herzindagi
Main kc

Dondakaya Pachadi : அருமையான கோவக்காய் சட்னி ரெசிபி

குளிர்காலத்தில் கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகளில் ஆந்திரா கோவக்காய் சட்னியும் ஒன்று. அதன் செய்முறையை இந்த கட்டுரையில் பார்க்கலாம் <div>&nbsp;</div>
Editorial
Updated:- 2023-12-20, 10:51 IST

தினமும் என்ன சமைக்கலாம்னு யோசிச்சு யோசிச்சே பலருக்கு முடி கொட்டி போயிடும். குழம்பு எதுவும் வைக்கலன்னா எண்ணெய் அல்லது ரசம் ஊற்றி சாப்பிடலாம்னு முடிவு பண்ணிடுவோம். இன்னைக்கு குழம்பு வைக்கிறத பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். குளிர்காலத்தில் கட்டாயம் ருசிக்க வேண்டிய உணவுகளில் ஒன்றான கோவக்காய் சட்னியை தயாரிப்பது எப்படி என பகிர்ந்துள்ளோம்

 kc

தேவையான பொருட்கள்

  1. கோவக்காய் 
  2. தக்காளி
  3. உப்பு 
  4. பெருங்காயம் 
  5. கொத்தமல்லி 
  6. கறிவேப்பிலை 
  7. மிளகு 
  8. காய்ந்த மிளகாய் 
  9. பூண்டு 
  10. பச்சை மிளகாய் 
  11. தண்ணீர் 

மேலும் படிங்க காரசாரமான ஆந்திரா அந்நியன் தக்காளி சட்னி

ஆந்திரா கோவக்காய் சட்னி செய்முறை 

  • ஒரு வெண்கல பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு சிறிது சிறிதாக வெட்டி வைத்திருக்கும் கோவக்காய்களை போடவும்
  • மிகவும் பழுத்த கோவக்காய்களை பயன்படுத்த வேண்டாம்
  • சுமார் 7-8 நிமிடங்களுக்கு கோவக்காயை நன்கு வதக்கவும்
  • இதற்கிடையே இரண்டு மீடியம் சைஸ் தக்காளியை வெட்டி, கோவக்காய் நன்கு வதங்கியபிறகு அதனுடன் சேர்க்கவும்
  • தற்போது கோவக்காய் சட்னிக்கு தேவையான உப்பு, முக்கால் ஸ்பூன் பெருங்காயம், கை நிறைய கொத்தமல்லியை சேர்க்கவும் 
  • அனைத்தையும் நன்றாக மிக்ஸ் செய்து வாட்டவும்
  • அதன் பிறகு ஒரு பேனில் ஒன்றரை ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு பத்து சிறிய காய்ந்த மிளகாய், ஒரு கை வேர்க்கடலை, அரை ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் மிளகு, 20 பூண்டு, ஐந்து பச்சை மிளகாய், கொஞ்சம் கறிவேப்பிலை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு வாட்டவும்
  • இவற்றை மிக்ஸிக்கு மாற்றி அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்
  • மற்றொரு ஜாரில் முன்னர் வதக்கிய கோவக்காய்-தக்காளி பேஸ்ட்டை போட்டு அரைக்கும் போது அரை டம்ளர் தண்ணீர் சேர்க்கவும் 
  • தற்போது இரண்டு பேஸ்ட்டும் ரெடி 
  • அடுத்ததாக ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அது சூடான பிறகு ஒரு ஸ்பூன் கடுகு போடவும் 
  • கடுகு பொறிந்தவுடன் ஒரு ஸ்பூன் உளுந்து, தேவையான கறிவேப்பிலை சேர்த்து இரண்டு பேஸ்ட்டையும் போடுங்கள்
  • ஜார்களில் ஒட்டிக் கொண்டிருக்கும் பேஸ்ட்டை எடுக்க தலா கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு குலுக்கி அந்தத் தண்ணீரை கடாயில் ஊற்றுங்கள் 
  • சட்னி நன்கு கெட்டியாகும் வரை கொதிக்க விடுங்கள்
  • அவ்வளவு தான் சுவையான கோவக்காய் சட்னி ரெடி 
  • பொன்னி சாதம் அல்லது நெல்லூர் சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி இந்த ஆந்திரா கோவக்காய் சட்னியை தொட்டு சாப்பிடும்போது நீங்கள் மெய் மறப்பது நிச்சயம் 

மேலும் படிங்க வாசகர்களுக்கான ஸ்பெஷல் தின்பண்டம் : மொறுமொறு பன்னீர் எள் பக்கோடா

இது போன்ற ரெசிபிகளுக்கு ஹெர் ஹிந்தகியுடன் இணைந்திருங்கள்.

Herzindagi video

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். [email protected]