கவும் 
  • வெங்காயத்தை மிக அதிகமாக வறுத்திவிடக் கூடாது
  • தற்போது பத்து பூண்டுகளை தோலுரித்து கடாயில் போடவும்
  • பூண்டின் பச்சை வாடை போன பிறகு கால் கிலோ வெண்டைக்காயை சேர்க்கவும்
  • மிதமான சூட்டில் 8-10 நிமிடங்களுக்கு வெண்டைக்காயை கிண்டிக்கொண்டே வதக்கி சுருக்க வேண்டும்
  • இதனுடன் தேவையான அளவு உப்பு, கால் ஸ்பூன் மஞ்சள் தூள், ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவு கொத்தமல்லி சேர்த்திடுங்கள்

மேலும் படிங்க அருமையான கோவக்காய் சட்னி ரெசிபி

இறுதியாக அரைத்து வைத்திருக்கும் வேர்க்கடலையை முழுவதுமாகக் கடாயில் போட்டு இரண்டு நிமிடங்களுக்குக் கிண்டினால் மிகச் சுவையான ஆந்திரா வெண்டைக்காய் வேப்புடு ரெடி… 

 

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]